பொதுவாக எழுத்தாளர்கள் ஏதோ ஒரு விஷயத்தைப் பிறருக்குக் கற்றுக்கொடுப்பதற்காகதான் எழுதுகிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால், ‘விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்காக எழுதலாம்’ என்று ஒரு புதுமைச் சிந்தனையை முன்வைக்கிறார் எழுத்தாளர் வில்லியம் ஜின்ஸ்ஸர்.
அதாவது, ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள மிகச் சிறந்த வழி, அதைப்பற்றி எழுதுவதுதான். எழுதவேண்டும் என்ற கட்டாயம் வந்தவுடன், அதற்காக நாம் அந்தத் தலைப்பை ஊன்றிப் படிப்போம், நன்கு கற்றுக்கொள்வோம், சிறப்பாக எழுதுவோம், அதைவிட முக்கியமாக, அதை நன்கு தெரிந்துகொண்டிருப்போம். இந்தப் பொருளைத்தான் வில்லியம் ஜின்ஸ்ஸருடைய ‘Writing to Learn‘ என்ற நூல் தலைப்பு உணர்த்துகிறது.
நீங்கள் கற்றுக்கொள்வதற்காக எழுதியிருக்கிறீர்களா? அது உங்கள் கற்றலை மேலும் ஆழமாக்கியதா? அதைப்பற்றிய உங்கள் கருத்துகளை, அனுபவங்களைக் கமென்ட்ஸ் பகுதியில் சொல்லுங்கள்.
வில்லியம் ஜின்ஸ்ஸருடைய ‘Writing to Learn‘ நூலை வாங்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்.
***
Keywords: Writing, Writers, Writer, Authors, Author, Learning, Learn, Teaching, Teach, Explaining, Explain, Detailing, Detail, Details, Writing to Learn, William Zinsser