ஒவ்வொரு புத்தகத்துக்காகவும் நீங்கள் மிகுந்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறீர்கள், ஏராளமான தகவல்களைத் திரட்டுகிறீர்கள், அவை பல பக்கங்களுக்கு, பல கோப்புகளுக்கு நீளலாம். நீங்கள் அந்தப் புத்தகத்தை எழுதும்போது அவை மிகவும் உதவியாக இருக்கும்.
ஆனால், புத்தகத்தை எழுதி வெளியிட்டபின் அந்தத் தகவல்களை என்ன செய்வது? தூக்கி எறிந்துவிடலாமா?
‘ம்ஹூம், வேண்டாம். அந்தக் குறிப்புகளை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள்’ என்கிறார் பல புகழ் பெற்ற நூல்களின் ஆசிரியரான மாக்ஸ் குந்தர். இதற்கு அவர் சொல்லும் காரணங்கள்:
- அந்தப் புத்தகத்தைப்பற்றிப் பின்னர் யாராவது ஏதாவது கேள்வி கேட்டால், அல்லது, உங்கள்மீது சினம் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், சான்றுகளை எடுத்துக் காண்பிக்க உதவியாக இருக்கும்.
- உங்கள் புத்தகத்தைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்குப் பதில் அளிக்க உதவியாக இருக்கும்.
- அந்தப் புத்தகத்தைப் பின்னாட்களில் நீங்களே மேம்படுத்தி எழுத, அல்லது அது சார்ந்த இன்னொரு நூலை (வேறொரு கோணத்தில்) எழுத இந்தக் குறிப்புகள் மிகவும் உதவும்.
- நீங்கள் இந்தத் தலைப்பில் ஒரு நூல் எழுதியிருப்பதால், பத்திரிகைகள் அதுசார்ந்த சிறு தலைப்புகளில் உங்களிடம் கட்டுரை கேட்கலாம், அப்போது நீங்கள் இந்தக் குறிப்புகளை எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதனால், உங்கள் நூலுக்கான குறிப்புகளை எப்போதும் சேமித்துவையுங்கள். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இது மேலும் எளிதாகிவிட்டது. உங்களுடைய கோப்புகள் இடத்தை அடைக்குமோ என்று கவலைப்படாமல் கூகுள் டிரைவ் அல்லது டிராப்பாக்ஸில் ஏற்றிப் பத்திரமாக வைத்துவிடலாம்.
தொடர்புடைய இணைப்புகள்:
- இந்தக் குறிப்பு Nonfiction புத்தகங்கள் எழுதுவது எப்படி என்பதுபற்றி மாக்ஸ் குந்தர் எழுதிய “Writing and Selling a Nonfiction Book” என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தப் புத்தகம் இப்போது அச்சில் இல்லை.
- மாக்ஸ் குந்தர் எழுதிய மற்ற நூல்களை இங்கு காணலாம்
- Nonfiction எழுதுவதுபற்றிய ஒரு பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள, இங்கு க்ளிக் செய்யுங்கள்
***
Keywords: Nonfiction, Fiction, Nonfiction Books, Nonfiction Book, Fiction Books, Fiction Book, Research, Book Research, Researching, Data, Notes, Note, Note Taking, Files, Storage, Books, Max Gunther