இளம் எழுத்தாளர்களுக்குத் தமிழக அரசு வழங்கும் “கவிமணி விருது”

நீங்கள் 18 வயதுக்கு உட்பட்ட எழுத்தாளரா? அல்லது, உங்கள் வீட்டில் அப்படி ஓர் எழுத்தாளர் உள்ளாரா? ஆம் எனில், தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை வழங்கும் “கவிமணி விருது”க்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆம், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எழுத்து ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் 3 சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து ரூ 25,000 பணப்பரிசு, சான்றிதழ், கேடயம் ஆகியவை வழங்கப்படும் என்று பள்ளி கவ்லித்துறை அறிவித்துள்ளது.

சிறுவயதில் எழுதத் தொடங்குவது ஒரு நல்ல பழக்கம். இந்த விருது அறிவிப்பு பல சிறந்த எழுத்தாளர்களை உருவாக்கும் என்று நம்புவோம். தமிழக அரசுக்கு “எழுதுவோம்” குழுவின் சார்பாக வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். விருது பெறப்போகும் குழந்தை எழுத்தாளர்களுக்கு நல்வாழ்த்துகள்.

இந்த விருதுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் குழந்தை எழுத்தாளர்கள் இங்கு க்ளிக் செய்யுங்கள்.

***

Keywords: Awards, Award, Prizes, Prize, Rewards, Reward, Young Author, Young Authors, Young Writer, Young Writers, Tamil Nadu, Tamilnadu, Tamil Nadu Government, தமிழக அரசு, தமிழ் நாடு அரசு, தமிழ்நாடு அரசு, தமிழக அரசாங்கம், தமிழ் நாடு அரசாங்கம், தமிழ்நாடு அரசாங்கம், விருதுகள், விருது, பரிசுகள், பரிசு, இளம் எழுத்தாளர், குழந்தை எழுத்தாளர், இளம் எழுத்தாளர்கள், குழந்தை எழுத்தாளர்கள்

சிறந்த குறுநாவல்களுக்குப் பரிசு வழங்கும் குவிகம் குறும் புதினம் போட்டி 2022-23

“குவிகம்” இணைய இதழ் குறும் புதினங்கள், அதாவது, குறுநாவல்களுக்கான ஒரு போட்டியை அறிவித்துள்ளது. சிறந்த குறுநாவல்களுக்கு வழங்கப்படும் பரிசுகளின் விவரம்:

முதல் பரிசு: ரூ 5000
இரண்டாம் பரிசு: ரூ 3000
மூன்றாம் பரிசு: ரூ 2000
பிரசுரத்துக்குத் தேர்வாகும் மற்ற குறுநாவல்களுக்கு: ரூ 1000

உங்கள் குறுநாவல்கள் 4000இலிருந்து 8000 சொற்களுக்குள் இருக்கவேண்டும். இதற்குமுன் எங்கும் வெளியாகியிருக்கக்கூடாது. யுனிகோட் எழுத்துருவில் இருக்கவேண்டும்.

குறுநாவல்களை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: kurumpudhinam@gmail.com
குறுநாவல்களை அனுப்பவேண்டிய கடைசி நாள்: 15 டிசம்பர் 2021

அனைவரும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளுங்கள், வெற்றிபெறுங்கள், வாழ்த்துகள்!

***

Keywords: Competition, Competitions, Contest, Contests, Prize, Prizes, Novels, Novel, நாவல், Novelettes, Novelette, Novella, Novellas, குறுநாவல், குறு நாவல், குறும் புதினம், குறும்புதினம்

முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் சிறுகதைப் போட்டி

முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் சிறுகதைப் போட்டியை அறிவித்துள்ளது “நம் உரத்த சிந்தனை” மாத இதழ். இதுபற்றிய தகவல்கள் இங்குள்ளன:

முதல் பரிசு: ரூ 3000/-
இரண்டாம் பரிசு: ரூ 1000/-
மூன்றாம் பரிசு: ரூ 500/- (இரண்டு பேருக்கு)

  • சிறுகதைகள் நான்கு பக்கங்களுக்கு (ஏ4) மிகக்கூடாது. தெளிவான கையெழுத்தில் அல்லது தட்டச்சில் (Unicode Font) இருக்கலாம்.
  • கதையுடன் எழுத்தாளர் குறிப்பு, ஒளிப்படம் இணைக்கவேண்டும்
  • கதைகளை அனுப்பவேண்டிய முகவரி: urathasinthanai@gmail.com
  • கதைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள்: 25.10.2021
    விசாரணைகளுக்கு: 9444011105, 9444908282

போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் “எழுதுவோம்” குழுவின் வாழ்த்துகள்.

***

Keywords: Short Story competition, Short Story prize, Prizes, Prize, Short Stories, Short Story, Shortstories, Shortstory, சிறுகதைகள், சிறுகதை, பரிசு, பரிசுப் போட்டி, பரிசுப்போட்டி

உங்கள் கதை, கவிதை, கட்டுரைகளை ஒரே நேரத்தில் பல பத்திரிகைகளுக்கு அனுப்பலாமா?

நீங்கள் எழுதியுள்ள கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றைப் பத்திரிகைகளுக்கு அனுப்பும்போது கவனத்தில் வைக்கவேண்டிய ஒரு விஷயம், ஒரே படைப்பை ஒரே நேரத்தில் பல பத்திரிகைகளுக்கு அனுப்பக்கூடாது. அதாவது, ஒரு பத்திரிகை உங்கள் படைப்பைப் பரிசீலித்துக்கொண்டிருக்கும்போது அதை இன்னொரு பத்திரிகைக்கு அனுப்பக்கூடாது.

ஏன் அப்படி?

உங்கள் படைப்பைப் பரிசீலிப்பது என்பது அந்தப் பத்திரிகைக்கு ஒரு நேர முதலீடு. அதைச் செய்து அவர்கள் உங்களுடைய படைப்பைத் தேர்ந்தெடுத்தபிறகு, அது ஏற்கெனவே இன்னொரு பத்திரிகையில் வெளியாகிவிட்டது என்று தெரிந்தால், அவர்களுடைய நேர முதலீடு வீணாகிவிடுகிறது.

நீங்கள் இப்படி ஒரே நேரத்தில் உங்கள் கதை, கவிதை, கட்டுரையைப் பலருக்கு அனுப்பினால், சில நேரங்களில் இரண்டு பத்திரிகைகள் ஒரே நேரத்தில் உங்கள் கதை, கவிதை, கட்டுரையைத் தேர்ந்தெடுத்துப் பிரசுரித்துவிடக்கூடும், அது உங்களுக்கு அவமானமாகிவிடும், வாசகர்கள் உங்களைத் தவறாக நினைக்கக்கூடும்.

அதனால், ஒரு பத்திரிகைக்குப் படைப்பை அனுப்பியபின், ஒரு குறிப்பிட்ட நேரம்வரை காத்திருக்கலாம். அந்த நேரத்துக்குள் உங்கள் படைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சி, தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று திரும்பி வந்தாலும் பரவாயில்லை, அதைத் தயக்கமில்லாமல் இன்னொரு பத்திரிகைக்கு அனுப்பிவிடலாம்.

ஒருவேளை, அந்தக் குறிப்பிட்ட நேரம்வரையில் உங்களுக்கு அந்தப் பத்திரிகையிலிருந்து எந்தப் பதிலும் வராவிட்டால், அது தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று நீங்கள் ஊகித்துக்கொள்ளலாம், அப்போது நீங்கள் அதை இன்னொரு பத்திரிகைக்கு அனுப்பலாம். அப்படிச் செய்யும்போது முதல் பத்திரிகைக்கு ஒரு வரி மின்னஞ்சலோ கடிதமோ எழுதித் தெரிவித்துவிட்டால் இன்னும் நல்லது.

சரி, எவ்வளவு நாள் காத்திருப்பது?

இது ஒவ்வொரு பத்திரிகைக்கும் மாறும். நாளிதழ்கள், வார இதழ்களுக்குச் சுமார் ஒரு மாதம் காத்திருக்கலாம், மாத இதழ்களுக்குச் சுமார் மூன்று மாதங்கள் காத்திருக்கலாம், அதன்பிறகு, அதை வேறு பத்திரிகைக்கு அனுப்புவதுபற்றிச் சிந்திக்கலாம்.

இந்தப் பரிந்துரை நாவல்கள், முழு நூல்களைப் பதிப்பகங்களுக்கு அனுப்புவதற்கும் பொருந்தும், போட்டிகளுக்கு அனுப்பும் கதை, கவிதை, கட்டுரைகளுக்கும் பொருந்தும். போட்டி முடிவு வெளியாகும்வரை அவற்றை வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பாமல் இருப்பது நல்லது. பல போட்டி அறிவிப்புகளில் இதை ஒரு விதிமுறையாகவே குறிப்பிட்டிருப்பார்கள்.

***

Keywords: Articles, Article, Stories, Story, Short Stories, Short Story, Shortstories, Shortstory, Submissions, Submission, Selection, Rejection, Rejection Letter, Parallel Submission, Concurrent Submission, Magazine, Magazines

பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு நடத்தும் கட்டுரை, வீடியோ, ஆடியோப் போட்டி

சென்ற ஆண்டில் கோவிட்-19ஆல் தொழிலாளர்கள் இடம் பெயர்தல், அவர்களுக்கு நியாயமான வேலைகள் கிடைத்தல் ஆகியவற்றைப்பற்றி நீங்கள் ஏதேனும் கட்டுரைகள், புகைப்படக் கட்டுரைகள், வீடியோக்கள், ஒலிப்பதிவுகளை வெளியிட்டிருக்கிறீர்களா? ஆம் எனில், இதற்காக பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (International Labour Organization) நடத்தும் போட்டியில் நீங்கள் பங்கேற்கலாம், பரிசுகளை வெல்லலாம்.

இந்தப் போட்டிக்கு நீங்கள் தமிழ்க் கட்டுரைகளையும் அனுப்பலாம். ஆனால், அத்துடன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் சேர்த்து அனுப்பவேண்டும்.

உங்கள் கட்டுரைகள், பதிவுகள் அக்டோபர் 15க்குள் இணையம்மூலம் அனுப்பப்படவேண்டும். அதற்கான படிவம் இங்கு உள்ளது.

இந்தப் போட்டியைப்பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

போட்டியில் பங்கேற்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

***

Keywords: Competition, Competitions, Contest, Contests, Award, Awards, Prize, Prizes, Articles, Article, Photo Story, Photo Stories

சங்கமம் இணையத் தளம் நடத்தும் நாவல் போட்டி

சங்கமம் என்ற இணையத் தளம் நாவல்களுக்கான போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. குடும்பம், காதல், சமூகம், ஆன்மிகம், வரலாறு, அறிவியல், த்ரில்லர் உள்ளிட்ட பல வகை நாவல்கள் இதில் பங்கேற்கலாம். ஒருவர் பல கதைகளைக்கூட எழுதலாம்.

சிறந்த நாவல்கள் மூன்று பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறந்த மூன்று நாவல்களுக்குத் தலா ரூ 10,000 பரிசு வழங்கப்படுகிறது, இரண்டாம் பரிசு மூன்று நாவல்களுக்குத் தலா ரூ 5000, மூன்றாம் பரிசு ஒன்பது நாவல்களுக்குத் தலா ரூ 2,000. இத்துடன் ஒரு நாவலுக்குச் சிறப்புப் பரிசும் வழங்கப்படவுள்ளது.

போட்டியில் கலந்துகொள்ளும் நாவல்கள் 40000 முதல் 50000 சொற்கள்வரை இருக்கவேண்டும். அத்துடன், டிசம்பர் 31க்குள் உங்கள் நாவல்களைச் சமர்ப்பிக்கவேண்டும்.

இந்தப் போட்டி பற்றிய கூடுதல் தகவல்களைக் காண, இங்கு க்ளிக் செய்யுங்கள். கலந்துகொள்ளுங்கள், வெற்றிக்கு வாழ்த்துகள்.

பின்குறிப்பு: போட்டிக்காகக் குறிப்பிட்ட சொல் எண்ணிக்கையில் உங்கள் படைப்பை நிறைவுசெய்வதுபற்றிக் குழப்பம் உள்ளதா? எங்களுடைய இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

பொறுப்பு துறப்பு: எங்களுக்குக் கிடைத்த போட்டி அறிவிப்பை உங்கள் வசதிக்காக இங்கு வெளியிட்டுள்ளோம். இதுபற்றிய கூடுதல் தகவல்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள இணைய முகவரியை அணுகுங்கள். இது தொடர்பான உங்கள் நடவடிக்கைகளுக்கு, அவற்றின் விளைவுகளுக்கு “எழுதுவோம்” தளம் பொறுப்பேற்காது.

***

Keywords: Novel competition, Novel prize, Prizes, Prize, Novels, Novel, நாவல், நாவல்கள், பரிசு, பரிசுப் போட்டி, பரிசுப்போட்டி

சஹானா இணைய இதழ் நடத்தும் அறிவியல் கதைப் போட்டி

இணையத்தில் வெளியாகும் சஹானா இதழ் ஓர் அறிவியல் கதைப் போட்டியை நடத்துகிறது. உங்களுடைய கதைகளை டிசம்பர் 15வரை அனுப்பிவைக்கலாம். சிறந்த கதைகள், நாவல்கள் இணையத்தில் அல்லது புத்தகமாக வெளியிடப்படும்.

இந்தப் போட்டி பற்றிய கூடுதல் அறிவிப்புகளைக் காண, இங்கு க்ளிக் செய்யுங்கள். வெற்றிக்கு வாழ்த்துகள்.

பொறுப்பு துறப்பு: எங்களுக்குக் கிடைத்த போட்டி அறிவிப்பை உங்கள் வசதிக்காக இங்கு வெளியிட்டுள்ளோம். இதுபற்றிய கூடுதல் தகவல்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள இணைய முகவரியை அணுகுங்கள். இது தொடர்பான உங்கள் நடவடிக்கைகளுக்கு, அவற்றின் விளைவுகளுக்கு “எழுதுவோம்” தளம் பொறுப்பேற்காது.

***

Keywords: Short story competition, shortstory competition, short story prize, shortstory prize, Novel Competition, Novel Prize, Prizes, Prize, Short Stories, Shortstories, Short Story, Short Story, Novels, Novel, சிறுகதை, சிறுகதைகள், சிறு கதை, சிறு கதைகள், நாவல், நாவல்கள், பரிசு, பரிசுப் போட்டி, பரிசுப்போட்டி

சிறந்த சிறுகதைகளுக்கு ரூ 20,000 பரிசு வழங்கும் விமர்சகர் வெங்கட்சாமிநாதன் நினைவுச் சிறுகதைப் போட்டி

ஆண்டுதோறும் “கருமாண்டி ஜங்ஷன்” யூட்யூப் சானல் நடத்தவுள்ள விமர்சகர் வெங்கட்சாமிநாதன் நினைவுச் சிறுகதைப் போட்டியின் இந்த ஆண்டுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த கதைகளுக்கு முதல் பரிசு ரூ 5,000, இரண்டாம் பரிசு ரூ 3,000, மூன்றாம் பரிசு ரூ 2,000, ஆறுதல் பரிசு 10 கதைகளுக்குத் தலா ரூ 1,000 என ரூ 20,000 பரிசு வழங்கப்படுகிறது.

உங்களுக்குப் பிடித்த கதைகளை எழுதி அனுப்புங்கள், அவை எந்தத் தலைப்பிலும் இருக்கலாம், ஆனால், இதுவரை வெளிவராத சொந்தக் கற்பனையாக இருக்கவேண்டும். வேர்ட் வடிவத்தில் லதா ஃபான்ட்டில் 2400 சொற்களுக்குள் இருக்கவேண்டும். கதையுடன் ஓர் உறுதிமொழிக் கடிதத்தையும் இணைக்கவேண்டும், அதில் இந்தக் கதை உங்கள் சொந்தக் கற்பனைதான் என்றும், இந்தப் போட்டியின் முடிவு வரும்வரை இதை வேறு எந்த ஊடகத்துக்கும் அனுப்பமாட்டீர்கள் என்றும் உறுதியளிக்கவேண்டும்.

கதைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள்: அக்டோபர் 15
கதைகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: karumaandijunction@gmail.com

அனைவரும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளுங்கள், வெற்றி பெறுங்கள், அட்வான்ஸ் வாழ்த்துகள்!

பொறுப்பு துறப்பு: எங்களுக்குக் கிடைத்த போட்டி அறிவிப்பை உங்கள் வசதிக்காக இங்கு வெளியிட்டுள்ளோம். இதுபற்றிய கூடுதல் தகவல்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரியை அணுகுங்கள். இது தொடர்பான உங்கள் நடவடிக்கைகளுக்கு, அவற்றின் விளைவுகளுக்கு “எழுதுவோம்” தளம் பொறுப்பேற்காது.

***

Keywords: Short story competition, shortstory competition, short story prize, shortstory prize, Prizes, Prize, Short Stories, Shortstories, Short Story, Short Story, சிறுகதை, சிறுகதைகள், சிறு கதை, சிறு கதைகள், பரிசு, பரிசுப் போட்டி, பரிசுப்போட்டி

சிறந்த சிறுகதைகளுக்கு ரூ 60,000 பரிசு வழங்கும் தினமலர் டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டி

ஆண்டுதோறும் தினமலர் நாளிதழ் நடத்தும் டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டி இந்த ஆண்டும் நடைபெறுகிறது. சிறந்த கதைகளுக்கு முதல் பரிசு ரூ 20,000, இரண்டாம் பரிசு ரூ 10,000, மூன்றாம் பரிசு ரூ 5,000, ஆறுதல் பரிசு 10 கதைகளுக்குத் தலா ரூ 2,500 என ரூ 60,000 பரிசு வழங்கப்படுகிறது.

உங்களுக்குப் பிடித்த கதைகளை எழுதி அனுப்புங்கள், அவை எந்தத் தலைப்பிலும் இருக்கலாம், ஆனால், இதுவரை வெளிவராத சொந்தக் கற்பனையாக இருக்கவேண்டும். வேர்ட் வடிவத்தில் 12 பாயின்ட் அளவில் 3 பக்கங்களுக்குள் இருக்கவேண்டும். கதையின் நிறைவில் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு அனுப்பவேண்டும்.

கதைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள்: செப்டம்பர் 15
கதைகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: dmrtvr21@gmail.com

அனைவரும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளுங்கள், வெற்றி பெறுங்கள், அட்வான்ஸ் வாழ்த்துகள்!

பொறுப்பு துறப்பு: எங்களுக்குக் கிடைத்த போட்டி அறிவிப்பை உங்கள் வசதிக்காக இங்கு வெளியிட்டுள்ளோம். இதுபற்றிய கூடுதல் தகவல்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரியை அணுகுங்கள். இது தொடர்பான உங்கள் நடவடிக்கைகளுக்கு, அவற்றின் விளைவுகளுக்கு “எழுதுவோம்” தளம் பொறுப்பேற்காது.

***

Keywords: Dinamalar, Dhinamalar, Dinmalar short story competition, Dinamalar shortstory competition, Dinamalar short story prize, Dinamalar shortstory prize, Prizes, Prize, Short Stories, Shortstories, Short Story, Short Story, சிறுகதை, சிறுகதைகள், சிறு கதை, சிறு கதைகள், பரிசு, பரிசுப் போட்டி, பரிசுப்போட்டி

சிறந்த சிறுகதைக்கு ரூ 2.5 லட்சத்துக்குமேல் பரிசு வழங்கும் காமன்வெல்த் சிறுகதைப் பரிசு 2022

காமன்வெல்த் சிறுகதைப் பரிசு 2022 அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் எழுதப்பட்ட, இதுவரை எங்கும் வெளிவராத உங்களுடைய சிறுகதைகளை (2000 முதல் 5000 சொற்கள்) இந்தப் போட்டிக்கு அனுப்பலாம், ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட கதைகளையும் அனுப்பலாம். ஐந்து வெவ்வேறு காமன்வெல்த் பகுதிகளிலிருந்து ஐந்து கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு £2500 (சுமார் ரூ 2.5 லட்சம்) பரிசு பெறும். இவற்றுள் சிறந்த ஒரு கதைக்கு £5000 (சுமார் ரூ 5 லட்சம்) வழங்கப்படும்.

பரிசுத் தொகை ஒருபுறமிருக்க, காமன்வெல்த் சிறுகதைப் பரிசு என்பது உங்களுக்கு மிகப் பெரிய பெருமையைக் கொண்டுவரும். பல நாடுகளைச் சேர்ந்த வாசகர்கள் உங்கள் கதையைப் படிப்பதற்கான வாய்ப்பை இது உருவாக்கும்.

இந்தப் போட்டியில் பங்கு பெற விரும்புகிறவர்கள் இங்கு க்ளிக் செய்து உங்கள் கதைகளை அனுப்புங்கள். நவம்பர் 30ம் தேதிக்குள் உங்கள் கதைகளை அனுப்பவேண்டும். வெற்றிக்கு வாழ்த்துகள்.

பொறுப்பு துறப்பு: எங்களுக்குக் கிடைத்த போட்டி அறிவிப்பை உங்கள் வசதிக்காக இங்கு வெளியிட்டுள்ளோம். இதுபற்றிய கூடுதல் தகவல்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள இணையத் தள முகவரியை அணுகுங்கள். இது தொடர்பான உங்கள் நடவடிக்கைகளுக்கு, அவற்றின் விளைவுகளுக்கு “எழுதுவோம்” தளம் பொறுப்பேற்காது.

***

Keywords: Commonwealth, Common Wealth, Commonwealth short story competition, Commonwealth shortstory competition, Commonwealth short story prize, Commonwealth shortstory prize, Prizes, Prize, Awards, Award