Nonfiction Book Proposal எழுதுவது எப்படி?

நான்ஃபிக்‌ஷன், அதாவது, புனைவல்லாத நூல்களைப் பதிப்பகங்களுக்கு அறிமுகப்படுத்தும் Book Proposalகளை எழுதுவது எப்படி? கற்றுத்தருகிறார் Reedsy இணையத் தளத்தின் நிறுவனரான இம்மானுவேல் நடாஃப். ஐந்து எளிய, தெளிவான படிநிலைகளைக் கொண்ட இந்த ஆங்கிலக் கட்டுரையை இங்கு க்ளிக் செய்து படிக்கலாம்.

இவருடைய Reedsy இணையத் தளம் வழங்கும் எழுத்தாளர்களுக்கான 19 இலவசப் பயிற்சி வகுப்புகளைப்பற்றி அறிய, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

***

Keywords: Books, Book Proposals, Nonfiction, Non Fiction, Non-fiction, புனைவல்லாத நூல்கள், புனைவல்லாத நூல், அபுனைவு நூல், அபுனைவு, அபுனைவுகள், புனைவல்லாதவை

மொழி சார்ந்த பணிகளுக்கு முக்கியத்துவம் தரும் “அருஞ்சொல்” தளம்

புகழ் பெற்ற எழுத்தாளர் சமஸ் தொடங்கியிருக்கும் “அருஞ்சொல்” தளம் செய்திகளின் அடிப்படையில் கருத்துகளை விவாதிக்கும் தளமாகத் தொடங்கப்பட்டிருக்கிறது. அதுபற்றிச் சமஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு விஷயம் நம் கவனத்தை ஈர்க்கிறது:

பல்வேறு தரப்பினருக்கும் மொழி சார்ந்து அயல்பணி முறையில் பிரதியை செப்பனிட்டுத் தரும் ‘அருஞ்சொல் எடிட்’

தமிழில் எடிட்டிங் எனப்படும் மொழிச் செப்பனிடுதலுக்குத் தேவையான முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்பதுதான் உண்மை. அதனால் தமிழில் பிழை மலிந்த எழுத்துகளும் நிறைந்திருக்கின்றன. இந்நிலையில் சமஸ் போன்ற எழுத்தாளர்கள் இதற்கு முக்கியத்துவம் தந்து தனிச் சேவை ஒன்றைத் தொடங்குவது இந்த முக்கியப் பணிக்குப் பெரும் ஆதரவாக இருக்கும், பிழை இல்லாத நல்ல எழுத்துக்கு வரவேற்பைக் கொண்டுவரும்.

ஒவ்வொருவரும் தங்கள் எழுத்தைப் பிழையின்றி எழுத முயல்வதுதான் சரி. அதற்கு வாய்ப்பு அல்லது அதற்கேற்ற திறமை இல்லாதபோது, உரிய திறமையாளர்களுடைய சேவையைப் பயன்படுத்திக்கொண்டு திருத்தி வெளியிடவேண்டும். நம் எழுத்து பிழையின்றி இருப்பதுதான் நமக்குப் பெருமை என்ற உணர்வு வரவேண்டும்.

***

நம் “எழுதுவோம்” தளமும் தேவையுள்ள எழுத்தாளர்களுக்குத் தொழில்முறை எடிட்டிங் சேவையை வழங்குகிறது. உங்கள் நூல்களை பிழையின்றி எடிட்டிங் செய்து தர, எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்: ezhudhuvom@gmail.com

***

தொடர்புடைய நூல்கள்:

***

Keywords: Tamil, Thamizh, Tamizh, Thamil, Ilakkanam, இலக்கணம், பிழை, பிழையின்றி, பிழையின்றி எழுதுதல், பிழை திருத்தல், பிழைத் திருத்தல், பிழை திருத்தம், பிழைத் திருத்தம், பிழைத்திருத்தம், பிழைதிருத்தம், பிழைதிருத்தல், பிழைத்திருத்தல், நல்ல தமிழ், நல்ல தமிழ் எழுதுவோம், எடிட்டிங், எடிட், எடிட்டர், Editing, Editor, Professional Editing, Freelance Editing, Freelance Editor, Freelance Editors, Editors

இணையத்தில் தொடர் எழுத ஏழு நல்ல வழிகள்

தொடர்கதைகள், நாவல்களுக்கு இடையிலான வேறுபாட்டைப்பற்றிச் சமீபத்தில் பேசினோம். (அந்தக் கட்டுரையைப் படிக்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்). இப்போது, எழுத்தாளராகிய நீங்கள் இணையத்தில் தொடர்களை எழுதுவதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்று பார்ப்போம்.

இணையம் என்பது ஒரு பெரிய கடலைப்போன்றது. அங்கு தொடர்களை எழுதுவதற்கும் பல வழிகள் இருக்கின்றன. எனினும், அவற்றில் முக்கியமான, எல்லாரும் பயன்படுத்தக்கூடிய ஏழு வழிகளை இங்கு தொகுத்து அளிக்கிறோம்.

1

உங்கள் வலைப்பதிவு (blog) அல்லது சொந்த வலைத்தளத்தில் தொடர் எழுதலாம். ஒவ்வோர் அத்தியாயத்தையும் தனித்தனியாக நாள்தோறும் அல்லது வாரந்தோறும் வெளியிடலாம், வாசகர்கள் முந்தைய அத்தியாயங்களை எளிதில் படிப்பதற்கு வழி அமைத்துத் தரலாம். இதில் இன்னொரு வசதி, வாசகர்கள் கமெண்ட் (கருத்து) அளிக்கவும் வழி உண்டு.

2

உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர் எழுதலாம். இங்கும் கமெண்ட்ஸ் வசதி உண்டு. ஆனால், முந்தைய அத்தியாயங்களுக்கு இணைப்பு தருவது சற்றுச் சிரமம். அதற்கு நீங்கள் ஹேஷ்டேக் எனப்படும் முறையைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் தொடரின் பெயர் “அன்பே வா” என்று இருந்தால், #AnbeVaa #AnbeVaaSerial #அன்பேவா #அன்பேவாதொடர் என்பதுபோன்ற ஹேஷ்டேக்ஸை உங்கள் அத்தியாயங்களின் கீழ்ப்பகுதியில் அளிக்கலாம். வாசகர்கள் அதைக் க்ளிக் செய்து மற்ற அத்தியாயங்களைப் படிப்பார்கள்.

3

மின்னஞ்சலில் தொடர் எழுதலாம். இது உங்கள் வாசகர்களை நேரடியாகச் சென்று சேரும். ஆனால், இதற்குக் கொஞ்சம் கூடுதல் உழைப்பு தேவை. அதாவது, வாசகர்களுடைய மின்னஞ்சல் முகவரிகளைத் திரட்டுவது, வாசகர்கள் தாங்களே பதிவு செய்ய வழி உண்டாக்கித் தருவது, அவர்களுக்கு மின்னஞ்சல்கள் சரியாகச் சென்றுசேர்வதை உறுதிசெய்வது போன்றவை. இதற்கான வழிகளை (எடுத்துக்காட்டு: மின்னஞ்சல் குழுக்கள், Newsletters எனப்படும் மின்னஞ்சல் கடிதங்கள்) இணையத்தில் தேடிக் கற்றுக்கொள்ளுங்கள், ஒருமுறை கற்றுக்கொண்டால் பலமுறை பலன் உண்டு.

4

மின்னஞ்சலுக்குப் பதில் வாட்ஸாப், டெலக்ராம் போன்றவற்றையும் நீங்கள் தொடர் எழுதப் பயன்படுத்தலாம். அதாவது, உங்கள் தொடருக்கென்று தனிக் குழு தொடங்கலாம், அல்லது, Broadcast எனப்படும் பரப்பல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். இங்கும் உங்களுக்கு உடனுக்குடன் கருத்துகள் கிடைத்துவிடும், கதையைக் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றிச் சிறப்பாக்கலாம்.

5

இணையத்தில் Story Forums எனப்படும் கதை மன்றங்கள் பலவும் உள்ளன. இவற்றில் உங்கள் கதையை ஒவ்வோர் அத்தியாயமாக வெளியிடலாம். இந்த மன்றங்களுக்கு ஏற்கெனவே பல்லாயிரம் வாசகர்கள் இருப்பார்கள் என்பதால், உங்கள் தொடர் எளிதில் அவர்களுக்குச் சென்று சேரும். இந்த மன்றங்கள் கருத்து தெரிவித்தல், பிறரிடம் பகிர்ந்துகொள்ளுதல் போன்றவற்றுக்கும் வசதி உண்டாக்கித் தருவார்கள் என்பதால், நீங்கள் தொழில்நுட்பத்தைப்பற்றிக் கவலைப்படாமல் எழுத்தில் கவனம் செலுத்தலாம்.

6

உங்கள் தொடர் எழுத்து வடிவத்தில்தான் வெளியாகவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. இணையத்தின் தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்திக்கொண்டு வீடியோ, ஆடியோ (ஒலிப் பதிவு) போன்ற வழிகளிலும் உங்கள் தொடரை வெளியிடலாம். இதற்குக் கொஞ்சம் கூடுதல் உழைப்பு (எடுத்துக்காட்டாக, தொடர் அத்தியாயங்களைப் படித்து ஒலிப் பதிவு செய்தல், வீடியோ உருவாக்குதல் போன்றவை) தேவைப்படும். ஆனால், எழுத்து வடிவத் தொடர்களை நெருங்காத பல புதிய வாசகர்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள்.

இந்த வடிவத்தில் மக்கள் கதைகளைப் படிப்பார்களா என்று ஐயமாக உள்ளதா? இங்கு க்ளிக் செய்து Audible இணையத் தளத்தில் உள்ள கதைகளின் பட்டியலைப் பாருங்கள், நம்பிக்கை வந்துவிடும். ஒலிப் புத்தகங்கள் வெற்றியடையும்போது ஒலித் தொடர்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும்.

7

ஒவ்வோர் அத்தியாயத்தையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் Facebook Live போன்ற ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நேரடியாக ஒளிபரப்பலாம். அதை உங்களுடைய சமூக வலைப்பக்கங்களில் அறிவித்து மக்களுடைய ஆதரவைத் திரட்டலாம். இந்த முறையின் மிகப் பெரிய நன்மை, உங்கள் தொடருக்கான கருத்துகள் உடனுக்குடன் கிடைக்கும்.

இதுபோல் உங்கள் மனத்தில் உள்ள தொடர் யோசனைகளை Comments பகுதியில் எழுதுங்கள். அவை எல்லா எழுத்தாளர்களுக்கும் பயன்படும். சேர்ந்து கற்றுக்கொள்வோம், உங்கள் தொடருக்கு வாழ்த்துகள்.

***

Keywords: Novels, Novel, Serials, Serial, Series, Story Series, Cliffhanger, Facebook, YouTube, Podcasts, Video Serials, Audio Serials, Audio Episodes, Video Episodes, Podcast, Audio Episode, Video Episode, Video Serial, Audio Serial, Facebook, Facebook Live, Email Groups, WhatsApp Groups, Telegram Groups, Forums, Chapters, Chapter, Episodes, Episode

உங்கள் புத்தகங்களுக்குச் சிறந்த அட்டைப்படங்களை உருவாக்க உதவும் புதிய தளம் Coverjig

உங்களுடைய புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டுசேர்க்கின்ற முதல் கருவிகளில் ஒன்று, நல்ல அட்டைப்படம். அதைமட்டும் வைத்து யாரும் வாங்குவதில்லை என்றாலும், பல நூல்களில் எதைத் தேர்ந்தெடுக்கலாம் என்று வாசகர்கள் தீர்மானிக்க அதுவும் உதவுகிறது.

நல்ல அட்டைப்படத்தை வடிவமைப்பதற்கு நீங்கள் ஒரு வடிவமைப்பாளருடன் (Designer) பணியாற்றவேண்டியிருக்கும். அல்லது, இதற்கென்று உள்ள இணைய மென்பொருள்களைப் பயன்படுத்தி எளிதில் அட்டைப்படம் வடிவமைக்கலாம்.

அவ்வகையில் இணையத்தில் அறிமுகமாகியுள்ள புதிய தளம், Coverjig. யார் வேண்டுமானாலும் சில க்ளிக்குகளில் உங்கள் புத்தகத்துக்கான அழகான அட்டையை இங்கு வடிவமைத்துவிடலாம். இது உண்மையில் வணிகத் தளம்தான் என்றாலும், இப்போதைக்குத் தங்கள் சேவையை இலவசமாக வழங்குகிறார்கள், பயன்படுத்திப் பாருங்கள்.

ஆனால் ஒன்று, மற்ற பல தளங்களைப்போல் இந்தத் தளம் ஆங்கிலத்தில்தான் வேலை செய்கிறது. தமிழில் அட்டை வடிவமைத்தாலும் பின்னர் Export செய்யும்போது அது வெறும் பெட்டியாகதான் வருகிறது. இந்தப் பிழையை Coverjig குழுவினருக்குச் சொல்லுங்கள், அவர்களுடைய மென்பொருளில் தமிழுக்கும் ஆதரவு வேண்டும் என்று கேளுங்கள். அதற்கு நீங்கள் இங்கு க்ளிக் செய்யவேண்டும்.

Coverjig இணையத் தளத்தைப் பயன்படுத்தி இலவசமாகவும் எளிதாகவும் அட்டை வடிவமைக்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

உங்கள் நூல்களின் வடிவமைப்புப் பணிகளுக்கு உதவக்கூடிய இன்னொரு தளத்தைப்பற்றி இங்கு எழுதியுள்ளோம்: உங்கள் நூல்கள், இணையத் தளத்தை அழகுபடுத்த உதவும் Creative Fabrica இணையத் தளம்

***

Keywords: Book Wrapper, Book Cover, Wrappers, Wrapper, Wrapper Design, Cover Design, Designer, Coverjig

உங்கள் புத்தகத்தை நன்கு மார்க்கெட்டிங் செய்து விற்பனை செய்வது எப்படி: கற்றுத்தருகிறார் எழுத்தாளர் நிக் ஸ்டீஃபன்சன்

புத்தக எழுத்தைப்போல் மார்க்கெட்டிங் என்பதும் ஒரு முக்கியமான நுட்பம். இதன்மூலம் உங்கள் நூல் இன்னும் பலருக்கு எளிதில் சென்று சேர்வதற்கான வாய்ப்பு அமையும். இதைச் சரியாகச் செய்தால், எழுத்தாளர்களுக்கான மாத வருமான வழி ஒன்று தானாக உருவாகிவிடும்.

ஆனால், பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இந்த மார்க்கெட்டிங் நுட்பங்கள் தெரிந்திருப்பதில்லை. இது கடினம்தான், ஆனால், கற்றுக்கொண்டுவிட்டால் எளிதாகிவிடும்.

அவ்வகையில், புகழ் பெற்ற எழுத்தாளர் நிக் ஸ்டீஃபன்சன் வரும் அக்டோபர் 7 அன்று “$0 to $1K a Month in Book Sales” என்ற தலைப்பில் இலவசப் பயிற்சி வகுப்பு ஒன்றை நடத்துகிறார். ஆர்வமுள்ளவர்கள் அதில் கலந்துகொண்டு கற்றுக்கொள்ளுங்கள், சந்தைப்படுத்தலை வலுவாக்கி உங்கள் விற்பனையைப் பெருக்குங்கள்.

நிக் ஸ்டீஃபன்சன் அவர்கள் நடத்தும் இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

நிக் ஸ்டீஃபன்சன் அவர்களுடைய புத்தகங்களைக் காண, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

***

Keywords: Writing, Writers, Writer, Authors, Author, Publishing, Editing, Courses, Course, Writing Courses, Writing Course, Free Writing Courses, Editing Courses, Publishing Courses, Learn to Write, Writing Workshops, Writing Workshop, Marketing, Promotion, Publicity, Promoting Books, Selling Books, Sales

பயிற்சிகளின்மூலம் எழுதக் கற்றுக்கொள்ள இயலுமா? எழுத்தாளர் பா. ராகவன் பேட்டி

இதே தலைப்பில் இன்னும் சில முக்கியமான பதிவுகள்:

***

Keywords: Writing, Writers, Writer, Authors, Author, Art of writing, Writing classes, Writing Class, Writing Workshops, Writing Workshop, Courses, Course, Writing Courses, Writing Course, Pa. Raghavan, Pa. Ragavan, Learn to write, Learn Writing

யூட்யூபில் எழுத்தாளர்கள்: 10 வெற்றி வழிகள்

நீங்கள் யூட்யூபில் இருக்கிறீர்களா?

நான் எழுத்தாளர், எனக்கு யூட்யூபில் என்ன வேலை என்று சிந்திக்கவேண்டாம். எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்பை வாசகர்களிடம் கொண்டுசெல்கிறவர்களாகவும் இருக்கவேண்டிய இந்த மார்க்கெட்டிங் உலகத்தில் யூட்யூப் என்னும் உலகின் மிகச் சிறந்த மார்க்கெட்டிங் கருவியை எழுத்தாளர்களும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும், வீடியோக்களின்மூலம் தங்கள் வாசகர்களை இன்னும் நெருக்கமாக அணுகவேண்டும்.

பெரும்பாலான யூட்யூப் வீடியோக்கள் இலவசம்தான். ஆனால், எழுத்தாளர்கள் சொந்தமாகச் சானல் வைத்து அதற்குச் சந்தாக் கட்டணம் வசூலிக்கிற வாய்ப்பும் இருக்கிறது. ஒருவேளை அந்தச் சாத்தியத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளாவிட்டாலும், இலவச வீடியோக்களே உங்களுக்கு ஒரு நல்ல மார்க்கெட்டிங் கருவியாகச் செயல்படும், வாசகர்களை உங்கள் பக்கத்துக்கு அழைத்துவரும்.

யூட்யூபில் எழுத்தாளர்கள் என்ன செய்யலாம்?

இதற்கு ஏராளமான யோசனைகள் உள்ளன. அதில் முதன்மையான பத்து யோசனைகளை இங்கு பார்ப்போம்:

 1. உங்களுடைய புத்தகங்களைப்பற்றிய சிறு அறிமுகக் குறிப்புகளை நீங்களே பேசி வெளியிடலாம். அல்லது, உங்கள் நூல்களைப் படித்த வாசகர்களைப் பேசவைத்து வெளியிடலாம்.
 2. உங்கள் புத்தகங்களிலிருந்து ஒரு சிறு பகுதியை அல்லது உங்களுடைய கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளை நீங்களே படித்து வெளியிடலாம், ஒலிப் புத்தகம்போல் இது வீடியோ புத்தகம். அதற்குப் பல வாசகர்கள் உள்ளார்கள்
 3. உங்களுடைய பேட்டிகளை வெளியிடலாம்.
 4. எழுதுவதுபற்றிய சிறு குறிப்புகளை நீங்கள் உங்கள் வாசகர்களுக்கு வழங்கலாம்.
 5. நீங்கள் அடுத்து எழுதும் புத்தகத்தைப்பற்றிய அறிமுகத்தைக் கொடுத்து ஆர்வத்தைத் தூண்டலாம்.
 6. உங்களுடைய இயல்பு வாழ்க்கையில் நடக்கிய விஷயங்களை உங்கள் கருத்துகளுடன் பதிவு செய்யலாம்.
 7. நீங்கள் எழுதும் அறையை, அல்லது, எழுதுகிற முறையை வீடியோவாக வழங்கலாம்.
 8. வாசகர்களுடைய கேள்விகளுக்கு வீடியோவில் பதில் அளிக்கலாம்.
 9. உங்கள் புத்தகங்களுடன் தொடர்புடைய கூடுதல் தகவல்களை (Extra Materials) வீடியோ வடிவில் வழங்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு நாவல் இடம்பெறுகிற இடத்திலிருந்து நீங்கள் பேசலாம், அது நாவலைப் படித்தவர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.
 10. நீங்கள் எந்தத் துறைபற்றி எழுதுகிறீர்களோ, அதில் சிறிய, பெரிய பாடங்களை/வகுப்புகளை யூட்யூப் லைவ் ஸ்ட்ரீமிங் வழியாக நடத்தலாம், அவற்றை நிரந்தரப் பதிவுகளாக யூட்யூபில் வைக்கலாம்.

இப்படி இன்னும் பல வழிகள் உள்ளன. எதுவானாலும் தரமாகச் செய்தால் வாசகர்கள் விரும்புவார்கள், உங்களைக் கொண்டாடுவார்கள்.

இப்படி உங்களுக்குத் தெரிந்த, நீங்கள் பயன்படுத்துகிற, விரும்புகிற வீடியோ வழிகளைக் கமென்ட்ஸ் பகுதியில் சொல்லுங்கள். அனைவரும் சேர்ந்து கற்றுக்கொள்வோம்.

***

Keywords: Authors, Author, Writers, Writer, Writing, Author Brand, Writer Brand, Video, Marketing, Video Marketing, Book Marketing, Books, Book, YouTube, Vimeo, YouTube Live Streaming, Live Stream, Live Streaming

வழக்கமான பதிப்பித்தலா? அல்லது, சுய பதிப்பித்தலா? கற்றுத்தருகிறார் பால் ப்ராட்லி கர்

இன்றைக்கு எழுதுகிற ஒவ்வொருவருக்கும் இருக்கிற முக்கியமான ஒரு கேள்வி: என் படைப்புகளைப் பிற பதிப்பாளர்களிடம் (அதாவது, Traditional Publishers எனப்படும் வழக்கமான பதிப்பாளர்களிடம்) தருவதா, அல்லது, நானே வெளியிடுவதா? (அதாவது, Self Publisher ஆவதா?)

இந்த இரு முறைகளிலும் நன்மைகளும் உள்ளன, தீமைகளும் உள்ளன. அதனால், உலகமெங்கும் பல எழுத்தாளர்கள் இதில் குழம்பி நிற்கிறார்கள்.

நாளை (செப்டம்பர் 23 அன்று) எழுத்தாளர் பால் ப்ராட்லி கர் இந்தத் தலைப்பில் ஒரு விரிவான நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறார். உங்கள் புத்தகத்துக்கு நல்ல பதிப்பித்தல் வழியைக் கண்டறிய இந்த நிகழ்ச்சி உதவும். (ஒரே ஒரு பிரச்சனை, நம் நாட்டின் நள்ளிரவு நேரத்தில் இந்த நிகழ்ச்சியை வைத்துள்ளார்கள். வேறு வழியில்லை, கற்றுக்கொள்வதற்குக் கொஞ்சம் தூக்கம் விழிக்கவேண்டியதுதான்.)

‘Traditional Vs Self-Publishing: An Author’s Inside Scoop’ என்ற தலைப்பிலான இந்த நிகழ்ச்சிக்கு இலவசமாகப் பதிவு செய்துகொள்ள, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

பால் ப்ராட்லி கர் புத்தகங்களைப் படிக்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

உங்கள் ஈபுக்கை(மின்னூலை) நீங்களே திட்டமிட்டுப் பதிப்பிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ள, எழுதுவோம் தளத்தில் வெளியான இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

***

Keywords: Publishing, Publisher, Traditional Publishing, Traditional Publisher, Traditional Publishers, Publishers, Self Publishing, Self-Publishing, Self Publisher, Self-Publisher, Self Publishers, Self-Publishers, Publishing your book, Publishing your own book, Publication, Publications, Indie Publishing, Indie Publisher, Indie Publishers, Paul Bradley Carr, Author, Authors, Writer, Writers

உங்களுடைய Sensitivity Reader யார்?

உங்களுடைய கதை, கட்டுரை, நூல் போன்றவற்றை எழுதியதும் பிறரிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வீர்கள், அவர்கள் சொல்லும் கருத்துகளைச் சிந்தித்து, தேவையான திருத்தங்களைச் செய்வீர்கள், அதன்பிறகுதான் பதிப்பிப்பீர்கள். அது ஒரு நல்ல பழக்கம், உங்கள் படைப்பைச் சிறப்பாக ஆக்குகிற உத்தி.

ஏனெனில், எழுதுகிற நம்முடைய பார்வையும் வாசகருடைய பார்வையும் ஒரேபோல் இருப்பதில்லை. அதனால், நாம் ஒரு குறிப்பிட்ட வகையில் சிந்தித்த படைப்பைப் பிறர் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்து அதன்படி செயல்படுவது நல்லது.

ஆனால், இப்படிப் பிறருடைய கருத்துகளைப் பொதுவாகக் கேட்பதுமட்டும் போதாது, அதில் ஒருவராவது Sensitive Readerஆக இருக்கவேண்டும் என்கிறார்கள் வல்லுனர்கள்.

அதென்ன Sensitive Reader?

Sensitive என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அகரமுதலி சொல்லும் பொருள் இது:

Quick to detect or respond to slight changes, signals, or influences

தமிழில் இதை நுண்ணுணர்வு என்று கூறலாம். அதாவது, படைப்பில் நுட்பமாக வெளிப்படக்கூடிய, பிறரை நல்லமுறையில் அல்லது கெட்டமுறையில் பாதிக்கக்கூடிய விஷயங்களை அடையாளம் காண்பது.

எடுத்துக்காட்டாக, உங்கள் கதையில் காது கேட்காதவர்களைக் கேலி செய்து ஒரு வரி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். எழுதும்போது நீங்கள் அதை ஒரு நகைச்சுவையாக எண்ணியிருக்கலாம். ஆனால், உண்மையில் காது கேட்காத ஒருவர் அதைப் படிக்கும்போது மனம் வருந்தக்கூடும். இதுபோன்றவற்றை அடையாளம் கண்டு சுட்டிக்காட்டுகிறவர்தான் Sensitivity Reader, அதாவது, நுண்ணுணர்வுள்ள வாசகர்.

இங்கு காது கேளாமை என்பது ஓர் எடுத்துக்காட்டுதான். இதேபோல் பெண்களை, குள்ளமானவர்களை, மெதுவாக நடக்கிறவர்களை, ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களைக் கேலி செய்கிற விஷயங்கள் உங்களையும் அறியாமல் உங்கள் படைப்பில் இடம்பெற்றுவிடலாம். எல்லாருக்கும் எழுதுகிற நீங்கள் இதுபோன்ற விஷயங்களைத் தவிர்ப்பதற்கு ஒரு Sensitivity Reader உதவுவார், பிரச்சனையை உங்களுக்குப் புரியவைத்துத் திருத்துவார்.

அதனால், உங்களுடைய படைப்புகளை வெளியிடுமுன் நுண்ணுணர்வுள்ள வாசகர் ஒருவரிடம் படிக்கக் கொடுங்கள். அப்படி ஒருவர் உங்கள் வட்டத்தில் இல்லை என்றால், அவரைக் கண்டறியுங்கள். அதைவிட முக்கியம், அவர் சொல்லும் கருத்துகளைக் கூர்ந்து கவனித்து, வருங்காலத்தில் உங்கள் எழுத்தில் அந்தப் பிரச்சனைகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் Sensitive Reader ஆக விரும்புகிறீர்களா? அதைக் கற்றுத்தரும் புத்தகம் ஒன்று இங்கு உள்ளது.

***

Keywords: Readers, Reader, Reviewers, Reviewer, Review, Reading, Reviewing, Comments, Comment, Commenting, Feedback, Feed back, Sensitive, Sensitivity, Sensitive Reader, Sensitivity Reader, Sensitive Reader, Sensitivity Readers, Alpha Reader, Alpha Readers, Beta Reader, Beta Readers

உங்கள் புனைவல்லாத (Nonfiction) புத்தகத்துக்கான தகவல் ஆவணங்களை (References) எப்படித் தொகுத்து அளிப்பது?

புனைவல்லாத (நான்ஃபிக்‌ஷன்) புத்தகங்கள் அடிப்படையில் உண்மைத் தகவல்கள், நிகழ்வுகளைமட்டும் கொண்டிருக்கவேண்டும். இதை உறுதிசெய்வதற்காக நூலின் பிற்பகுதியில் அந்த நூலின் உருவாக்கத்துக்கு உதவிய பிற நூல்கள், ஆவணப் படங்கள், கடிதங்கள், செய்திக் குறிப்புகள், கட்டுரைகள், பேட்டிகள், அறிக்கைகள் போன்றவற்றைச் சான்றுகளாகப் பட்டியலிடும் வழக்கம் உள்ளது.

இந்தப் பட்டியலால் எழுத்தாளருக்கும் நன்மை (அவருடைய நம்பகத்தன்மை கூடுகிறது), வாசகருக்கும் நன்மை (அந்தத் தலைப்பில் கூடுதல் விஷயங்களைப் படிக்கும் வாய்ப்பு அமைகிறது). பல வாசகர்கள் நூலைப் படித்துவிட்டு References பட்டியலைக் கூர்ந்து கவனிப்பார்கள், அதிலிருந்து தாங்கள் படிக்கப்போகும் அடுத்த நூலைத் தேர்ந்தெடுப்பார்கள்.

எழுத்தாளர்கள் தங்கள் Reference பக்கத்தை எப்படி அமைக்கலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன:

 1. நூலின் பிற்பகுதியில் (பின்னிணைப்பாக) அந்த நூல்முழுவதும் இடம்பெற்ற அனைத்து Reference ஆவணங்களையும் தனித்தனித் தலைப்புகளில் (நூல்கள், கடிதங்கள், செய்திகள், கட்டுரைகள்… இப்படி) தொகுத்து வழங்கலாம்
 2. நூலின் பிற்பகுதியில் (பின்னிணைப்பாக) அந்த நூல் முழுவதும் ஒவ்வோர் அத்தியாயத்திலும் இடம்பெற்ற Reference ஆவணங்களை அந்தந்த அத்தியாயத் தலைப்பின்கீழ் தொகுத்து வழஙகலாம் (அத்தியாயம் 1 References, அத்தியாயம் 2 References… இப்படி)
 3. இதையே ஒவ்வோர் அத்தியாயத்தின் நிறைவிலும் செய்யலாம் (அத்தியாயம் 1, அதற்கான References, அதன்பிறகு அத்தியாயம் 2, அதற்கான References… இப்படி)
 4. அத்தியாயத்துக்குள் அந்தந்த வரியின்கீழ் அடிக்குறிப்பாக (Footnote) அதற்கான சான்றை வழங்கலாம். இது ஒரு மிகச் சிறந்த உத்தி; ஆனால், மிகுந்த நேரம் எடுக்கும், அதற்கு நீங்கள் தயாராக இருக்கவேண்டும்

வழி எதுவானாலும் சரி, சான்றுகளின் பட்டியலை நீங்கள் கண்டிப்பாக வழங்கவேண்டும்; அதை உங்கள் வாசகர் எதிர்பார்க்கிறார், அது உங்கள் கடமையும்கூட. அதனால், உங்கள் நூல் ஆய்வின்போது நீங்கள் பயன்படுத்தும் அத்தனை ஆவணங்களையும் முறையாகக் குறித்துவையுங்கள், உங்கள் நூலில் அவற்றைச் சரியாகத் தொகுத்து வழங்குங்கள்.

***

நான்ஃபிக்‌ஷன் நூல்களை எழுத விரும்புகிறீர்களா? அந்தக் கலையை முறையாகக் கற்றுத்தரும் ஒரு பயிற்சி வகுப்பு இங்கு உள்ளது.

***

Keywords: Nonfiction, Non Fiction, References, Reference, Reference List, References List, Proof, List of References, Appendix