உங்களுடைய எழுத்து வேகம் எவ்வளவு?

நீங்கள் நாள்தோறும் அல்லது ஒரு மணி நேரத்துக்கு எத்தனைச் சொற்கள் அல்லது எத்தனைப் பக்கங்கள் எழுதுகிறீர்கள்?

இது அவ்வளவு முக்கியமா? எண்ணிக்கையைவிடத் தரத்தைத்தானே கவனிக்கவேண்டும்?

உண்மைதான். அதே நேரம், எழுதும் வேகம் என்பதும் பலவிதங்களில் உங்களுடைய வெற்றியைத் தீர்மானிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு ஐம்பதாயிரம் சொல் நாவலை எழுதுவதற்கு உங்களுக்கு ஆறு மாதம் ஆகிறதா ஒரு வருடம் ஆகிறதா என்பதைப் பொறுத்து நீங்கள் எழுதும் நூல்களின் எண்ணிக்கை மாறுமில்லையா?

அதேபோல், விரைவாக எழுதத் தெரிந்தவர்களுக்கு நிறைய எழுத்து வாய்ப்புகள் கிடைக்கும். அவர்களால் பத்திரிகைகளின் வேகத்துக்கு ஏற்ப எழுத இயலும். ‘சரியான நேரத்துல கதையை அல்லது கட்டுரையைக் கொடுத்துடுவார்’ என்று உங்களுக்கு நல்ல பெயர் வரும்.

இதில் இன்னொரு நன்மை, ஒரு நாளைக்கு இத்தனைச் சொற்கள் எழுதவேண்டும் என்பதுபோல் திட்டமிட்டு வேலை செய்வதற்கு இது உதவும். நூல்கள் போன்றவற்றை எழுதும்போது இந்தத் திட்டமிடல் மிக முக்கியமாகிறது.

விரைவாக எழுதுகிறவர்கள் நிறைய எழுதுவார்கள், அதில் பலவும் தரமாகவும் அமைந்துவிடும். ஆக, எழுத்து வேகம் என்பது ஒருவிதத்தில் தரத்துக்கும் வழிவகுக்கிறது.

ஆக, உங்கள் வேகம் எவ்வளவாக இருந்தாலும் சரி, அதை அறிந்துவைத்திருப்பது நல்லது. அதன்பிறகு, அதை மேம்படுத்தவேண்டுமா என்பதைப்பற்றி யோசிக்கலாம்.

அடுத்தமுறை ஏதாவது எழுதும்போது, பக்கத்தில் ஒரு Stopwatchஐ (அல்லது உங்கள் மொபைல் ஃபோனில் உள்ள Stopwatch Applicationஐ) வைத்துக்கொண்டு உங்கள் எழுத்து வேகத்தை அளந்து பாருங்கள். அது உங்களுக்குப் போதுமா, இன்னும் விரைவாக்கவேண்டுமா என்று சிந்தியுங்கள்.

எழுதும் வேகம், தட்டச்சு செய்யும் வேகத்தை விரைவாக்கப் பல வழிகள் உள்ளன. இணையத்தில் அவற்றைப் படித்துப் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள், விரைவாகவும் சிறப்பாகவும் எழுதப் பழகுங்கள். எப்படி ஒரு கிரிக்கெட் வீரருக்கு ஓடும் வேகம், தாவும் வேகம் முக்கியமோ, அதுபோல்தான் எழுத்தாளராகிய உங்களுக்கு எழுதும் வேகம், அதற்குப் பயிற்சி அவசியம்.

***

Keywords: Writing Speed, Speed of Writing, Pace, Fast, Slow, Number of words, Number of words per hour, Number of words per day

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s