உங்களுடைய புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டுசேர்க்கின்ற முதல் கருவிகளில் ஒன்று, நல்ல அட்டைப்படம். அதைமட்டும் வைத்து யாரும் வாங்குவதில்லை என்றாலும், பல நூல்களில் எதைத் தேர்ந்தெடுக்கலாம் என்று வாசகர்கள் தீர்மானிக்க அதுவும் உதவுகிறது.
நல்ல அட்டைப்படத்தை வடிவமைப்பதற்கு நீங்கள் ஒரு வடிவமைப்பாளருடன் (Designer) பணியாற்றவேண்டியிருக்கும். அல்லது, இதற்கென்று உள்ள இணைய மென்பொருள்களைப் பயன்படுத்தி எளிதில் அட்டைப்படம் வடிவமைக்கலாம்.
அவ்வகையில் இணையத்தில் அறிமுகமாகியுள்ள புதிய தளம், Coverjig. யார் வேண்டுமானாலும் சில க்ளிக்குகளில் உங்கள் புத்தகத்துக்கான அழகான அட்டையை இங்கு வடிவமைத்துவிடலாம். இது உண்மையில் வணிகத் தளம்தான் என்றாலும், இப்போதைக்குத் தங்கள் சேவையை இலவசமாக வழங்குகிறார்கள், பயன்படுத்திப் பாருங்கள்.
ஆனால் ஒன்று, மற்ற பல தளங்களைப்போல் இந்தத் தளம் ஆங்கிலத்தில்தான் வேலை செய்கிறது. தமிழில் அட்டை வடிவமைத்தாலும் பின்னர் Export செய்யும்போது அது வெறும் பெட்டியாகதான் வருகிறது. இந்தப் பிழையை Coverjig குழுவினருக்குச் சொல்லுங்கள், அவர்களுடைய மென்பொருளில் தமிழுக்கும் ஆதரவு வேண்டும் என்று கேளுங்கள். அதற்கு நீங்கள் இங்கு க்ளிக் செய்யவேண்டும்.
Coverjig இணையத் தளத்தைப் பயன்படுத்தி இலவசமாகவும் எளிதாகவும் அட்டை வடிவமைக்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்.
உங்கள் நூல்களின் வடிவமைப்புப் பணிகளுக்கு உதவக்கூடிய இன்னொரு தளத்தைப்பற்றி இங்கு எழுதியுள்ளோம்: உங்கள் நூல்கள், இணையத் தளத்தை அழகுபடுத்த உதவும் Creative Fabrica இணையத் தளம்
***
Keywords: Book Wrapper, Book Cover, Wrappers, Wrapper, Wrapper Design, Cover Design, Designer, Coverjig
1 Comment