எழுதக் கற்றுக்கொள்வோருக்குப் பயிற்சிகள் உதவுமா? எழுத்தாளர் ஜெயமோகன் விரிவான விளக்கம்

எழுதக் கற்றுக்கொள்கிறவர்களுக்குப் பயிற்சிகள் உதவுமா என்பதுபற்றி எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு விரிவான விளக்கக் கட்டுரையை எழுதியிருக்கிறார். அதிலிருந்து முக்கியமான சில பகுதிகள், பாடங்கள்:

கற்றுக்கொள்ளக் கூடிய எல்லா வழிகளும் பயனுள்ளவையே. அவற்றை நாம் எவ்வளவு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது அது.

எந்த தொழிலிலும் அதன் அடிப்படைகள் எங்கேனும் கற்பிக்கப்படுகின்றன என்றால் ஓடிப்போய் கற்றுக்கொள்வது அவசியம்.

எதையும் முறையாக கற்றுக்கொள்ள நான் தயங்க மாட்டேன்.

இத்தகைய பயிற்சிகள் ஆளுமையை மாற்றுமா? கண்டிப்பாக மாற்றும். நம்பவே முடியாத அளவுக்கு பெரும் மாறுதல்களை மிக எளிய பயிற்சிகள் அளித்துவிடும். எல்லா வயதிலும் அந்த மாற்றம் நிகழும்.

ஒரு நிபுணர் சொல்லித்தந்தால் மிக எளிதாக நாம் நம்மை மாற்றிக்கொள்ள முடியும்.

அக்கல்வி மட்டுமே போதுமா? இல்லை என்பதே என் பதில்.

இன்று உலகம் முழுக்க உரைநடை எழுதுவதற்கும், புனைவு எழுதுவதற்கும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஐரோப்பாவில் அவ்வாறு ஒரு பயிற்சியைப் பெறாமல் எழுதுபவர்கள் மிகக்குறைவு.

அப்பயிற்சி இல்லாமல் எழுத முடியுமா? முடியும். ஆனால் ஓர் எளிய பயிற்சி முறையால் சாதாரணமாக களையக்கூடிய பிழைகள் சிலசமயம் கடைசிவரை நீடிக்கும்.

இந்தவகையான பயிற்சிகளில் அளிக்கப்படுவது ஒரு சராசரி அறிதலைத்தான். அதன்பின் நம் படைப்புத்திறனால் நம் தனித்தன்மையால் அந்த தரச்சராசரியை நாம் கடந்துசெல்லலாம். நமக்குரிய இடத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

ஜெயமோகன் அவர்களுடைய முழுக் கட்டுரையைப் படிக்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

ஜெயமோகன் அவர்களுடைய நூல்களை வாங்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

***

Keywords: Writing, Writers, Writer, Authors, Author, Courses, Course, Writing Courses, Writing Course, Learn to Write, Writing Workshops, Writing Workshop, Jayamohan, Jeyamohan

1 Comment

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s