டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்றுக்கொள்ளலாம்: இலவசப் பயிற்சி வகுப்புகள்

எழுத்தாளர்கள் மார்க்கெட்டர்களாகவும் இருக்கவேண்டிய சூழ்நிலை இது. நம்முடைய புத்தகங்களையும் ஓர் எழுத்தாளர் என்றமுறையில் நம்முடைய Personal Brandஐயும் மக்கள் முன்னிலையில் முன்னிறுத்துவது நம் வெற்றிக்கு உதவுகிறது.

மார்க்கெட்டிங் செய்ய ஆசைதான், ஆனால், அதற்கான நுட்பங்கள் தெரியாது என்று எண்ணும் எழுத்தாளர்கள் அதை இணையத்திலேயே பயிலலாம். எடுத்துக்காட்டாக, புகழ் பெற்ற Ahrefs நிறுவனம் வழங்கும் 17 இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சிகளை இங்கு காணலாம்.

இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் மொத்தமாகப் படிக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக நேரம் உள்ளபோது படியுங்கள், வல்லுனர் ஆகுங்கள், வாழ்த்துகள்!

***

Keywords: Marketing, Marketer, Marketers, Book Marketing, Author Brand, Learn Marketing, Free Courses, Free Course, Free Training, Free Trainings, Digital Marketing, Online Marketing

புத்தகம் வளர்கிறது #நகைச்சுவை #BookMemes #AuthorMemes #WriterMemes

Keywords: Books, Book, Publishing, Ebooks, Ebook, Contents, Editing, Importance of Editing, Edit, Editor, Humour, Humor, Fun, Jokes, Memes, Meme, Joke, Author Memes, Author Meme, Writer Memes, Writer Meme, Book Memes, Book Meme, Writing Memes, Writing Meme, Author Life, Writer Life, Chapters, Chapter, First Chapter, Last Chapter, Final Chapter

இளம் எழுத்தாளர்களுக்குத் தமிழக அரசு வழங்கும் “கவிமணி விருது”

நீங்கள் 18 வயதுக்கு உட்பட்ட எழுத்தாளரா? அல்லது, உங்கள் வீட்டில் அப்படி ஓர் எழுத்தாளர் உள்ளாரா? ஆம் எனில், தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை வழங்கும் “கவிமணி விருது”க்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆம், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எழுத்து ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் 3 சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து ரூ 25,000 பணப்பரிசு, சான்றிதழ், கேடயம் ஆகியவை வழங்கப்படும் என்று பள்ளி கவ்லித்துறை அறிவித்துள்ளது.

சிறுவயதில் எழுதத் தொடங்குவது ஒரு நல்ல பழக்கம். இந்த விருது அறிவிப்பு பல சிறந்த எழுத்தாளர்களை உருவாக்கும் என்று நம்புவோம். தமிழக அரசுக்கு “எழுதுவோம்” குழுவின் சார்பாக வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். விருது பெறப்போகும் குழந்தை எழுத்தாளர்களுக்கு நல்வாழ்த்துகள்.

இந்த விருதுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் குழந்தை எழுத்தாளர்கள் இங்கு க்ளிக் செய்யுங்கள்.

***

Keywords: Awards, Award, Prizes, Prize, Rewards, Reward, Young Author, Young Authors, Young Writer, Young Writers, Tamil Nadu, Tamilnadu, Tamil Nadu Government, தமிழக அரசு, தமிழ் நாடு அரசு, தமிழ்நாடு அரசு, தமிழக அரசாங்கம், தமிழ் நாடு அரசாங்கம், தமிழ்நாடு அரசாங்கம், விருதுகள், விருது, பரிசுகள், பரிசு, இளம் எழுத்தாளர், குழந்தை எழுத்தாளர், இளம் எழுத்தாளர்கள், குழந்தை எழுத்தாளர்கள்

Nonfiction Book Proposal எழுதுவது எப்படி?

நான்ஃபிக்‌ஷன், அதாவது, புனைவல்லாத நூல்களைப் பதிப்பகங்களுக்கு அறிமுகப்படுத்தும் Book Proposalகளை எழுதுவது எப்படி? கற்றுத்தருகிறார் Reedsy இணையத் தளத்தின் நிறுவனரான இம்மானுவேல் நடாஃப். ஐந்து எளிய, தெளிவான படிநிலைகளைக் கொண்ட இந்த ஆங்கிலக் கட்டுரையை இங்கு க்ளிக் செய்து படிக்கலாம்.

இவருடைய Reedsy இணையத் தளம் வழங்கும் எழுத்தாளர்களுக்கான 19 இலவசப் பயிற்சி வகுப்புகளைப்பற்றி அறிய, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

***

Keywords: Books, Book Proposals, Nonfiction, Non Fiction, Non-fiction, புனைவல்லாத நூல்கள், புனைவல்லாத நூல், அபுனைவு நூல், அபுனைவு, அபுனைவுகள், புனைவல்லாதவை

தொழில்துறை சார்ந்த எழுத்தைக் கற்றுத்தரும் HBR கையேடு

பிஸினஸ் ரைட்டிங் எனப்படும் தொழில்துறை சார்ந்த எழுத்துக்கு எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. அந்தக் கலையைக் கற்றுத்தரும் கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது புகழ் பெற்ற Harvard Business Review நிறுவனம். தொழில்துறை சார்ந்த எழுத்துகளைக் கற்றுக்கொள்ள விரும்பும் எழுத்தாளர்கள் இங்கு க்ளிக் செய்து “HBR Guide to Better Business Writing” என்ற அந்த நூலை வாங்கிப் படிக்கலாம், தொழில்துறை எழுத்துகளை விரும்பும் வாசகர்களை வலுவானமுறையில் சென்று சேரலாம்.

***

Keywords: Business Writing, Business Writers, Learning, Writing, Writer, Guide, Writing Guide, Writers’ Guide, Harvard Business Review, HBR, Writers Guide, ஹார்வர்ட்

வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார் எழுத்தாளர் அ. மார்க்ஸ்

ஜீரோ டிகிரி பப்ளிஷிங், தமிழரசி அறக்கட்டளை வழங்கும் 2021ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை எழுத்தாளர், பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்கள் பெறுகிறார். அவருக்கு நம்முடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

அ. மார்க்ஸ் அவர்களுடைய நூல்களை இங்கு படிக்கலாம்.

அ. மார்க்ஸ் அவர்களுடைய ஃபேஸ்புக் பக்கம் இங்கு உள்ளது.

***

Keywords: Awards, Award, A. Marx, அ. மார்க்ஸ்

உங்களுடைய சிறந்த கதை, கவிதைகளைப் பிற இந்திய, உலக மொழிகளில் வெளியிட ஒரு நல்ல வாய்ப்பு

உங்களுடைய சிறந்த கதை, கவிதைகளைப் பிற இந்திய, உலக மொழிகளில் வெளியிட ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு. சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உலக மொழிகள், இந்தி, வங்காளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் உங்கள் படைப்பு வெளியாவதற்கான வாய்ப்பாக இது அமைகிறது.

இதில் பங்கேற்க விரும்புகிறவர்கள் தங்களுடைய படைப்புகளை 11worldtamilconf@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும். ஆய்வுக் குழுவினர் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து வெளியிடுவார்கள்.

உடனடியாக உங்கள் படைப்புகளை இந்த முகவரிக்கு அனுப்பிவையுங்கள். பல மொழி வாசகர்கள் உங்கள் படைப்புகளைப் படித்து மகிழ வாழ்த்துகள்.

***

தொடர்புடைய பதிவுகள்:

***

Keywords: Stories, Story, Short Stories, Short Story, Shortstories, Shortstory, Poetry, Poems, Poem, Translation, 11th World Tamil Conference, World Tamil Conference

சிறந்த குறுநாவல்களுக்குப் பரிசு வழங்கும் குவிகம் குறும் புதினம் போட்டி 2022-23

“குவிகம்” இணைய இதழ் குறும் புதினங்கள், அதாவது, குறுநாவல்களுக்கான ஒரு போட்டியை அறிவித்துள்ளது. சிறந்த குறுநாவல்களுக்கு வழங்கப்படும் பரிசுகளின் விவரம்:

முதல் பரிசு: ரூ 5000
இரண்டாம் பரிசு: ரூ 3000
மூன்றாம் பரிசு: ரூ 2000
பிரசுரத்துக்குத் தேர்வாகும் மற்ற குறுநாவல்களுக்கு: ரூ 1000

உங்கள் குறுநாவல்கள் 4000இலிருந்து 8000 சொற்களுக்குள் இருக்கவேண்டும். இதற்குமுன் எங்கும் வெளியாகியிருக்கக்கூடாது. யுனிகோட் எழுத்துருவில் இருக்கவேண்டும்.

குறுநாவல்களை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: kurumpudhinam@gmail.com
குறுநாவல்களை அனுப்பவேண்டிய கடைசி நாள்: 15 டிசம்பர் 2021

அனைவரும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளுங்கள், வெற்றிபெறுங்கள், வாழ்த்துகள்!

***

Keywords: Competition, Competitions, Contest, Contests, Prize, Prizes, Novels, Novel, நாவல், Novelettes, Novelette, Novella, Novellas, குறுநாவல், குறு நாவல், குறும் புதினம், குறும்புதினம்

ஆக்கியோன் என்றால் என்ன?

அன்றைய தமிழ் நூல்கள் சிலவற்றில், அந்த நூலை எழுதியவருடைய பெயர் “ஆக்கியோன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நூலை ஆக்குபவரைத்தான் ஆக்கியோன் என்கிறார்கள். Creator என்று ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் சொல்லுக்கு இணையாக இந்தச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்று ஊகிக்கலாம்.

பின்னாட்களில் இந்தச் சொல் ஆசிரியர், நூலாசிரியர், எழுத்தாளர், படைப்பாளர் என்று பலவிதமாக மாறியிருக்கிறது.

***

Keywords: Creator, Author, Authors, Creators, Writer, Writers, Words, Vocabulary, சொல்வளம், சொல் வளம், நல்ல தமிழ்ச் சொற்கள்

மொழி சார்ந்த பணிகளுக்கு முக்கியத்துவம் தரும் “அருஞ்சொல்” தளம்

புகழ் பெற்ற எழுத்தாளர் சமஸ் தொடங்கியிருக்கும் “அருஞ்சொல்” தளம் செய்திகளின் அடிப்படையில் கருத்துகளை விவாதிக்கும் தளமாகத் தொடங்கப்பட்டிருக்கிறது. அதுபற்றிச் சமஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு விஷயம் நம் கவனத்தை ஈர்க்கிறது:

பல்வேறு தரப்பினருக்கும் மொழி சார்ந்து அயல்பணி முறையில் பிரதியை செப்பனிட்டுத் தரும் ‘அருஞ்சொல் எடிட்’

தமிழில் எடிட்டிங் எனப்படும் மொழிச் செப்பனிடுதலுக்குத் தேவையான முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்பதுதான் உண்மை. அதனால் தமிழில் பிழை மலிந்த எழுத்துகளும் நிறைந்திருக்கின்றன. இந்நிலையில் சமஸ் போன்ற எழுத்தாளர்கள் இதற்கு முக்கியத்துவம் தந்து தனிச் சேவை ஒன்றைத் தொடங்குவது இந்த முக்கியப் பணிக்குப் பெரும் ஆதரவாக இருக்கும், பிழை இல்லாத நல்ல எழுத்துக்கு வரவேற்பைக் கொண்டுவரும்.

ஒவ்வொருவரும் தங்கள் எழுத்தைப் பிழையின்றி எழுத முயல்வதுதான் சரி. அதற்கு வாய்ப்பு அல்லது அதற்கேற்ற திறமை இல்லாதபோது, உரிய திறமையாளர்களுடைய சேவையைப் பயன்படுத்திக்கொண்டு திருத்தி வெளியிடவேண்டும். நம் எழுத்து பிழையின்றி இருப்பதுதான் நமக்குப் பெருமை என்ற உணர்வு வரவேண்டும்.

***

நம் “எழுதுவோம்” தளமும் தேவையுள்ள எழுத்தாளர்களுக்குத் தொழில்முறை எடிட்டிங் சேவையை வழங்குகிறது. உங்கள் நூல்களை பிழையின்றி எடிட்டிங் செய்து தர, எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்: ezhudhuvom@gmail.com

***

தொடர்புடைய நூல்கள்:

***

Keywords: Tamil, Thamizh, Tamizh, Thamil, Ilakkanam, இலக்கணம், பிழை, பிழையின்றி, பிழையின்றி எழுதுதல், பிழை திருத்தல், பிழைத் திருத்தல், பிழை திருத்தம், பிழைத் திருத்தம், பிழைத்திருத்தம், பிழைதிருத்தம், பிழைதிருத்தல், பிழைத்திருத்தல், நல்ல தமிழ், நல்ல தமிழ் எழுதுவோம், எடிட்டிங், எடிட், எடிட்டர், Editing, Editor, Professional Editing, Freelance Editing, Freelance Editor, Freelance Editors, Editors