நிராகரிப்பு என்பது எல்லாருக்கும் வருத்தமான ஒன்றுதான். குறிப்பாக, எழுத்தாளராகிய உங்களுடைய கதையோ கவிதையோ கட்டுரையோ பத்திரிகையிலிருந்து திரும்பி வந்தால் அது மிகுந்த வருத்தத்தை உண்டாக்கும், சோர்வில் தள்ளும், தொடர்ந்து எழுத இயலாதபடி சிரமப்படுத்தும்.
ஆனால், நிராகரிப்பு என்பதும் எழுத்தின் ஒரு பகுதிதான். உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எல்லாரும் இதுபோன்ற நிராகரிப்பைக் கடந்துதான் வந்திருக்கிறார்கள். சிலர் அந்த நிராகரிப்பை ஒரு படிக்கல்லாகப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறியிருக்கிறார்கள்.
ஒருவேளை, உங்கள் படைப்பு நிராகரிக்கப்பட்டால் என்ன செய்யலாம்?
- முதலில் வரும் வருத்தம் வரட்டும். அது இயல்பான மனித உணர்ச்சிதான். அதை அப்படியே விட்டுவிடுங்கள், தடுக்கவேண்டாம்.
- வருத்தம் தீர்ந்தபின், அது ஏன் நிராகரிக்கப்பட்டது என்று யோசிக்கலாம். ஒருவேளை அவர்கள் காரணம் சொல்லியிருந்தால் அதைப் புரிந்துகொள்ள முயலலாம்.
- அந்தக் காரணம் நியாயமாக இருந்தால், அதைச் சரிசெய்ய முயலலாம், நிராகரிப்பு என்பது கற்றுக்கொள்வதற்கான நல்ல வாய்ப்புதான்.
- அந்தக் காரணம் நியாயமாக இல்லாவிட்டால், அதை மறந்துவிடலாம். ஏதோ காரணத்தால் இந்தப் படைப்பு அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவ்வளவுதான். (சில படைப்புகள் சில இதழ்களுக்குப் பொருந்தாது. அதுகூட நிராகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்ம், அது உங்கள் படைப்பின் பிரச்சனை இல்லை.)
- ஒருவேளை, எந்தக் காரணமும் வழங்கப்படவில்லை என்றால், உங்களுக்குத் தெரிந்த சில நண்பர்களிடம் அந்தப் படைப்பைக் கொடுத்துப் படிக்கச் சொல்லலாம், பாராட்டைக் கேட்காமல், ‘இதுல என்ன பிரச்சனைன்னு சொல்லி உதவுங்க’ என்று வெளிப்படையாகக் கேட்கலாம். தேவைப்பட்டால் நுண்ணுணர்வு வாசகர்கள் எனப்படும் Sensitivity Readersஐக்கூடப் பயன்படுத்தலாம்.
- இப்படிப் படித்தவர்கள் சொல்லும் காரணங்களைச் சிந்தித்துப்பார்த்துப் படைப்பில் தேவையான மாற்றங்களைச் செய்யலாம். அந்தப் பிழைகள் மீண்டும் வராதபடி பார்த்துக்கொள்ளலாம்.
- திருத்தப்பட்ட படைப்பை அதே இதழுக்கு அல்லது இன்னோர் இதழுக்கு அனுப்பிவைக்கலாம். வெற்றி நிச்சயம்.
உங்களுடைய நிராகரிப்புகளை நீங்கள் எப்படிச் சந்திக்கிறீர்கள்? எப்படிச் சமாளிக்கிறீர்கள்? உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். அவை எல்லா எழுத்தாளர்களுக்கும் பயன்படும்.
***
Keywords: Rejection, Rejected, Handling Rejection, Handling Rejections, Books, Book, Articles, Article, Stories, Story, Novels, Novel, Short Stories, Short Story, Shortstories, shortstory, Returned, Story Returned, Returned Story, Rejected Story, Story Rejected
1 Comment