எழுத்து என்பது கற்றுத்தந்து வருமா என்கிற கேள்வி எல்லாருக்கும் உண்டு. ஆனால், எல்லாத் துறைகளையும்போல் எழுத்திலும் கற்றுக்கொள்ளவேண்டிய நுட்பங்கள் பல இருக்கின்றன. சரியான ஆசிரியரிடம் அவற்றைக் கற்றுக்கொண்டால் முன்பைவிடச் சிறப்பாக எழுதலாம்.
அவ்வகையில், Reedsy Learning என்ற நிறுவனம் வழங்கும் 19 எழுத்துப் பயிற்சிகளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். காட்சிகளை அமைப்பது, சஸ்பென்ஸ் நாவல் எழுதுவது, காதல் காட்சிகளை உருவாக்குவது, இளைஞர்களுக்கான எழுத்து, இன்னும் பல தலைப்புகளில் இங்கு பயிற்சி வகுப்புகள் உள்ளன. இவை அனைத்தும் ஆங்கிலத்தில் அமைந்துள்ளன, மின்னஞ்சல்மூலம் 10 நாட்களில் கொஞ்சங்கொஞ்சமாக வழங்கப்படுகின்றன, ஓய்வு நேரத்தில் கற்றுக்கொள்ளலாம், அதுவும் இலவசமாக.
ஆர்வம் உள்ளவர்கள் இங்கு க்ளிக் செய்து இந்த வகுப்புகளில் இணையலாம்.
எழுத்துடன் தொடர்புடைய வடிவமைப்பு, எடிட்டிங், மார்க்கெட்டிங் போன்ற தலைப்புகளிலும் Reedsy Learning வகுப்புகளை வழங்குகிறது. இவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் இங்கு க்ளிக் செய்யுங்கள்.
எழுதக் கற்றுத்தரும் மற்ற சில பயிற்சி வகுப்புகள், உதவிக் குறிப்புகள்:
- நல்ல சிறுகதை எழுதக் கற்றுத்தரும் Writing இதழின் Masterclass
- என். சொக்கன் Nonfiction பயிற்சி வகுப்பு
- Udemy இணையத் தளத்தில் எழுத்துப் பயிற்சி வகுப்புகள் தள்ளுபடி விலையில்
- எழுத்தாளர் பா. ராகவன் நடத்தும் இலவச எழுத்துப் பயிலகம்
- எழுதக் கற்றுத்தருகிறார் ரஸ்கின் பாண்ட்
***
Keywords: Writing, Writers, Writer, Authors, Author, Publishing, Editing, Courses, Course, Writing Courses, Writing Course, Free Writing Courses, Editing Courses, Publishing Courses, Learn to Write, Writing Workshops, Writing Workshop
2 Comments