டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்றுக்கொள்ளலாம்: இலவசப் பயிற்சி வகுப்புகள்

எழுத்தாளர்கள் மார்க்கெட்டர்களாகவும் இருக்கவேண்டிய சூழ்நிலை இது. நம்முடைய புத்தகங்களையும் ஓர் எழுத்தாளர் என்றமுறையில் நம்முடைய Personal Brandஐயும் மக்கள் முன்னிலையில் முன்னிறுத்துவது நம் வெற்றிக்கு உதவுகிறது.

மார்க்கெட்டிங் செய்ய ஆசைதான், ஆனால், அதற்கான நுட்பங்கள் தெரியாது என்று எண்ணும் எழுத்தாளர்கள் அதை இணையத்திலேயே பயிலலாம். எடுத்துக்காட்டாக, புகழ் பெற்ற Ahrefs நிறுவனம் வழங்கும் 17 இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சிகளை இங்கு காணலாம்.

இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் மொத்தமாகப் படிக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக நேரம் உள்ளபோது படியுங்கள், வல்லுனர் ஆகுங்கள், வாழ்த்துகள்!

***

Keywords: Marketing, Marketer, Marketers, Book Marketing, Author Brand, Learn Marketing, Free Courses, Free Course, Free Training, Free Trainings, Digital Marketing, Online Marketing

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் பேட்டி

சிறந்த கதைகளுக்காகப் புகழ் பெற்ற எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களுடைய பேட்டி ஒன்றை இங்கு காணலாம். பேட்டி எடுப்பவர், எழுத்தாளர், நிகழ்ச்சி வடிவமைப்பாளர், தொகுப்பாளர் கானா பிரபா.

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களுடைய நூல்களை இங்கு வாங்கலாம்.

***

Keywords: PKP, Pattukkottai Prabakar, Pattukottai Prabakar, Pattukkottai Prabhakar, Pattukottai Prabakar, Interview, பட்டுக்கோட்டை பிரபாகர், பேட்டி, நேர்காணல்

இணையத்தில் தொடர் எழுத ஏழு நல்ல வழிகள்

தொடர்கதைகள், நாவல்களுக்கு இடையிலான வேறுபாட்டைப்பற்றிச் சமீபத்தில் பேசினோம். (அந்தக் கட்டுரையைப் படிக்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்). இப்போது, எழுத்தாளராகிய நீங்கள் இணையத்தில் தொடர்களை எழுதுவதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்று பார்ப்போம்.

இணையம் என்பது ஒரு பெரிய கடலைப்போன்றது. அங்கு தொடர்களை எழுதுவதற்கும் பல வழிகள் இருக்கின்றன. எனினும், அவற்றில் முக்கியமான, எல்லாரும் பயன்படுத்தக்கூடிய ஏழு வழிகளை இங்கு தொகுத்து அளிக்கிறோம்.

1

உங்கள் வலைப்பதிவு (blog) அல்லது சொந்த வலைத்தளத்தில் தொடர் எழுதலாம். ஒவ்வோர் அத்தியாயத்தையும் தனித்தனியாக நாள்தோறும் அல்லது வாரந்தோறும் வெளியிடலாம், வாசகர்கள் முந்தைய அத்தியாயங்களை எளிதில் படிப்பதற்கு வழி அமைத்துத் தரலாம். இதில் இன்னொரு வசதி, வாசகர்கள் கமெண்ட் (கருத்து) அளிக்கவும் வழி உண்டு.

2

உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர் எழுதலாம். இங்கும் கமெண்ட்ஸ் வசதி உண்டு. ஆனால், முந்தைய அத்தியாயங்களுக்கு இணைப்பு தருவது சற்றுச் சிரமம். அதற்கு நீங்கள் ஹேஷ்டேக் எனப்படும் முறையைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் தொடரின் பெயர் “அன்பே வா” என்று இருந்தால், #AnbeVaa #AnbeVaaSerial #அன்பேவா #அன்பேவாதொடர் என்பதுபோன்ற ஹேஷ்டேக்ஸை உங்கள் அத்தியாயங்களின் கீழ்ப்பகுதியில் அளிக்கலாம். வாசகர்கள் அதைக் க்ளிக் செய்து மற்ற அத்தியாயங்களைப் படிப்பார்கள்.

3

மின்னஞ்சலில் தொடர் எழுதலாம். இது உங்கள் வாசகர்களை நேரடியாகச் சென்று சேரும். ஆனால், இதற்குக் கொஞ்சம் கூடுதல் உழைப்பு தேவை. அதாவது, வாசகர்களுடைய மின்னஞ்சல் முகவரிகளைத் திரட்டுவது, வாசகர்கள் தாங்களே பதிவு செய்ய வழி உண்டாக்கித் தருவது, அவர்களுக்கு மின்னஞ்சல்கள் சரியாகச் சென்றுசேர்வதை உறுதிசெய்வது போன்றவை. இதற்கான வழிகளை (எடுத்துக்காட்டு: மின்னஞ்சல் குழுக்கள், Newsletters எனப்படும் மின்னஞ்சல் கடிதங்கள்) இணையத்தில் தேடிக் கற்றுக்கொள்ளுங்கள், ஒருமுறை கற்றுக்கொண்டால் பலமுறை பலன் உண்டு.

4

மின்னஞ்சலுக்குப் பதில் வாட்ஸாப், டெலக்ராம் போன்றவற்றையும் நீங்கள் தொடர் எழுதப் பயன்படுத்தலாம். அதாவது, உங்கள் தொடருக்கென்று தனிக் குழு தொடங்கலாம், அல்லது, Broadcast எனப்படும் பரப்பல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். இங்கும் உங்களுக்கு உடனுக்குடன் கருத்துகள் கிடைத்துவிடும், கதையைக் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றிச் சிறப்பாக்கலாம்.

5

இணையத்தில் Story Forums எனப்படும் கதை மன்றங்கள் பலவும் உள்ளன. இவற்றில் உங்கள் கதையை ஒவ்வோர் அத்தியாயமாக வெளியிடலாம். இந்த மன்றங்களுக்கு ஏற்கெனவே பல்லாயிரம் வாசகர்கள் இருப்பார்கள் என்பதால், உங்கள் தொடர் எளிதில் அவர்களுக்குச் சென்று சேரும். இந்த மன்றங்கள் கருத்து தெரிவித்தல், பிறரிடம் பகிர்ந்துகொள்ளுதல் போன்றவற்றுக்கும் வசதி உண்டாக்கித் தருவார்கள் என்பதால், நீங்கள் தொழில்நுட்பத்தைப்பற்றிக் கவலைப்படாமல் எழுத்தில் கவனம் செலுத்தலாம்.

6

உங்கள் தொடர் எழுத்து வடிவத்தில்தான் வெளியாகவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. இணையத்தின் தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்திக்கொண்டு வீடியோ, ஆடியோ (ஒலிப் பதிவு) போன்ற வழிகளிலும் உங்கள் தொடரை வெளியிடலாம். இதற்குக் கொஞ்சம் கூடுதல் உழைப்பு (எடுத்துக்காட்டாக, தொடர் அத்தியாயங்களைப் படித்து ஒலிப் பதிவு செய்தல், வீடியோ உருவாக்குதல் போன்றவை) தேவைப்படும். ஆனால், எழுத்து வடிவத் தொடர்களை நெருங்காத பல புதிய வாசகர்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள்.

இந்த வடிவத்தில் மக்கள் கதைகளைப் படிப்பார்களா என்று ஐயமாக உள்ளதா? இங்கு க்ளிக் செய்து Audible இணையத் தளத்தில் உள்ள கதைகளின் பட்டியலைப் பாருங்கள், நம்பிக்கை வந்துவிடும். ஒலிப் புத்தகங்கள் வெற்றியடையும்போது ஒலித் தொடர்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும்.

7

ஒவ்வோர் அத்தியாயத்தையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் Facebook Live போன்ற ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நேரடியாக ஒளிபரப்பலாம். அதை உங்களுடைய சமூக வலைப்பக்கங்களில் அறிவித்து மக்களுடைய ஆதரவைத் திரட்டலாம். இந்த முறையின் மிகப் பெரிய நன்மை, உங்கள் தொடருக்கான கருத்துகள் உடனுக்குடன் கிடைக்கும்.

இதுபோல் உங்கள் மனத்தில் உள்ள தொடர் யோசனைகளை Comments பகுதியில் எழுதுங்கள். அவை எல்லா எழுத்தாளர்களுக்கும் பயன்படும். சேர்ந்து கற்றுக்கொள்வோம், உங்கள் தொடருக்கு வாழ்த்துகள்.

***

Keywords: Novels, Novel, Serials, Serial, Series, Story Series, Cliffhanger, Facebook, YouTube, Podcasts, Video Serials, Audio Serials, Audio Episodes, Video Episodes, Podcast, Audio Episode, Video Episode, Video Serial, Audio Serial, Facebook, Facebook Live, Email Groups, WhatsApp Groups, Telegram Groups, Forums, Chapters, Chapter, Episodes, Episode

பயிற்சிகளின்மூலம் எழுதக் கற்றுக்கொள்ள இயலுமா? எழுத்தாளர் பா. ராகவன் பேட்டி

இதே தலைப்பில் இன்னும் சில முக்கியமான பதிவுகள்:

***

Keywords: Writing, Writers, Writer, Authors, Author, Art of writing, Writing classes, Writing Class, Writing Workshops, Writing Workshop, Courses, Course, Writing Courses, Writing Course, Pa. Raghavan, Pa. Ragavan, Learn to write, Learn Writing

யூட்யூபில் எழுத்தாளர்கள்: 10 வெற்றி வழிகள்

நீங்கள் யூட்யூபில் இருக்கிறீர்களா?

நான் எழுத்தாளர், எனக்கு யூட்யூபில் என்ன வேலை என்று சிந்திக்கவேண்டாம். எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்பை வாசகர்களிடம் கொண்டுசெல்கிறவர்களாகவும் இருக்கவேண்டிய இந்த மார்க்கெட்டிங் உலகத்தில் யூட்யூப் என்னும் உலகின் மிகச் சிறந்த மார்க்கெட்டிங் கருவியை எழுத்தாளர்களும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும், வீடியோக்களின்மூலம் தங்கள் வாசகர்களை இன்னும் நெருக்கமாக அணுகவேண்டும்.

பெரும்பாலான யூட்யூப் வீடியோக்கள் இலவசம்தான். ஆனால், எழுத்தாளர்கள் சொந்தமாகச் சானல் வைத்து அதற்குச் சந்தாக் கட்டணம் வசூலிக்கிற வாய்ப்பும் இருக்கிறது. ஒருவேளை அந்தச் சாத்தியத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளாவிட்டாலும், இலவச வீடியோக்களே உங்களுக்கு ஒரு நல்ல மார்க்கெட்டிங் கருவியாகச் செயல்படும், வாசகர்களை உங்கள் பக்கத்துக்கு அழைத்துவரும்.

யூட்யூபில் எழுத்தாளர்கள் என்ன செய்யலாம்?

இதற்கு ஏராளமான யோசனைகள் உள்ளன. அதில் முதன்மையான பத்து யோசனைகளை இங்கு பார்ப்போம்:

 1. உங்களுடைய புத்தகங்களைப்பற்றிய சிறு அறிமுகக் குறிப்புகளை நீங்களே பேசி வெளியிடலாம். அல்லது, உங்கள் நூல்களைப் படித்த வாசகர்களைப் பேசவைத்து வெளியிடலாம்.
 2. உங்கள் புத்தகங்களிலிருந்து ஒரு சிறு பகுதியை அல்லது உங்களுடைய கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளை நீங்களே படித்து வெளியிடலாம், ஒலிப் புத்தகம்போல் இது வீடியோ புத்தகம். அதற்குப் பல வாசகர்கள் உள்ளார்கள்
 3. உங்களுடைய பேட்டிகளை வெளியிடலாம்.
 4. எழுதுவதுபற்றிய சிறு குறிப்புகளை நீங்கள் உங்கள் வாசகர்களுக்கு வழங்கலாம்.
 5. நீங்கள் அடுத்து எழுதும் புத்தகத்தைப்பற்றிய அறிமுகத்தைக் கொடுத்து ஆர்வத்தைத் தூண்டலாம்.
 6. உங்களுடைய இயல்பு வாழ்க்கையில் நடக்கிய விஷயங்களை உங்கள் கருத்துகளுடன் பதிவு செய்யலாம்.
 7. நீங்கள் எழுதும் அறையை, அல்லது, எழுதுகிற முறையை வீடியோவாக வழங்கலாம்.
 8. வாசகர்களுடைய கேள்விகளுக்கு வீடியோவில் பதில் அளிக்கலாம்.
 9. உங்கள் புத்தகங்களுடன் தொடர்புடைய கூடுதல் தகவல்களை (Extra Materials) வீடியோ வடிவில் வழங்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு நாவல் இடம்பெறுகிற இடத்திலிருந்து நீங்கள் பேசலாம், அது நாவலைப் படித்தவர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.
 10. நீங்கள் எந்தத் துறைபற்றி எழுதுகிறீர்களோ, அதில் சிறிய, பெரிய பாடங்களை/வகுப்புகளை யூட்யூப் லைவ் ஸ்ட்ரீமிங் வழியாக நடத்தலாம், அவற்றை நிரந்தரப் பதிவுகளாக யூட்யூபில் வைக்கலாம்.

இப்படி இன்னும் பல வழிகள் உள்ளன. எதுவானாலும் தரமாகச் செய்தால் வாசகர்கள் விரும்புவார்கள், உங்களைக் கொண்டாடுவார்கள்.

இப்படி உங்களுக்குத் தெரிந்த, நீங்கள் பயன்படுத்துகிற, விரும்புகிற வீடியோ வழிகளைக் கமென்ட்ஸ் பகுதியில் சொல்லுங்கள். அனைவரும் சேர்ந்து கற்றுக்கொள்வோம்.

***

Keywords: Authors, Author, Writers, Writer, Writing, Author Brand, Writer Brand, Video, Marketing, Video Marketing, Book Marketing, Books, Book, YouTube, Vimeo, YouTube Live Streaming, Live Stream, Live Streaming

QR கோட் : எழுத்தாளர்களுக்கு எதற்கு?

QR Code எனப்படும் சதுர வடிவக் குறியீட்டைப் பல இடங்களில் பார்த்திருப்பீர்கள். அவற்றை செல்ஃபோன் கொண்டு ஸ்கேன் செய்தால் ஓர் இணையத் தளத்துக்குச் செல்லலாம், அல்லது, வேறு பல விஷயங்களைச் செய்யலாம். பயன்படுத்துவோருக்கும் எளிது, பதிப்பிப்போருக்கும் எளிது என்பதால் இவை மிக நல்ல வரவேற்பைப் பெற்றுவருகின்றன.

பல துறையினரும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிற இந்தக் க்யூஆர் கோட் தொழில்நுட்பத்தை எழுத்தாளர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கான சில வழிகள், எடுத்துக்காட்டுகள், இதோ:

 • உங்கள் புத்தகங்களில் உள்ள இணையத் தள முகவரிகள் அனைத்துக்கும் QR Code வழங்கலாம். வாசகர்கள் அந்த இணையத் தளத்தின் முகவரியைத் தட்டச்சு செய்வதைவிட, ஒரே ஸ்கேனில் அங்கு சென்று கூடுதல் தகவல்களைப் பெறலாம். தட்டச்சு செய்வதில் வரக்கூடிய பிழைகளும் இதில் இருக்காது என்பது கூடுதல் போனஸ்.
 • உங்களுடைய மற்ற புத்தகங்களுக்கான இணைப்புகளை QR Codeமூலம் வழங்கலாம். உங்களுடைய ஒரு புத்தகத்தை வாங்கியவர் மற்றவற்றை வாங்கிப் படிக்க இது உதவும்.
 • புத்தகம் தொடர்பான கணக்கெடுப்புகள் (Surveys) போன்றவற்றை QR Codeமூலம் வழங்கலாம். வாசகர் கருத்துகளைப் பெறுவதற்கு இது மிகவும் உதவும், வாசகர் நாடித்துடிப்பைப் புரியவைக்கும்.
 • புத்தகத்தில் உள்ள கருப்பு வெள்ளைப் படங்களை வண்ணத்தில் முழுத் தரத்தில் (HD) பார்ப்பதற்கான இணைப்புகளை QR Codeல் அளிக்கலாம்.
 • புத்தகத்தில் பேசப்படும் விஷயங்களுடன் தொடர்புடைய வீடியோக்களை QR Codeமூலம் இணைக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு பேட்டி அல்லது ஓர் ஆவணப்படத்தை இந்த முறையில் வாசகர் பார்த்து மகிழலாம்.
 • ஆசிரியருடைய ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களுக்கு QR Codeமூலம் இணைப்பு வழங்கலாம்.
 • உங்கள் புத்தகத்தை வாங்குவோருக்குக் கூடுதல் சிறப்புப் பரிசு வழங்க விரும்பினால், அதையும் QR Codeமூலம் வழங்கலாம். எடுத்துக்காட்டாக, நாவல் வாங்குவோருக்கு அந்த நாவலின் பின்னணியை விளக்கும் ஒரு சிறுகதையையோ, அந்த நாவலின் களத்துக்கான வரைபடத்தையோ QR Codeமூலம் இணைக்கலாம். ஆங்கிலம் கற்றுக்கொள்வது எப்படி என்னும் புத்தகத்துக்கான பரிசு, அதில் வரும் வாக்கியங்களை ஒலி வடிவில் கேட்பதற்கான QR Code இணைப்பாக இருக்கலாம்.
 • சிறுவர் நூல் எழுதுவோர் அதனுடன் அனிமேஷன், பாடல்கள் போன்றவற்றை QR Codeமூலம் சேர்க்கலாம். குழந்தைகள் இதை மிகவும் விரும்புவார்கள்.
 • வாசகர்கள் தங்கள் கருத்துகளை எழுத்தாளருடன் நேரடியாகப் பகிர்ந்துகொள்வதற்கான மின்னஞ்சல் QR Codeஐப் புத்தகத்துக்குள் தொடக்கத்தில் அல்லது பின்பகுதியில் அல்லது இரண்டு இடங்களிலும் வழங்கலாம்.
 • அச்சுப் புத்தகத்தில் மின் புத்தகத்தின் QR Code, மின் புத்தகத்தில் அச்சுப் புத்தகத்தின் QR Code என்று Cross-promotion செய்யலாம்.
 • நூல் தொடர்பான Facebook, Instagram, Twitter, Pinterest விளம்பரப் படங்கள், YouTube வீடியோக்கள், பிற மார்க்கெட்டிங் விஷயங்களில் நூலுக்கான இணைப்பை QR Codeமூலம் வழங்கலாம்.

இவையெல்லாம் சிறு எடுத்துக்காட்டுகள்தான். உண்மையில் QR Code மூலம் நீங்கள் இன்னும் பல சிறப்பான விஷயங்களைச் செய்யலாம், அச்சுப் புத்தகம், மின்புத்தகம் என இரண்டிலும் இது பயன்படும். உங்கள் சிந்தனை, படைப்பாற்றலுக்குத் தீனி போடும் தொழில்நுட்பம் இது.

ஆனால், QR Codeஐ உருவாக்குவது எப்படி?

அதற்குப் பல எளிமையான இணையத் தளங்கள் இருக்கின்றன, இவற்றில் பெரும்பாலானவை இலவசம்தான். எடுத்துக்காட்டாக, உங்களுடைய புத்தகத்துக்குத் தேவையான QR Codeகளைச் சில நொடிகளில் உருவாக்குவதற்கு இங்கு க்ளிக் செய்யுங்கள்.

Keywords: QR Code, QR Codes, QRCode, QRCodes, Scan, Marketing, Books, Book, Authors, Writers, Author Brand, Writer Brand

Udemy இணையத் தளத்தில் எழுத்துப் பயிற்சி வகுப்புகள் தள்ளுபடி விலையில்

இணையம் வழியாகப் பலவிதமான திறன்களைக் கற்றுத்தரும் புகழ்பெற்ற Udemy இணையத் தளம் இப்போது ஒரு தள்ளுபடிச் சலுகையை அறிவித்துள்ளது. இதில் ஏராளமான பயிற்சி வகுப்புகளை மிகப் பெரிய தள்ளுபடியில், அதாவது, தலா ரூ 385 விலைக்குப் பெறலாம். இப்போது வாங்கிவிட்டால் பிறகு எப்போது வேண்டுமானாலும் அதைப் படிக்கலாம், கற்றுக்கொள்ளலாம்.

இந்த இணையத் தளத்தில் பல எழுத்துப் பயிற்சி வகுப்புகளும் உள்ளன. அவற்றைக் காண, இங்கு க்ளிக் செய்யுங்கள், உங்களுக்குப் பிடித்த பயிற்சி வகுப்புகளில் சிறு முதலீடு செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Keywords: Writing, Authors, Writers, Courses, Writing Courses, Discount, Udemy, Offer, Deal, Deals, Online Learning, Online Training

உங்கள் கவிதைகளை அழகுற வடிவமைத்து விற்கலாம்

கதை, கவிதை, கட்டுரை எழுதுகிறவர்கள் அதைப் பத்திரிகைகளுக்கு அனுப்புவார்கள். அல்லது, தங்களுடைய சொந்த வலைத் தளத்தில், சமூக ஊடகத் தளங்களில், வாட்ஸாப்பில் பதிவுசெய்வார்கள். அதை ரசிகர்கள் படித்துப் பாராட்டுவார்கள். இதுதான் உலக வழக்கம்.

ஆனால் இப்போது, Etsy Printables என்ற தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்திக் கவிதைகளை நேரடியாக அச்சிடக்கூடிய PDF வடிவில் விற்கிறார்கள். மக்கள் இதைக் காசு கொடுத்து வாங்கி அச்சிட்டு மாட்டிக்கொள்ளலாமாம். 8 வரிக் கவிதைகளெல்லாம் ஏழெட்டு டாலருக்கு விற்கின்றன.

நம்பமுடியவில்லையா? இங்கு க்ளிக் செய்து பாருங்கள்!

ஆனால், இந்தக் கவிதைகளெல்லாம் ஆங்கிலத்தில்தான் உள்ளன. தமிழ்க் கவிஞர்களும் இந்தச் சந்தைக்குள் நுழைந்து பார்க்கவேண்டும். வருவாய்க்கு வருவாயும் கிடைக்கும், அந்தக் கவிதை பல இடங்களில் மாட்டப்பட்டு அதைப் பலர் பார்ப்பதால் ரசிகர்கள் மத்தியில் புகழும் பெறலாம்.

PDF புத்தகங்களால் எழுத்துக்கு ஆபத்து வருகிற நேரத்தில், அதே PDFஆல் எழுத்தாளர்களுக்கு வருவாயும் சாத்தியம்தான்போல.

நகைச்சுவைக்குச் சொல்லவில்லை, உண்மையில் முயலவேண்டிய வழிதான் இது! வெவ்வேறு வகைகளில் எழுத்தாளர்கள் தங்களுடைய வருவாய் வழிகளைத் தேடுகிற வாய்ப்பை இன்றைய தொழில்நுட்பம் வழங்குகிறது, அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

‘ஆனால், எனக்கு இதெல்லாம் தெரியாதே’ என்கிறீர்களா? கவலை வேண்டாம். இணையத்தில் இதைக் கற்றுத்தரும் பல கட்டுரைகள், வீடியோக்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, Etsy இணையத் தளத்தில் இந்த Printablesஐ எப்படி உருவாக்குவது என்று இந்த வீடியோ கற்றுத்தருகிறது.

முயன்று பாருங்கள். இதன்மூலம் உங்கள் கவிதை ஒரு பெருமை மிக்க இடத்தில் மாட்டப்பட்டால் மகிழ்ச்சிதான்!

Keywords: Poets, Poet, Poems, Poetry, Poem, Etsy, Printables, Printable, Printable Poetry, Printable Poem, Printable Poems, Printable Poetries, Learn to create Printables, Printables Business