டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்றுக்கொள்ளலாம்: இலவசப் பயிற்சி வகுப்புகள்

எழுத்தாளர்கள் மார்க்கெட்டர்களாகவும் இருக்கவேண்டிய சூழ்நிலை இது. நம்முடைய புத்தகங்களையும் ஓர் எழுத்தாளர் என்றமுறையில் நம்முடைய Personal Brandஐயும் மக்கள் முன்னிலையில் முன்னிறுத்துவது நம் வெற்றிக்கு உதவுகிறது.

மார்க்கெட்டிங் செய்ய ஆசைதான், ஆனால், அதற்கான நுட்பங்கள் தெரியாது என்று எண்ணும் எழுத்தாளர்கள் அதை இணையத்திலேயே பயிலலாம். எடுத்துக்காட்டாக, புகழ் பெற்ற Ahrefs நிறுவனம் வழங்கும் 17 இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சிகளை இங்கு காணலாம்.

இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் மொத்தமாகப் படிக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக நேரம் உள்ளபோது படியுங்கள், வல்லுனர் ஆகுங்கள், வாழ்த்துகள்!

***

Keywords: Marketing, Marketer, Marketers, Book Marketing, Author Brand, Learn Marketing, Free Courses, Free Course, Free Training, Free Trainings, Digital Marketing, Online Marketing

உங்கள் புத்தகத்தை நன்கு மார்க்கெட்டிங் செய்து விற்பனை செய்வது எப்படி: கற்றுத்தருகிறார் எழுத்தாளர் நிக் ஸ்டீஃபன்சன்

புத்தக எழுத்தைப்போல் மார்க்கெட்டிங் என்பதும் ஒரு முக்கியமான நுட்பம். இதன்மூலம் உங்கள் நூல் இன்னும் பலருக்கு எளிதில் சென்று சேர்வதற்கான வாய்ப்பு அமையும். இதைச் சரியாகச் செய்தால், எழுத்தாளர்களுக்கான மாத வருமான வழி ஒன்று தானாக உருவாகிவிடும்.

ஆனால், பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இந்த மார்க்கெட்டிங் நுட்பங்கள் தெரிந்திருப்பதில்லை. இது கடினம்தான், ஆனால், கற்றுக்கொண்டுவிட்டால் எளிதாகிவிடும்.

அவ்வகையில், புகழ் பெற்ற எழுத்தாளர் நிக் ஸ்டீஃபன்சன் வரும் அக்டோபர் 7 அன்று “$0 to $1K a Month in Book Sales” என்ற தலைப்பில் இலவசப் பயிற்சி வகுப்பு ஒன்றை நடத்துகிறார். ஆர்வமுள்ளவர்கள் அதில் கலந்துகொண்டு கற்றுக்கொள்ளுங்கள், சந்தைப்படுத்தலை வலுவாக்கி உங்கள் விற்பனையைப் பெருக்குங்கள்.

நிக் ஸ்டீஃபன்சன் அவர்கள் நடத்தும் இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

நிக் ஸ்டீஃபன்சன் அவர்களுடைய புத்தகங்களைக் காண, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

***

Keywords: Writing, Writers, Writer, Authors, Author, Publishing, Editing, Courses, Course, Writing Courses, Writing Course, Free Writing Courses, Editing Courses, Publishing Courses, Learn to Write, Writing Workshops, Writing Workshop, Marketing, Promotion, Publicity, Promoting Books, Selling Books, Sales

பயிற்சிகளின்மூலம் எழுதக் கற்றுக்கொள்ள இயலுமா? எழுத்தாளர் பா. ராகவன் பேட்டி

இதே தலைப்பில் இன்னும் சில முக்கியமான பதிவுகள்:

***

Keywords: Writing, Writers, Writer, Authors, Author, Art of writing, Writing classes, Writing Class, Writing Workshops, Writing Workshop, Courses, Course, Writing Courses, Writing Course, Pa. Raghavan, Pa. Ragavan, Learn to write, Learn Writing

நாடகம் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள், இலவசமாக

கதை, கவிதை, கட்டுரையைப்போல் நாடகம் என்பதும் ஒரு சிறந்த படைப்பு வகை. மேடையில் பார்ப்பதும் சரி, நூலாகப் படிப்பதும் சரி, நாடகப் பிரதிகள் வாசகர்களை மிகவும் ஈர்க்கக்கூடியவை.

நீங்கள் நாடகம் எழுதக் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? தியேட்டெர்ரா (சுவிட்சர்லாந்து), கலைடாஸ்கோப் (மதுரை) அமைப்புகள் இணைந்து நடத்தும் இலவச இணைய வழிப் பயிலரங்கில் கலந்துகொள்ளுங்கள்!

இந்தப் பயிலரங்கு 2021 செப்டம்பர் 24ல் தொடங்கி அக்டோபர் 4வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் வகுப்பைப் புகழ் பெற்ற எழுத்தாளர் பேராசிரியர் அ. ராமசாமி நடத்துகிறார். இந்த வகுப்பின் தலைப்பு, ‘நாடகப் பிரதி: கட்டமைப்புகளும் அடிப்படைகளும்.’

செப்டம்பர் 24 இரவு 7 மணி முதல் 8 மணிவரை நடைபெறும் இந்த வகுப்பில் கலந்துகொள்ள இந்த இணைப்பைக் க்ளிக் செய்யுங்கள். அல்லது, ஜூம் செயலிக்கு வாருங்கள்:

Meeting ID: 8239159975

Password: drama2021

மேலும் தகவல்களுக்கு, +919443444378 அல்லது +41784038908 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

அ. ராமசாமி அவர்களுடைய நூல்களைப் படிக்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

பொறுப்பு துறப்பு: எங்களுக்குக் கிடைத்த வகுப்பு அறிவிப்பை உங்கள் வசதிக்காக இங்கு வெளியிட்டுள்ளோம். இதுபற்றிய கூடுதல் தகவல்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்களை அணுகுங்கள். இது தொடர்பான உங்கள் நடவடிக்கைகளுக்கு, அவற்றின் விளைவுகளுக்கு “எழுதுவோம்” தளம் பொறுப்பேற்காது.

***

Keywords: Drama, Acts, Drama Writing, Drama Writers, Drama Writer, Drama Workshop, Scripts, Script, Stage Plays, Stage Play, Plays, Play, Learn to write drama, நாடகம், நாடகங்கள், மேடை நாடகம், நாடகப் பிரதி, நாடகம் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்

வழக்கமான பதிப்பித்தலா? அல்லது, சுய பதிப்பித்தலா? கற்றுத்தருகிறார் பால் ப்ராட்லி கர்

இன்றைக்கு எழுதுகிற ஒவ்வொருவருக்கும் இருக்கிற முக்கியமான ஒரு கேள்வி: என் படைப்புகளைப் பிற பதிப்பாளர்களிடம் (அதாவது, Traditional Publishers எனப்படும் வழக்கமான பதிப்பாளர்களிடம்) தருவதா, அல்லது, நானே வெளியிடுவதா? (அதாவது, Self Publisher ஆவதா?)

இந்த இரு முறைகளிலும் நன்மைகளும் உள்ளன, தீமைகளும் உள்ளன. அதனால், உலகமெங்கும் பல எழுத்தாளர்கள் இதில் குழம்பி நிற்கிறார்கள்.

நாளை (செப்டம்பர் 23 அன்று) எழுத்தாளர் பால் ப்ராட்லி கர் இந்தத் தலைப்பில் ஒரு விரிவான நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறார். உங்கள் புத்தகத்துக்கு நல்ல பதிப்பித்தல் வழியைக் கண்டறிய இந்த நிகழ்ச்சி உதவும். (ஒரே ஒரு பிரச்சனை, நம் நாட்டின் நள்ளிரவு நேரத்தில் இந்த நிகழ்ச்சியை வைத்துள்ளார்கள். வேறு வழியில்லை, கற்றுக்கொள்வதற்குக் கொஞ்சம் தூக்கம் விழிக்கவேண்டியதுதான்.)

‘Traditional Vs Self-Publishing: An Author’s Inside Scoop’ என்ற தலைப்பிலான இந்த நிகழ்ச்சிக்கு இலவசமாகப் பதிவு செய்துகொள்ள, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

பால் ப்ராட்லி கர் புத்தகங்களைப் படிக்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

உங்கள் ஈபுக்கை(மின்னூலை) நீங்களே திட்டமிட்டுப் பதிப்பிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ள, எழுதுவோம் தளத்தில் வெளியான இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

***

Keywords: Publishing, Publisher, Traditional Publishing, Traditional Publisher, Traditional Publishers, Publishers, Self Publishing, Self-Publishing, Self Publisher, Self-Publisher, Self Publishers, Self-Publishers, Publishing your book, Publishing your own book, Publication, Publications, Indie Publishing, Indie Publisher, Indie Publishers, Paul Bradley Carr, Author, Authors, Writer, Writers

எழுதக் கற்றுக்கொள்வோருக்குப் பயிற்சிகள் உதவுமா? எழுத்தாளர் ஜெயமோகன் விரிவான விளக்கம்

எழுதக் கற்றுக்கொள்கிறவர்களுக்குப் பயிற்சிகள் உதவுமா என்பதுபற்றி எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு விரிவான விளக்கக் கட்டுரையை எழுதியிருக்கிறார். அதிலிருந்து முக்கியமான சில பகுதிகள், பாடங்கள்:

கற்றுக்கொள்ளக் கூடிய எல்லா வழிகளும் பயனுள்ளவையே. அவற்றை நாம் எவ்வளவு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது அது.

எந்த தொழிலிலும் அதன் அடிப்படைகள் எங்கேனும் கற்பிக்கப்படுகின்றன என்றால் ஓடிப்போய் கற்றுக்கொள்வது அவசியம்.

எதையும் முறையாக கற்றுக்கொள்ள நான் தயங்க மாட்டேன்.

இத்தகைய பயிற்சிகள் ஆளுமையை மாற்றுமா? கண்டிப்பாக மாற்றும். நம்பவே முடியாத அளவுக்கு பெரும் மாறுதல்களை மிக எளிய பயிற்சிகள் அளித்துவிடும். எல்லா வயதிலும் அந்த மாற்றம் நிகழும்.

ஒரு நிபுணர் சொல்லித்தந்தால் மிக எளிதாக நாம் நம்மை மாற்றிக்கொள்ள முடியும்.

அக்கல்வி மட்டுமே போதுமா? இல்லை என்பதே என் பதில்.

இன்று உலகம் முழுக்க உரைநடை எழுதுவதற்கும், புனைவு எழுதுவதற்கும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஐரோப்பாவில் அவ்வாறு ஒரு பயிற்சியைப் பெறாமல் எழுதுபவர்கள் மிகக்குறைவு.

அப்பயிற்சி இல்லாமல் எழுத முடியுமா? முடியும். ஆனால் ஓர் எளிய பயிற்சி முறையால் சாதாரணமாக களையக்கூடிய பிழைகள் சிலசமயம் கடைசிவரை நீடிக்கும்.

இந்தவகையான பயிற்சிகளில் அளிக்கப்படுவது ஒரு சராசரி அறிதலைத்தான். அதன்பின் நம் படைப்புத்திறனால் நம் தனித்தன்மையால் அந்த தரச்சராசரியை நாம் கடந்துசெல்லலாம். நமக்குரிய இடத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

ஜெயமோகன் அவர்களுடைய முழுக் கட்டுரையைப் படிக்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

ஜெயமோகன் அவர்களுடைய நூல்களை வாங்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

***

Keywords: Writing, Writers, Writer, Authors, Author, Courses, Course, Writing Courses, Writing Course, Learn to Write, Writing Workshops, Writing Workshop, Jayamohan, Jeyamohan

எழுதக் கற்றுத்தரும் 19 இலவசப் பயிற்சி வகுப்புகள்

எழுத்து என்பது கற்றுத்தந்து வருமா என்கிற கேள்வி எல்லாருக்கும் உண்டு. ஆனால், எல்லாத் துறைகளையும்போல் எழுத்திலும் கற்றுக்கொள்ளவேண்டிய நுட்பங்கள் பல இருக்கின்றன. சரியான ஆசிரியரிடம் அவற்றைக் கற்றுக்கொண்டால் முன்பைவிடச் சிறப்பாக எழுதலாம்.

அவ்வகையில், Reedsy Learning என்ற நிறுவனம் வழங்கும் 19 எழுத்துப் பயிற்சிகளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். காட்சிகளை அமைப்பது, சஸ்பென்ஸ் நாவல் எழுதுவது, காதல் காட்சிகளை உருவாக்குவது, இளைஞர்களுக்கான எழுத்து, இன்னும் பல தலைப்புகளில் இங்கு பயிற்சி வகுப்புகள் உள்ளன. இவை அனைத்தும் ஆங்கிலத்தில் அமைந்துள்ளன, மின்னஞ்சல்மூலம் 10 நாட்களில் கொஞ்சங்கொஞ்சமாக வழங்கப்படுகின்றன, ஓய்வு நேரத்தில் கற்றுக்கொள்ளலாம், அதுவும் இலவசமாக.

ஆர்வம் உள்ளவர்கள் இங்கு க்ளிக் செய்து இந்த வகுப்புகளில் இணையலாம்.

எழுத்துடன் தொடர்புடைய வடிவமைப்பு, எடிட்டிங், மார்க்கெட்டிங் போன்ற தலைப்புகளிலும் Reedsy Learning வகுப்புகளை வழங்குகிறது. இவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் இங்கு க்ளிக் செய்யுங்கள்.

எழுதக் கற்றுத்தரும் மற்ற சில பயிற்சி வகுப்புகள், உதவிக் குறிப்புகள்:

***

Keywords: Writing, Writers, Writer, Authors, Author, Publishing, Editing, Courses, Course, Writing Courses, Writing Course, Free Writing Courses, Editing Courses, Publishing Courses, Learn to Write, Writing Workshops, Writing Workshop

நல்ல சிறுகதை எழுதக் கற்றுத்தரும் Writing இதழின் Masterclass

புகழ் பெற்ற “Writing” இதழ் சிறந்த சிறுகதை நுட்பங்களைக் கற்றுத்தரும் Masterclass இதழொன்றை வெளியிட்டுள்ளது. செவ்வியல் (Classic) சிறுகதைகளை எடுத்துக்கொண்டு அவற்றை ஆராய்ந்து அதன்மூலம் கற்றுத்தரும் பாணியில் இந்த இதழ் அமைந்துள்ளது.

இந்தச் சிறப்பிதழை டிஜிட்டல் வடிவில் வாங்குவதற்கு இங்கு க்ளிக் செய்யுங்கள்.

***

Keywords: Short Story, Short Stories, Shortstory, Shortstories, Story, Stories, Story Writing, Classics, Classic, Learn to write, Learn to write stories, Writing Stories, Authors, Writers, Writing, Master Class, Masterclass

என். சொக்கன் Nonfiction பயிற்சி வகுப்பு: செப்டம்பர் & அக்டோபர்

என். சொக்கன் Nonfiction பயிலகத்தின் அடுத்த வகுப்புகள் (Batch 9 & 10) செப்டம்பர் 11, 12 மற்றும் அக்டோபர் 9, 10 தேதிகளில் நடைபெறுகின்றன (ஒவ்வொரு Batchம் 2 + 2 = 4 மணி நேரம், கூகுள் மீட் வழியாக). செப்டம்பர் பேட்ச்சில் 2 இருக்கைகள்தான் உள்ளன நிரம்பிவிட்டது, அதனால்தான் இதனுடன் அக்டோபர் வகுப்பையும் சேர்த்து அறிவிக்கிறேன்.

புனைவல்லாத நூல்களுக்கான சந்தை, வாசகர் வகை, எதிர்பார்ப்புகள், யார் எழுதலாம், என்ன எழுதலாம், தலைப்பு ஆராய்ச்சி, நூல் ஆராய்ச்சி, எழுதும் ஒழுக்கம்/பழக்கம், நேர மேலாண்மை, எடிட்டிங் ஆகியவற்றை விரிவாக நேரடிப் பயிற்சிகளுடனும், பதிப்பித்தலைச் சுருக்கமாகவும் கற்றுத்தரும் பயிலகம் இது. 10 மாணவர்கள்தான், ஆகவே, தனிக் கவனத்துடன் கற்றுக்கொள்ளலாம், குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்டுப் பதில் பெறலாம். பயிற்சிக்குப்பின், சக மாணவர்களுடனும் என்னுடனும் தொடர்ந்து உரையாடும் Exclusive வாட்ஸாப் குழுமத்தில் (விருப்பமிருந்தால்) இணையலாம்.

புனைவல்லாத நூல் எழுதும் ஆர்வமுள்ளவர்கள் சேர்ந்துகொள்ளுங்கள்/ஆர்வமுள்ள பிறருக்குப் பரிந்துரையுங்கள்.

கட்டணம்: ரூ 750 (பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ 500)

செலுத்தும் முறை: Google Pay அல்லது PhonePe அல்லது PayTM அல்லது Mobiquikல் nchokkan@icici என்ற UPI முகவரியில் பணம் செலுத்துங்கள். பின்னர், அதன் Screenshotஐ nchokkan+nfwregn@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

வெளிநாட்டினருக்கு வேறு வழிகள் உள்ளன, nchokkan+nfwregn@gmail.com என்ற முகவரிக்கு எழுதிக் கேளுங்கள்.

***

என். சொக்கன் நூல்கள்: https://amzn.to/36uZPGz

Keywords: N. Chokkan Nonfiction Workshop, Nonfiction Class, Learn to write Nonfiction, Classes, Courses, Online Classes, Online Learning, Learn to write

Udemy இணையத் தளத்தில் எழுத்துப் பயிற்சி வகுப்புகள் தள்ளுபடி விலையில்

இணையம் வழியாகப் பலவிதமான திறன்களைக் கற்றுத்தரும் புகழ்பெற்ற Udemy இணையத் தளம் இப்போது ஒரு தள்ளுபடிச் சலுகையை அறிவித்துள்ளது. இதில் ஏராளமான பயிற்சி வகுப்புகளை மிகப் பெரிய தள்ளுபடியில், அதாவது, தலா ரூ 385 விலைக்குப் பெறலாம். இப்போது வாங்கிவிட்டால் பிறகு எப்போது வேண்டுமானாலும் அதைப் படிக்கலாம், கற்றுக்கொள்ளலாம்.

இந்த இணையத் தளத்தில் பல எழுத்துப் பயிற்சி வகுப்புகளும் உள்ளன. அவற்றைக் காண, இங்கு க்ளிக் செய்யுங்கள், உங்களுக்குப் பிடித்த பயிற்சி வகுப்புகளில் சிறு முதலீடு செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Keywords: Writing, Authors, Writers, Courses, Writing Courses, Discount, Udemy, Offer, Deal, Deals, Online Learning, Online Training