சிறந்த எழுத்தாளர்களுடைய படைப்புகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் அரசாங்கம் அவற்றை நாட்டுடைமையாக்கும் வழக்கம் உள்ளது. சமீபத்தில்கூட அவ்வகையில் பல எழுத்தாளர்களுடைய நூல்கள் நாட்டுமையாக்கப்படும் என்று தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தெரிவித்திருந்தார். அந்தச் செய்தியை நாம் இங்கு வெளியிட்டிருந்தோம்.
இவ்வாறு படைப்பாளிகளின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்போது அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். இதைப் பரிவுத்தொகை என்பார்கள். இதை மாற்றி மதிப்புத்தொகை என்று அழைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார் திராவிட இயக்க வரலாறு, தமிழக அரசியல் வரலாறு, பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட பல நூல்களை எழுதிய எழுத்தாளர் ஆர். முத்துக்குமார்.
தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு, பரிவுத்தொகை வழங்கப்படுவது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. மகிழ்ச்சி. பரிவுத்தொகை என்ற சொல்லை மாற்றி, மதிப்புத்தொகை என்று அழைப்பதற்கு அமைச்சர் Thangam Thenarasu முயற்சியெடுத்தால் மகிழ்வேன்.
சிறு சொல் மாற்றம்தான். ஆனால் மதிப்புக்குரிய மாற்றமாக இருக்கும். அரசு இந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று “எழுதுவோம்” குழுவின் சார்பிலும் கேட்டுக்கொள்கிறோம்.
ஆர். முத்துக்குமார் அவர்களுடைய நூல்களை வாங்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்.
***
Keywords: Authors, Writers, Books, Public Domain, நாட்டுடைமை, எழுத்தாளர், எழுத்தாளர்கள், தமிழக அரசு, தமிழக அரசாங்கம், நூல்கள், R Muthukumar, R Muthukumar Books