இளம் எழுத்தாளர்களுக்குத் தமிழக அரசு வழங்கும் “கவிமணி விருது”

நீங்கள் 18 வயதுக்கு உட்பட்ட எழுத்தாளரா? அல்லது, உங்கள் வீட்டில் அப்படி ஓர் எழுத்தாளர் உள்ளாரா? ஆம் எனில், தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை வழங்கும் “கவிமணி விருது”க்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆம், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எழுத்து ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் 3 சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து ரூ 25,000 பணப்பரிசு, சான்றிதழ், கேடயம் ஆகியவை வழங்கப்படும் என்று பள்ளி கவ்லித்துறை அறிவித்துள்ளது.

சிறுவயதில் எழுதத் தொடங்குவது ஒரு நல்ல பழக்கம். இந்த விருது அறிவிப்பு பல சிறந்த எழுத்தாளர்களை உருவாக்கும் என்று நம்புவோம். தமிழக அரசுக்கு “எழுதுவோம்” குழுவின் சார்பாக வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். விருது பெறப்போகும் குழந்தை எழுத்தாளர்களுக்கு நல்வாழ்த்துகள்.

இந்த விருதுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் குழந்தை எழுத்தாளர்கள் இங்கு க்ளிக் செய்யுங்கள்.

***

Keywords: Awards, Award, Prizes, Prize, Rewards, Reward, Young Author, Young Authors, Young Writer, Young Writers, Tamil Nadu, Tamilnadu, Tamil Nadu Government, தமிழக அரசு, தமிழ் நாடு அரசு, தமிழ்நாடு அரசு, தமிழக அரசாங்கம், தமிழ் நாடு அரசாங்கம், தமிழ்நாடு அரசாங்கம், விருதுகள், விருது, பரிசுகள், பரிசு, இளம் எழுத்தாளர், குழந்தை எழுத்தாளர், இளம் எழுத்தாளர்கள், குழந்தை எழுத்தாளர்கள்

வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார் எழுத்தாளர் அ. மார்க்ஸ்

ஜீரோ டிகிரி பப்ளிஷிங், தமிழரசி அறக்கட்டளை வழங்கும் 2021ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை எழுத்தாளர், பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்கள் பெறுகிறார். அவருக்கு நம்முடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

அ. மார்க்ஸ் அவர்களுடைய நூல்களை இங்கு படிக்கலாம்.

அ. மார்க்ஸ் அவர்களுடைய ஃபேஸ்புக் பக்கம் இங்கு உள்ளது.

***

Keywords: Awards, Award, A. Marx, அ. மார்க்ஸ்

இலக்கிய நோபல் பரிசு பெறுகிறார் அப்துல்ரஜாக் குர்னா

இந்த ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு தான்சானியாவைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல்ரஜாக் குர்னா அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. உலகின் மிக உயர்ந்த இலக்கிய விருதை வெல்லும் அவருக்கு நம் மனமார்ந்த வாழ்த்துகள்.

அப்துல்ரஜாக் குர்னா அவர்களுடைய நூல்களை இங்கு காணலாம்.

நோபல் பரிசு வென்ற பல எழுத்தாளர்களுடைய கதைகளை இந்த நூலில் படிக்கலாம்.

***

Keywords: Nobel, Nobel Prize, Nobel Winner, Nobel Laureate, Nobel 2021, Nobel Prizes 2021, Nobel Prize 2021, Nobel Prize for Literature, Nobel Prize for Literature 2021, Abdulrazak Gurnah

செம்மொழித் தமிழ் விருதுகளைப் பெறும் தமிழ் அறிஞர்கள்

தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்காற்றிய அறிஞர்களுக்கு வழங்கப்படும் ‘செம்மொழித் தமிழ் விருதுகள்’ அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதைப் பெறும் 10 அறிஞர்கள்:

 • முனைவர் வீ. எஸ். ராஜம்
 • பேராசிரியர் பொன். கோதண்டராமன்
 • பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி
 • பேராசிரியர் ப. மருதநாயகம்
 • பேராசிரியர் கு. மோகனராசு
 • பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
 • பேராசிரியர் கா. ராஜன்
 • பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ்
 • கவிஞர் ஈரோடு தமிழன்பன்
 • பேராசிரியர் கு. சிவமணி

விருது பெறும் அறிஞர்களுக்கு “எழுதுவோம்” குழுவின் மனமார்ந்த வாழ்த்துகள்.

***

Keywords: Awards, Award, Tamil, Thamizh, Classical Language, Classic Tamil

பெருமைக்குரிய சாகித்ய அகாதெமி ஃபெல்லோஷிப் பெறுகிறார் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி

இந்திய அரசின் சாகித்ய அகாதெமி அமைப்பு வழங்கும் பெருமையான ‘சாகித்ய அகாதெமி ஃபெல்லோஷிப்’ அங்கீகாரம் சிறந்த தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்குமுன் இந்த மதிப்பைப் பெற்ற இன்னொரு தமிழ் எழுத்தாளர், ஜெயகாந்தன்.

இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்கு “எழுதுவோம்” குழுவின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்திரா பார்த்தசாரதி அவர்களுடைய நூல்களைப் படிக்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

ட்விட்டரில் இந்திரா பார்த்தசாரதி அவர்களைப் பின்தொடர, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

தொடர்புடைய செய்தி: சாகித்ய அகாதெமி பால புரஸ்கார் விருது பெறுகிறார் யெஸ். பாலபாரதி

***

Keywords: Sahitya Academi, Sahitya Akademi, Sahithya Academi, Sahithya Akademi, Indira Parthasarathy, Indra Parthasarathy, இபா, இந்திரா பார்த்தசாரதி, சாகித்ய அகாதெமி, Fellowship, Fellow, Fellows, Award

எஸ். ஆர். எம். தமிழ்ப் பேராய விருதுகளைப் பெறும் எழுத்தாளர்கள், அறிஞர்கள்

சென்னை எஸ். ஆர். எம். கல்வி நிறுவனத்தின் தமிழ்ப் பேராயம் ஒவ்வோர் ஆண்டும் பல தலைப்புகளில் 12 இலக்கிய விருதுகளை வழங்கிவருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான எஸ். ஆர். எம். தமிழ்ப் பேராய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ 20 லட்சம் ரொக்கப் பரிசு கொண்ட இந்த விருதுகளைப் பெறும் எழுத்தாளர்கள், அறிஞர்களுடைய பட்டியலை இங்கு காணலாம்:

 • அ. வெண்ணிலா (புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது)
 • முத்து நாகு (புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது)
 • கடவூர் மணிமாறன் (பாரதியார் கவிதை விருது)
 • வெற்றிச் செல்வன் (அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது)
 • டாக்டர் பழனி (ஜி. யு. போப் மொழிபெயர்ப்பு விருது)
 • வி. டில்லிபாபு (அப்துல் கலாம் தொழில்நுட்ப விருது)
 • டி. கே. எஸ். கலைவாணன் (முத்துத் தாண்டவர் தமிழிசை விருது)
 • சி. மகேந்திரன் (பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது)
 • சி. மகேஸ்வரன் (முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூக நீதி விருது)
 • மா. பூங்குன்றன் (சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது)
 • மணிமேகலை மன்றம் (தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது)
 • திருபுவனம் ஜி. ஆத்மநாதன் தமிழ் இசைக் குழு (அருணாசலக் கவிராயர் விருது)
 • பா. வளன் அரசு (பாரிவேந்தர் பைந்தமிழ் விருது)

விருது பெறும் எழுத்தாளர்கள், கவிஞர்களை மனமான வாழ்த்துகிறோம்!

***

Keywords: Writers, Writer, Authors, Author, Awards, Award, Prizes, Prize

சிறந்த சிறுகதைக்கு ரூ 2.5 லட்சத்துக்குமேல் பரிசு வழங்கும் காமன்வெல்த் சிறுகதைப் பரிசு 2022

காமன்வெல்த் சிறுகதைப் பரிசு 2022 அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் எழுதப்பட்ட, இதுவரை எங்கும் வெளிவராத உங்களுடைய சிறுகதைகளை (2000 முதல் 5000 சொற்கள்) இந்தப் போட்டிக்கு அனுப்பலாம், ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட கதைகளையும் அனுப்பலாம். ஐந்து வெவ்வேறு காமன்வெல்த் பகுதிகளிலிருந்து ஐந்து கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு £2500 (சுமார் ரூ 2.5 லட்சம்) பரிசு பெறும். இவற்றுள் சிறந்த ஒரு கதைக்கு £5000 (சுமார் ரூ 5 லட்சம்) வழங்கப்படும்.

பரிசுத் தொகை ஒருபுறமிருக்க, காமன்வெல்த் சிறுகதைப் பரிசு என்பது உங்களுக்கு மிகப் பெரிய பெருமையைக் கொண்டுவரும். பல நாடுகளைச் சேர்ந்த வாசகர்கள் உங்கள் கதையைப் படிப்பதற்கான வாய்ப்பை இது உருவாக்கும்.

இந்தப் போட்டியில் பங்கு பெற விரும்புகிறவர்கள் இங்கு க்ளிக் செய்து உங்கள் கதைகளை அனுப்புங்கள். நவம்பர் 30ம் தேதிக்குள் உங்கள் கதைகளை அனுப்பவேண்டும். வெற்றிக்கு வாழ்த்துகள்.

பொறுப்பு துறப்பு: எங்களுக்குக் கிடைத்த போட்டி அறிவிப்பை உங்கள் வசதிக்காக இங்கு வெளியிட்டுள்ளோம். இதுபற்றிய கூடுதல் தகவல்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள இணையத் தள முகவரியை அணுகுங்கள். இது தொடர்பான உங்கள் நடவடிக்கைகளுக்கு, அவற்றின் விளைவுகளுக்கு “எழுதுவோம்” தளம் பொறுப்பேற்காது.

***

Keywords: Commonwealth, Common Wealth, Commonwealth short story competition, Commonwealth shortstory competition, Commonwealth short story prize, Commonwealth shortstory prize, Prizes, Prize, Awards, Award

சிறந்த இதழாளருக்கு ஆண்டுதோறும் “கலைஞர் எழுதுகோல் விருது” & ரூ 5 லட்சம் பரிசுத்தொகை

சமூக மேம்பாடு, விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டுக்காகப் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழாளருக்கு ஆண்டுதோறும் “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்குவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் இதை அறிவித்தார்கள். இந்த விருது பெறும் இதழாளருக்கு ரூ 5 லட்சம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

சிறந்த இதழாளர்களை ஊக்குவிக்கும் இந்த அறிவிப்புக்காகத் தமிழக அரசுக்கு நம் நன்றிகள்.

தகவல்: சென்னை வானொலி

***

Keywords: Journalists, Journalist, Journalism, Awards, Award, Prize, Tamil Nadu Government, Tamilnadu Government, Kalainjar, Karunanidhi, Kalainjar Karunanidhi, கலைஞர், கருணாநிதி, மு. கருணாநிதி, முக, Mu. Karunanidhi

படைப்பாளர்கள், படைப்புகளுக்குத் தமிழ்நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடை வழங்கும் விருதுகள்

தமிழ்நாடு_முற்போக்கு கலை இலக்கிய மேடையின் அறிவிப்பு

1. தஞ்சை பிரகாஷ் நினைவு வளரும் படைப்பாளர் விருது

புதிதாக எழுதியிருக்கின்ற நண்பர்கள் தங்களுடைய புத்தகங்களை அனுப்பலாம். கவிதை, கட்டுரை, சிறுகதைகள் தொகுப்பு, நாவல் போன்றவைகள். மேலும் ஓவியம், நிழற்படம், குறும்படம், ஆவணப்படம் உள்ளிட்டவைகள் ஏற்கப்படும். புத்தகங்கள் மற்றும் படைப்புகள் ஒவ்வொன்றிலும் 2 பிரதிகள் வைத்து அனுப்பவும். புத்தகம் வெளியாகாமல் இருந்திருந்தால் மின்னஞ்சலில் படைப்புகளை அனுப்பலாம். பிற இலக்கிய அமைப்புகளும் இப்பிரிவிற்கு படைப்பாளர்களைப் பரிந்துரைக்கலாம்.

2. அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருது

தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருப்பவர்கள், பிற துறைகளில் இயங்குபவர்கள் தங்களின் கவிதை, கட்டுரை, சிறுகதைத் தொகுப்பு, நாவல், மற்றும் ஓவியம், நிழற்படம், குறும்படம், ஆவணப்படம் உள்ளிட்ட படைப்புகளில் 2 பிரதிகள் அனுப்பவும். பிற இலக்கிய அமைப்புகளும் இப்பிரிவிற்கு படைப்பாளர்களைப் பரிந்துரைக்கலாம்.

3. மூத்த படைப்பாளிகளுக்கான பாரதிதாசன் நினைவு விருது

60 வயதிற்கு மேற்பட்ட படைப்பாளர்கள் தங்களின் படைப்புகளை 2 பிரதிகள் வைத்து அனுப்பவும். பிற இலக்கிய அமைப்புகளும் இப்பிரிவிற்கு படைப்பாளர்களைப் பரிந்துரைக்கலாம்.

4. நூலகச் சிற்பி எஸ். ஆர். ரெங்கநாதன் நினைவு விருது

இந்த விருதிற்கான தகுதியாகக் கருதப்படுவது யாதெனில் – பாதுகாக்கப்பட வேண்டிய படைப்பாக இருத்தல் மற்றும் வெகுமக்களுக்கு கொண்டுசேர்க்க வேண்டிய இன்றியமையாததாக இருத்தல். அவ்வாறான படைப்புகளிருப்பின் பிற இலக்கிய அமைப்புகள் மற்றும் நண்பர்கள் இப்பிரிவிற்கு பரிந்துரைக்கலாம்.

5. மக்கள் கவி இன்குலாப் நினைவு படைப்பாக்க மேன்மை (Creative Excellence Award) விருது

இந்த விருதுக்குப் படைப்புகளை, படைப்பாளர்களை பிற இலக்கிய அமைப்புகள் மற்றும் நண்பர்கள் பரிந்துரைக்கலாம்.

6. கவிக்கோ நினைவு விருது

படைப்பிலக்கியத்தோடு மொழியாக்கத்திலும் இயங்கும் படைப்பாளர்களைப் பிற இலக்கிய அமைப்புகள் மற்றும் நண்பர்கள் பரிந்துரைக்கலாம்.

 • புத்தகங்கள் மற்றும் இதர படைப்புகள் 01.12.2020க்குப் பிந்தையதாகவும், வருகின்ற 30.11.2021 க்கு முந்தையதாகவும் இருக்க வேண்டும்.
 • படைப்புகளை அனுப்ப கடைசித் தேதி: 05.12.2021 ஆகும்.
 • அனுப்ப வேண்டிய முகவரி: Ambika, 3/135/2 opp perumal koil, santhai road ,Koduvai, Tiruppur. 638660 – Mail ID: panmugamedai@gmail.com / 9578764322/9487845666
 • மேல் விவரங்கள் அறிய 9578764322மற்றும் 9487845666 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம்.

இந்தப் போட்டிகளில் பங்கேற்று விருதுகளை வெல்லுங்கள். வாழ்த்துகள்!

பொறுப்பு துறப்பு: எங்களுக்குக் கிடைத்த போட்டி அறிவிப்பை உங்கள் வசதிக்காக இங்கு வெளியிட்டுள்ளோம். இதுபற்றிய கூடுதல் தகவல்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண்களை அணுகுங்கள். இது தொடர்பான உங்கள் நடவடிக்கைகளுக்கு, அவற்றின் விளைவுகளுக்கு “எழுதுவோம்” தளம் பொறுப்பேற்காது.

***

Keywords: Contests, Contest, Competition, Competitions, Writers, Writer, Authors, Author, Creators, Creator

சாகித்ய அகாதெமி பால புரஸ்கார் விருது பெறுகிறார் எழுத்தாளர் யெஸ். பாலபாரதி

பல மொழிகளில் சிறந்த இலக்கியங்களை முன்னிறுத்தும் இந்திய அரசின் சாகித்ய அகாதெமி அமைப்பு பல மொழிகளில் வழங்கும் பால புரஸ்கார் (சிறுவர் இலக்கிய) விருதை இந்த ஆண்டு எழுத்தாளர் யெஸ். பாலபாரதி அவர்கள் பெறுகிறார்கள். ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்‘ என்ற நூலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

யெஸ். பாலபாரதி அவர்களுக்கு “எழுதுவோம்” குழுவின் மனமார்ந்த வாழ்த்துகள்.

இதுபற்றிய அறிவிப்பை இங்கு காணலாம்.

விருது பெறும் ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்‘ நூலை இங்கு க்ளிக் செய்து வாங்கலாம்.

யெஸ். பாலபாரதி அவர்களுடைய பிற நூல்களை இங்கு க்ளிக் செய்து வாங்கலாம்.

யெஸ். பாலபாரதி அவர்களுடைய ஃபேஸ்புக் பக்கம் இங்கு உள்ளது.

***

Keywords: S. Balabharathi, Yes. Balabharathi, Sahitya Academi, Bala Puraskar, Balapuraskar, Children Books, Kids Books, Children Literature, Awards, Award, Announcements, Announcement, News