உலகின் மிகப் பெரிய தகவல் வளமாகிய விக்கிப்பீடியா நம்மைப்போன்ற பலருடைய பங்களிப்புகளால்தான் வளர்கிறது. அங்கு எல்லாரும் எழுதலாம் என்றாலும், எழுத்தாளர் ஆகவேண்டும் என்ற கனவுடன் உள்ளவர்கள், புதிதாக எழுதக் கற்றுக்கொள்கிறவர்களுக்கு அது ஒரு சிறந்த பயிற்சிக் களம். பல்வேறு தலைப்புகளில் நல்ல கட்டுரைகளை எழுதிக் கற்றுக்கொள்ளலாம், அவை உலகெங்கும் பலருக்குப் பயன்படும் என்கிற மனநிறைவும் உங்களுக்குக் கிடைக்கும்.
நீங்கள் ஒரு புதிய எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர் என்றால், ஓய்வு நேரத்தில் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை எழுதிப் பழகுங்கள், ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்து அளியுங்கள். இப்படிப் பலவிதங்களில் நீங்கள் பங்களிக்கலாம்.
‘ஆனா, இதெல்லாம் எனக்குத் தெரியாதே’ என்று நீங்கள் தயங்கவேண்டியதில்லை. சிறந்த கட்டுரைகளை எழுதுவதற்கான நுட்பங்களை விக்கிப்பீடியாவே உங்களுக்குக் கற்றுத்தருகிறது. அவற்றைப் படிக்க இங்கு க்ளிக் செய்யுங்கள்.
***
Keywords: Wikipedia, Wiki, Writers, Writer, Authors, Author, New Writers, New Writer, New Authors, New Author, Writing Practice, Practice Writing, Tips, Best Practices, Best Practices for Writing, Writing Best Practices