டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்றுக்கொள்ளலாம்: இலவசப் பயிற்சி வகுப்புகள்

எழுத்தாளர்கள் மார்க்கெட்டர்களாகவும் இருக்கவேண்டிய சூழ்நிலை இது. நம்முடைய புத்தகங்களையும் ஓர் எழுத்தாளர் என்றமுறையில் நம்முடைய Personal Brandஐயும் மக்கள் முன்னிலையில் முன்னிறுத்துவது நம் வெற்றிக்கு உதவுகிறது.

மார்க்கெட்டிங் செய்ய ஆசைதான், ஆனால், அதற்கான நுட்பங்கள் தெரியாது என்று எண்ணும் எழுத்தாளர்கள் அதை இணையத்திலேயே பயிலலாம். எடுத்துக்காட்டாக, புகழ் பெற்ற Ahrefs நிறுவனம் வழங்கும் 17 இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சிகளை இங்கு காணலாம்.

இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் மொத்தமாகப் படிக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக நேரம் உள்ளபோது படியுங்கள், வல்லுனர் ஆகுங்கள், வாழ்த்துகள்!

***

Keywords: Marketing, Marketer, Marketers, Book Marketing, Author Brand, Learn Marketing, Free Courses, Free Course, Free Training, Free Trainings, Digital Marketing, Online Marketing

உங்கள் கதை, கவிதை, கட்டுரைகளை ஒரே நேரத்தில் பல பத்திரிகைகளுக்கு அனுப்பலாமா?

நீங்கள் எழுதியுள்ள கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றைப் பத்திரிகைகளுக்கு அனுப்பும்போது கவனத்தில் வைக்கவேண்டிய ஒரு விஷயம், ஒரே படைப்பை ஒரே நேரத்தில் பல பத்திரிகைகளுக்கு அனுப்பக்கூடாது. அதாவது, ஒரு பத்திரிகை உங்கள் படைப்பைப் பரிசீலித்துக்கொண்டிருக்கும்போது அதை இன்னொரு பத்திரிகைக்கு அனுப்பக்கூடாது.

ஏன் அப்படி?

உங்கள் படைப்பைப் பரிசீலிப்பது என்பது அந்தப் பத்திரிகைக்கு ஒரு நேர முதலீடு. அதைச் செய்து அவர்கள் உங்களுடைய படைப்பைத் தேர்ந்தெடுத்தபிறகு, அது ஏற்கெனவே இன்னொரு பத்திரிகையில் வெளியாகிவிட்டது என்று தெரிந்தால், அவர்களுடைய நேர முதலீடு வீணாகிவிடுகிறது.

நீங்கள் இப்படி ஒரே நேரத்தில் உங்கள் கதை, கவிதை, கட்டுரையைப் பலருக்கு அனுப்பினால், சில நேரங்களில் இரண்டு பத்திரிகைகள் ஒரே நேரத்தில் உங்கள் கதை, கவிதை, கட்டுரையைத் தேர்ந்தெடுத்துப் பிரசுரித்துவிடக்கூடும், அது உங்களுக்கு அவமானமாகிவிடும், வாசகர்கள் உங்களைத் தவறாக நினைக்கக்கூடும்.

அதனால், ஒரு பத்திரிகைக்குப் படைப்பை அனுப்பியபின், ஒரு குறிப்பிட்ட நேரம்வரை காத்திருக்கலாம். அந்த நேரத்துக்குள் உங்கள் படைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சி, தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று திரும்பி வந்தாலும் பரவாயில்லை, அதைத் தயக்கமில்லாமல் இன்னொரு பத்திரிகைக்கு அனுப்பிவிடலாம்.

ஒருவேளை, அந்தக் குறிப்பிட்ட நேரம்வரையில் உங்களுக்கு அந்தப் பத்திரிகையிலிருந்து எந்தப் பதிலும் வராவிட்டால், அது தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று நீங்கள் ஊகித்துக்கொள்ளலாம், அப்போது நீங்கள் அதை இன்னொரு பத்திரிகைக்கு அனுப்பலாம். அப்படிச் செய்யும்போது முதல் பத்திரிகைக்கு ஒரு வரி மின்னஞ்சலோ கடிதமோ எழுதித் தெரிவித்துவிட்டால் இன்னும் நல்லது.

சரி, எவ்வளவு நாள் காத்திருப்பது?

இது ஒவ்வொரு பத்திரிகைக்கும் மாறும். நாளிதழ்கள், வார இதழ்களுக்குச் சுமார் ஒரு மாதம் காத்திருக்கலாம், மாத இதழ்களுக்குச் சுமார் மூன்று மாதங்கள் காத்திருக்கலாம், அதன்பிறகு, அதை வேறு பத்திரிகைக்கு அனுப்புவதுபற்றிச் சிந்திக்கலாம்.

இந்தப் பரிந்துரை நாவல்கள், முழு நூல்களைப் பதிப்பகங்களுக்கு அனுப்புவதற்கும் பொருந்தும், போட்டிகளுக்கு அனுப்பும் கதை, கவிதை, கட்டுரைகளுக்கும் பொருந்தும். போட்டி முடிவு வெளியாகும்வரை அவற்றை வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பாமல் இருப்பது நல்லது. பல போட்டி அறிவிப்புகளில் இதை ஒரு விதிமுறையாகவே குறிப்பிட்டிருப்பார்கள்.

***

Keywords: Articles, Article, Stories, Story, Short Stories, Short Story, Shortstories, Shortstory, Submissions, Submission, Selection, Rejection, Rejection Letter, Parallel Submission, Concurrent Submission, Magazine, Magazines

உங்கள் புத்தகத்தை நன்கு மார்க்கெட்டிங் செய்து விற்பனை செய்வது எப்படி: கற்றுத்தருகிறார் எழுத்தாளர் நிக் ஸ்டீஃபன்சன்

புத்தக எழுத்தைப்போல் மார்க்கெட்டிங் என்பதும் ஒரு முக்கியமான நுட்பம். இதன்மூலம் உங்கள் நூல் இன்னும் பலருக்கு எளிதில் சென்று சேர்வதற்கான வாய்ப்பு அமையும். இதைச் சரியாகச் செய்தால், எழுத்தாளர்களுக்கான மாத வருமான வழி ஒன்று தானாக உருவாகிவிடும்.

ஆனால், பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இந்த மார்க்கெட்டிங் நுட்பங்கள் தெரிந்திருப்பதில்லை. இது கடினம்தான், ஆனால், கற்றுக்கொண்டுவிட்டால் எளிதாகிவிடும்.

அவ்வகையில், புகழ் பெற்ற எழுத்தாளர் நிக் ஸ்டீஃபன்சன் வரும் அக்டோபர் 7 அன்று “$0 to $1K a Month in Book Sales” என்ற தலைப்பில் இலவசப் பயிற்சி வகுப்பு ஒன்றை நடத்துகிறார். ஆர்வமுள்ளவர்கள் அதில் கலந்துகொண்டு கற்றுக்கொள்ளுங்கள், சந்தைப்படுத்தலை வலுவாக்கி உங்கள் விற்பனையைப் பெருக்குங்கள்.

நிக் ஸ்டீஃபன்சன் அவர்கள் நடத்தும் இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

நிக் ஸ்டீஃபன்சன் அவர்களுடைய புத்தகங்களைக் காண, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

***

Keywords: Writing, Writers, Writer, Authors, Author, Publishing, Editing, Courses, Course, Writing Courses, Writing Course, Free Writing Courses, Editing Courses, Publishing Courses, Learn to Write, Writing Workshops, Writing Workshop, Marketing, Promotion, Publicity, Promoting Books, Selling Books, Sales

யூட்யூபில் எழுத்தாளர்கள்: 10 வெற்றி வழிகள்

நீங்கள் யூட்யூபில் இருக்கிறீர்களா?

நான் எழுத்தாளர், எனக்கு யூட்யூபில் என்ன வேலை என்று சிந்திக்கவேண்டாம். எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்பை வாசகர்களிடம் கொண்டுசெல்கிறவர்களாகவும் இருக்கவேண்டிய இந்த மார்க்கெட்டிங் உலகத்தில் யூட்யூப் என்னும் உலகின் மிகச் சிறந்த மார்க்கெட்டிங் கருவியை எழுத்தாளர்களும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும், வீடியோக்களின்மூலம் தங்கள் வாசகர்களை இன்னும் நெருக்கமாக அணுகவேண்டும்.

பெரும்பாலான யூட்யூப் வீடியோக்கள் இலவசம்தான். ஆனால், எழுத்தாளர்கள் சொந்தமாகச் சானல் வைத்து அதற்குச் சந்தாக் கட்டணம் வசூலிக்கிற வாய்ப்பும் இருக்கிறது. ஒருவேளை அந்தச் சாத்தியத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளாவிட்டாலும், இலவச வீடியோக்களே உங்களுக்கு ஒரு நல்ல மார்க்கெட்டிங் கருவியாகச் செயல்படும், வாசகர்களை உங்கள் பக்கத்துக்கு அழைத்துவரும்.

யூட்யூபில் எழுத்தாளர்கள் என்ன செய்யலாம்?

இதற்கு ஏராளமான யோசனைகள் உள்ளன. அதில் முதன்மையான பத்து யோசனைகளை இங்கு பார்ப்போம்:

 1. உங்களுடைய புத்தகங்களைப்பற்றிய சிறு அறிமுகக் குறிப்புகளை நீங்களே பேசி வெளியிடலாம். அல்லது, உங்கள் நூல்களைப் படித்த வாசகர்களைப் பேசவைத்து வெளியிடலாம்.
 2. உங்கள் புத்தகங்களிலிருந்து ஒரு சிறு பகுதியை அல்லது உங்களுடைய கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளை நீங்களே படித்து வெளியிடலாம், ஒலிப் புத்தகம்போல் இது வீடியோ புத்தகம். அதற்குப் பல வாசகர்கள் உள்ளார்கள்
 3. உங்களுடைய பேட்டிகளை வெளியிடலாம்.
 4. எழுதுவதுபற்றிய சிறு குறிப்புகளை நீங்கள் உங்கள் வாசகர்களுக்கு வழங்கலாம்.
 5. நீங்கள் அடுத்து எழுதும் புத்தகத்தைப்பற்றிய அறிமுகத்தைக் கொடுத்து ஆர்வத்தைத் தூண்டலாம்.
 6. உங்களுடைய இயல்பு வாழ்க்கையில் நடக்கிய விஷயங்களை உங்கள் கருத்துகளுடன் பதிவு செய்யலாம்.
 7. நீங்கள் எழுதும் அறையை, அல்லது, எழுதுகிற முறையை வீடியோவாக வழங்கலாம்.
 8. வாசகர்களுடைய கேள்விகளுக்கு வீடியோவில் பதில் அளிக்கலாம்.
 9. உங்கள் புத்தகங்களுடன் தொடர்புடைய கூடுதல் தகவல்களை (Extra Materials) வீடியோ வடிவில் வழங்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு நாவல் இடம்பெறுகிற இடத்திலிருந்து நீங்கள் பேசலாம், அது நாவலைப் படித்தவர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.
 10. நீங்கள் எந்தத் துறைபற்றி எழுதுகிறீர்களோ, அதில் சிறிய, பெரிய பாடங்களை/வகுப்புகளை யூட்யூப் லைவ் ஸ்ட்ரீமிங் வழியாக நடத்தலாம், அவற்றை நிரந்தரப் பதிவுகளாக யூட்யூபில் வைக்கலாம்.

இப்படி இன்னும் பல வழிகள் உள்ளன. எதுவானாலும் தரமாகச் செய்தால் வாசகர்கள் விரும்புவார்கள், உங்களைக் கொண்டாடுவார்கள்.

இப்படி உங்களுக்குத் தெரிந்த, நீங்கள் பயன்படுத்துகிற, விரும்புகிற வீடியோ வழிகளைக் கமென்ட்ஸ் பகுதியில் சொல்லுங்கள். அனைவரும் சேர்ந்து கற்றுக்கொள்வோம்.

***

Keywords: Authors, Author, Writers, Writer, Writing, Author Brand, Writer Brand, Video, Marketing, Video Marketing, Book Marketing, Books, Book, YouTube, Vimeo, YouTube Live Streaming, Live Stream, Live Streaming

நாட்டுக் காய் Vs கலப்பினக் காய்: நீங்கள் எந்த வகை?

இன்று எங்கள் வீட்டில் நாட்டு மக்காச்சோளம் (அதாவது, உள்ளூர் வகை மக்காச்சோளம்) வேகவைத்திருந்தார்கள். நானும் குழந்தைகளும் அதை ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.

எங்கள் குழந்தைகளுக்கு ‘ஸ்வீட் கார்ன்’ எனப்படும் கலப்பின (ஹைப்ரிட்) மக்காச்சோளமும் பிடிக்கும். எனக்கு அது அவ்வளவாகப் பிடிக்காது. அதனால், அவர்களைக் கொஞ்சம் சீண்டினேன், ‘இந்த நாட்டு மக்காச்சோளம் எவ்ளோ நல்லா இருக்கு, இதை விட்டுட்டு ஏன் ஹைப்ரிட் மக்காச்சோளத்தை விரும்பிச் சாப்பிடறீங்க?’

‘இந்த மக்காச்சோளம் நல்லாதான் இருக்கு. ஆனா, இது எப்பவும் இவ்ளோ நல்லா இருக்காது, சில சமயம் சூப்பரா இருக்கும், சில சமயம் சொதப்பிடும், Consistency இல்லை’ என்றாள் என் மூத்த மகள், ‘ஹைப்ரிட் வெரைட்டியில அது ஒரு வசதி, எப்பவும் ஒரேமாதிரி Consistent சுவை இருக்கும். இது நல்லா இருக்குமோ, இருக்காதோன்னு யோசிக்கவேண்டியதில்லை. நம்பிச் சாப்பிடலாம்.’

என் மகள் சொன்ன இந்தக் கருத்து மக்காச்சோளத்தைப்போலவே எழுத்தாளர்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்:

 • சில எழுத்தாளர்கள் நாட்டு மக்காச்சோளத்தைப்போல் அவ்வப்போது மிகச் சிறப்பாக எழுதுகிறார்கள், மற்ற நேரங்களில் சுமாராக எழுதுகிறார்கள். அவர்களுடைய படைப்புகளில் சிறந்தவற்றைத் தேடிப் பிடிப்பது வாசகர்களுக்கு ஒரு வேலை.
 • வேறு சில எழுத்தாளர்கள் கலப்பின மக்காச்சோளத்தைப்போல் எப்போதும் ஒரேமாதிரி எழுதுகிறார்கள். அது சிறப்பா, சிறப்பில்லையா என்பது வேறு விஷயம். அந்த ‘ஒரேமாதிரி எழுதுவது’ என்கிற Consistencyக்கு வாசகர்கள் மதிப்பு அளிக்கிறார்கள். ‘அவர் எழுதின கதையா? நம்பிப் படிக்கலாம்’ என்று நினைக்கிறார்கள், அந்த நம்பிக்கையை அவர் ஒவ்வொருமுறையும் கண்டிப்பாகக் காப்பாற்றிவிடுகிறார். (திரைப்படத்துறையில் ‘Minimum Guarantee இயக்குநர்கள்’ என்று சிலர் உண்டு. அவர்களும் இந்த வகைதான்.)

எழுத்தாளராக நீங்கள் எந்த வகை? அவ்வப்போது மிகச் சிறப்பாக எழுதுகிறவரா? அல்லது எப்போதும் ஒரேமாதிரி தரத்தைப் பராமரிக்கிறவரா?

***

Keywords: Writing, Writers, Writer, Authors, Author, Consistency, Quality, என். சொக்கன், என்சொக்கன், சொக்கன், N. Chokkan, nchokkan, N. Sokkkan

உங்கள் புனைவல்லாத (Nonfiction) புத்தகத்துக்கான தகவல் ஆவணங்களை (References) எப்படித் தொகுத்து அளிப்பது?

புனைவல்லாத (நான்ஃபிக்‌ஷன்) புத்தகங்கள் அடிப்படையில் உண்மைத் தகவல்கள், நிகழ்வுகளைமட்டும் கொண்டிருக்கவேண்டும். இதை உறுதிசெய்வதற்காக நூலின் பிற்பகுதியில் அந்த நூலின் உருவாக்கத்துக்கு உதவிய பிற நூல்கள், ஆவணப் படங்கள், கடிதங்கள், செய்திக் குறிப்புகள், கட்டுரைகள், பேட்டிகள், அறிக்கைகள் போன்றவற்றைச் சான்றுகளாகப் பட்டியலிடும் வழக்கம் உள்ளது.

இந்தப் பட்டியலால் எழுத்தாளருக்கும் நன்மை (அவருடைய நம்பகத்தன்மை கூடுகிறது), வாசகருக்கும் நன்மை (அந்தத் தலைப்பில் கூடுதல் விஷயங்களைப் படிக்கும் வாய்ப்பு அமைகிறது). பல வாசகர்கள் நூலைப் படித்துவிட்டு References பட்டியலைக் கூர்ந்து கவனிப்பார்கள், அதிலிருந்து தாங்கள் படிக்கப்போகும் அடுத்த நூலைத் தேர்ந்தெடுப்பார்கள்.

எழுத்தாளர்கள் தங்கள் Reference பக்கத்தை எப்படி அமைக்கலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன:

 1. நூலின் பிற்பகுதியில் (பின்னிணைப்பாக) அந்த நூல்முழுவதும் இடம்பெற்ற அனைத்து Reference ஆவணங்களையும் தனித்தனித் தலைப்புகளில் (நூல்கள், கடிதங்கள், செய்திகள், கட்டுரைகள்… இப்படி) தொகுத்து வழங்கலாம்
 2. நூலின் பிற்பகுதியில் (பின்னிணைப்பாக) அந்த நூல் முழுவதும் ஒவ்வோர் அத்தியாயத்திலும் இடம்பெற்ற Reference ஆவணங்களை அந்தந்த அத்தியாயத் தலைப்பின்கீழ் தொகுத்து வழஙகலாம் (அத்தியாயம் 1 References, அத்தியாயம் 2 References… இப்படி)
 3. இதையே ஒவ்வோர் அத்தியாயத்தின் நிறைவிலும் செய்யலாம் (அத்தியாயம் 1, அதற்கான References, அதன்பிறகு அத்தியாயம் 2, அதற்கான References… இப்படி)
 4. அத்தியாயத்துக்குள் அந்தந்த வரியின்கீழ் அடிக்குறிப்பாக (Footnote) அதற்கான சான்றை வழங்கலாம். இது ஒரு மிகச் சிறந்த உத்தி; ஆனால், மிகுந்த நேரம் எடுக்கும், அதற்கு நீங்கள் தயாராக இருக்கவேண்டும்

வழி எதுவானாலும் சரி, சான்றுகளின் பட்டியலை நீங்கள் கண்டிப்பாக வழங்கவேண்டும்; அதை உங்கள் வாசகர் எதிர்பார்க்கிறார், அது உங்கள் கடமையும்கூட. அதனால், உங்கள் நூல் ஆய்வின்போது நீங்கள் பயன்படுத்தும் அத்தனை ஆவணங்களையும் முறையாகக் குறித்துவையுங்கள், உங்கள் நூலில் அவற்றைச் சரியாகத் தொகுத்து வழங்குங்கள்.

***

நான்ஃபிக்‌ஷன் நூல்களை எழுத விரும்புகிறீர்களா? அந்தக் கலையை முறையாகக் கற்றுத்தரும் ஒரு பயிற்சி வகுப்பு இங்கு உள்ளது.

***

Keywords: Nonfiction, Non Fiction, References, Reference, Reference List, References List, Proof, List of References, Appendix

எழுதக் கற்றுத்தரும் 19 இலவசப் பயிற்சி வகுப்புகள்

எழுத்து என்பது கற்றுத்தந்து வருமா என்கிற கேள்வி எல்லாருக்கும் உண்டு. ஆனால், எல்லாத் துறைகளையும்போல் எழுத்திலும் கற்றுக்கொள்ளவேண்டிய நுட்பங்கள் பல இருக்கின்றன. சரியான ஆசிரியரிடம் அவற்றைக் கற்றுக்கொண்டால் முன்பைவிடச் சிறப்பாக எழுதலாம்.

அவ்வகையில், Reedsy Learning என்ற நிறுவனம் வழங்கும் 19 எழுத்துப் பயிற்சிகளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். காட்சிகளை அமைப்பது, சஸ்பென்ஸ் நாவல் எழுதுவது, காதல் காட்சிகளை உருவாக்குவது, இளைஞர்களுக்கான எழுத்து, இன்னும் பல தலைப்புகளில் இங்கு பயிற்சி வகுப்புகள் உள்ளன. இவை அனைத்தும் ஆங்கிலத்தில் அமைந்துள்ளன, மின்னஞ்சல்மூலம் 10 நாட்களில் கொஞ்சங்கொஞ்சமாக வழங்கப்படுகின்றன, ஓய்வு நேரத்தில் கற்றுக்கொள்ளலாம், அதுவும் இலவசமாக.

ஆர்வம் உள்ளவர்கள் இங்கு க்ளிக் செய்து இந்த வகுப்புகளில் இணையலாம்.

எழுத்துடன் தொடர்புடைய வடிவமைப்பு, எடிட்டிங், மார்க்கெட்டிங் போன்ற தலைப்புகளிலும் Reedsy Learning வகுப்புகளை வழங்குகிறது. இவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் இங்கு க்ளிக் செய்யுங்கள்.

எழுதக் கற்றுத்தரும் மற்ற சில பயிற்சி வகுப்புகள், உதவிக் குறிப்புகள்:

***

Keywords: Writing, Writers, Writer, Authors, Author, Publishing, Editing, Courses, Course, Writing Courses, Writing Course, Free Writing Courses, Editing Courses, Publishing Courses, Learn to Write, Writing Workshops, Writing Workshop

சிறந்த சிறுகதைக்கு ரூ 2.5 லட்சத்துக்குமேல் பரிசு வழங்கும் காமன்வெல்த் சிறுகதைப் பரிசு 2022

காமன்வெல்த் சிறுகதைப் பரிசு 2022 அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் எழுதப்பட்ட, இதுவரை எங்கும் வெளிவராத உங்களுடைய சிறுகதைகளை (2000 முதல் 5000 சொற்கள்) இந்தப் போட்டிக்கு அனுப்பலாம், ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட கதைகளையும் அனுப்பலாம். ஐந்து வெவ்வேறு காமன்வெல்த் பகுதிகளிலிருந்து ஐந்து கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு £2500 (சுமார் ரூ 2.5 லட்சம்) பரிசு பெறும். இவற்றுள் சிறந்த ஒரு கதைக்கு £5000 (சுமார் ரூ 5 லட்சம்) வழங்கப்படும்.

பரிசுத் தொகை ஒருபுறமிருக்க, காமன்வெல்த் சிறுகதைப் பரிசு என்பது உங்களுக்கு மிகப் பெரிய பெருமையைக் கொண்டுவரும். பல நாடுகளைச் சேர்ந்த வாசகர்கள் உங்கள் கதையைப் படிப்பதற்கான வாய்ப்பை இது உருவாக்கும்.

இந்தப் போட்டியில் பங்கு பெற விரும்புகிறவர்கள் இங்கு க்ளிக் செய்து உங்கள் கதைகளை அனுப்புங்கள். நவம்பர் 30ம் தேதிக்குள் உங்கள் கதைகளை அனுப்பவேண்டும். வெற்றிக்கு வாழ்த்துகள்.

பொறுப்பு துறப்பு: எங்களுக்குக் கிடைத்த போட்டி அறிவிப்பை உங்கள் வசதிக்காக இங்கு வெளியிட்டுள்ளோம். இதுபற்றிய கூடுதல் தகவல்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள இணையத் தள முகவரியை அணுகுங்கள். இது தொடர்பான உங்கள் நடவடிக்கைகளுக்கு, அவற்றின் விளைவுகளுக்கு “எழுதுவோம்” தளம் பொறுப்பேற்காது.

***

Keywords: Commonwealth, Common Wealth, Commonwealth short story competition, Commonwealth shortstory competition, Commonwealth short story prize, Commonwealth shortstory prize, Prizes, Prize, Awards, Award

உங்கள் எழுத்தாளர் இணையத் தளத்தை மேம்படுத்த உதவும் இலவசச் சேவை

எழுத்தாளர்கள் தங்களைப்பற்றிய அறிமுகத்தை, தங்களுடைய படைப்புகளை இணையத்தில் வைப்பது அவசியம், அது அவர்களுடைய Author Brand மேம்பாட்டுக்கு உதவும், வாசகர்கள், பதிப்பாளர்கள், மற்றவர்களை எளிதில் சென்று சேர உதவும். இதுபற்றி ஏற்கெனவே நம்முடைய தளத்தில் எழுதியிருந்தோம், அந்தக் கட்டுரையின் இணைப்பை இங்கு காணலாம்.

ஆனால், எல்லா இணையத் தளங்களும் எளிதில் வாசகர்களை, பிறரைச் சென்றடைந்துவிடுவதில்லை. அதற்கென்று சில நுணுக்கங்கள் உள்ளன, அவற்றைக் கற்றுக்கொண்டு பின்பற்றினால்தால் எழுத்தாளர்கள் தங்கள் தளங்களைப் புகழ் பெறச் செய்ய இயலும்.

இப்போது, Conversion Crimes என்ற நிறுவனம் உங்களுடைய தளத்தை இலவசமாக ஆராய்ந்து தன்னுடைய விமர்சனத்தைத் தர முன்வருகிறது. இவர்கள் உங்கள் தளத்தைப் பார்த்து அதை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம் என்பதற்கான வல்லுனர் உதவிக் குறிப்புகளை (Expert Tips) வழங்குகிறார்கள். இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொண்டு உங்கள் எழுத்தாளர் தளத்தை இன்னும் நன்றாக ஆக்குங்கள். அதற்கு நீங்கள் இங்கு க்ளிக் செய்யவேண்டும்.

பின்குறிப்பு: இந்தச் சேவை தற்போது ஆங்கிலத் தளங்களுக்குதான் வழங்கப்படுகிறது; ஆனால், அவர்கள் வடிவமைப்பு சார்ந்த ஆலோசனைகளைதான் அளிக்கிறார்கள் என்பதால், மொழி ஒரு தடையாக இருக்காது, தமிழ் எழுத்தாளர்களும் விண்ணப்பம் செய்யலாம் என்றுதான் தோன்றுகிறது, முயன்று பாருங்கள்.

***

Keywords: Websites, Web sites, Website, Web site, Website review, Website Analysis, Website Report, Usability, Free, Free Service, Site Review

Twitterன் புதிய Super Follows வசதியை எழுத்தாளர்கள் எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம்?

280 எழுத்துகளில் சிறு குறிப்புகளை எழுத வழிவகை செய்கிற புகழ் பெற்ற Twitter இணையத் தளம் இப்போது “Super Follows” என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதுபற்றி எழுத்தாளர் என். சொக்கன் எழுதியிருக்கும் குறிப்பு:

ட்விட்டரில் “Super Follows” என்ற புதிய வசதி வந்திருக்கிறது. அதாவது, மாதச் சந்தா செலுத்திச் சில கூடுதல் விஷயங்களைப் படிக்கும் வசதி.

எடுத்துக்காட்டாக, நீங்கள் ட்விட்டரில் ஒரு கிரிக்கெட் வீரரைப் பின்தொடர்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய பொதுவான ட்வீட்களை எல்லாரும் படிக்கலாம். ஆனால், குறிப்பிட்ட கிரிக்கெட் போட்டிகளைப்பற்றிய அவருடைய தனிப்பட்ட அனுபவங்களைச் சந்தா செலுத்துபவர்கள்மட்டும்தான் படிக்க இயலும். இதற்கு நீங்கள் மாதம் 3/5/10 டாலர் அளவில் செலுத்தவேண்டியிருக்கும்.

இந்த வசதி இப்போது அமெரிக்காவில்மட்டும்தான் கிடைக்கிறது. விரைவில் மற்ற நாடுகளுக்கும் வரும் என்று நினைக்கிறேன். இது வெற்றியடைந்தால் ஃபேஸ்புக்கும் இந்த மாதிரியைப் பின்பற்றக்கூடும்.

இணையத்தில், குறிப்பாகச் சமூக ஊடகங்களில் அனைத்தும் இலவசம் என்ற மனநிலை இருக்கிற சூழலில் இந்தப் “பணம் செலுத்திப் படிக்கும்” Paygate உத்தி எவ்வளவு பயன்படும் என்று எனக்குத் தெரியவில்லை.

ஒருவேளை, இந்த Super Follows வசதி வெற்றியடைந்தால், எழுத்தாளர்கள் இதை நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. 280 எழுத்துகளில் தங்கள் சிந்தனைகள், கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதில் தொடங்கி, Twitter Threads எனப்படும் திரிகளில் சிறுகதை, தொடர்கதைகளைக்கூட வாசகர்களுக்காக எழுதலாம், போதுமான எண்ணிக்கையில் சந்தாதாரர்கள் சேர்ந்தால் இது அவர்களுக்கான ஒரு புதிய பதிப்புக் களத்தை, வருவாய் வாய்ப்பை உருவாக்கித் தரக்கூடும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இதுபற்றிய உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

***

Keywords: Twitter, Tweet, Tweets, Twitter Threads, Follow, Followers, Follower, Super Follows, Paid Content, Free Content