தமிழ் எழுத்தாளர்களை மாவட்டவாரியாகப் பிரித்து ஒரு சுவையான பட்டியலை வெளியிட்டிருக்கிறது தமிழ் Ton என்ற இணையத் தளம். அந்தப் பட்டியலை இங்கு காணலாம்.
ஆனால், இந்தப் பட்டியலில் உள்ள எல்லா எழுத்தாளர்களுடைய ஊர் அல்லது மாவட்டமும் நமக்கு உடனடியாகத் தெரிந்துவிடுவதில்லை. ஏனெனில், அவர்களுடைய எழுத்தில் அந்தந்த மாவட்டங்கள் முழுமையாகவோ பெருமளவோ இடம்பெறவில்லை. அப்படி இடம்பெறவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. எனினும், அவரவர் வட்டார வழக்கைப் படைப்புகளில் கொண்டுவருகிற மரபும் தமிழில் இருக்கிறது, அந்தச் சுவையையும் வாசகர்கள் ரசிக்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, எழுத்தாளர் புதுமைப்பித்தனுடைய பல படைப்புகளில் அவருடைய மாவட்டமாகிய திருநெல்வேலியின் பேச்சைக் கேட்கலாம். இப்படிப் பல எழுத்தாளர்கள் தங்கள் பகுதியை எழுத்தில் அழகாகப் பதிவுசெய்துள்ளார்கள்.
நீங்கள் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்? உங்கள் எழுத்தில் அந்த மாவட்டத்தின் சுவையைக் கொண்டுவருகிறீர்களா? வட்டார எழுத்துகள் உங்களுக்குப் பிடிக்குமா? நீங்கள் ரசித்த ஒரு வட்டார வழக்குப் படைப்பைக் Commentsல் சொல்லுங்கள்.
***
Keywords: Writers, Writer, Authors, Author, Local Dialect, Speech, Speeches, Tamil, Districts, Tamil Nadu, District