சென்னை எஸ். ஆர். எம். கல்வி நிறுவனத்தின் தமிழ்ப் பேராயம் ஒவ்வோர் ஆண்டும் பல தலைப்புகளில் 12 இலக்கிய விருதுகளை வழங்கிவருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான எஸ். ஆர். எம். தமிழ்ப் பேராய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ 20 லட்சம் ரொக்கப் பரிசு கொண்ட இந்த விருதுகளைப் பெறும் எழுத்தாளர்கள், அறிஞர்களுடைய பட்டியலை இங்கு காணலாம்:
- அ. வெண்ணிலா (புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது)
- முத்து நாகு (புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது)
- கடவூர் மணிமாறன் (பாரதியார் கவிதை விருது)
- வெற்றிச் செல்வன் (அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது)
- டாக்டர் பழனி (ஜி. யு. போப் மொழிபெயர்ப்பு விருது)
- வி. டில்லிபாபு (அப்துல் கலாம் தொழில்நுட்ப விருது)
- டி. கே. எஸ். கலைவாணன் (முத்துத் தாண்டவர் தமிழிசை விருது)
- சி. மகேந்திரன் (பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது)
- சி. மகேஸ்வரன் (முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூக நீதி விருது)
- மா. பூங்குன்றன் (சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது)
- மணிமேகலை மன்றம் (தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது)
- திருபுவனம் ஜி. ஆத்மநாதன் தமிழ் இசைக் குழு (அருணாசலக் கவிராயர் விருது)
- பா. வளன் அரசு (பாரிவேந்தர் பைந்தமிழ் விருது)
விருது பெறும் எழுத்தாளர்கள், கவிஞர்களை மனமான வாழ்த்துகிறோம்!
***
Keywords: Writers, Writer, Authors, Author, Awards, Award, Prizes, Prize