நாட்டில் நடைபெறும் பல்வேறு விஷயங்களைப் பதிவுசெய்யும் கடமை இதழாளர்களுக்கு உள்ளது. இந்தப் பணியில் அவர்கள் பல சவால்களைச் சந்திக்கலாம்.
எடுத்துக்காட்டாக, ஓர் இதழாளர் ஒரு தலைவருடைய குற்றங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறார் என்றால், அந்தத் தலைவரோ அவருடைய தொண்டர்களோ அவர்மீது சினம் கொள்ளலாம், தவறான வழிமுறைகளில் இறங்கலாம். இதுபோன்ற தாக்குதல்களைச் சமாளிப்பதற்கு இதழாளர்களுக்குச் சட்டப் பாதுகாப்பு தேவை.
இந்தத் தேவையை உணர்ந்துள்ள Internet Freedom Foundation (IFF) அமைப்பு DigitalPatrakarDefenseClinic என்ற பெயரில் இதழாளர்களுக்கான இலவசச் சட்ட உதவிச் சேவை ஒன்றைத் தொடங்கியுள்ளது. சட்ட வல்லுனர்கள் எந்தக் கட்டணமும் இன்றித் தங்கள் சேவையை வழங்கும் இந்த முன்னெடுப்பின் செப்டம்பர் மாத உதவி மையங்கள் 5, 11, 19, 25 தேதிகளில் நடைபெறுகின்றன. இதுபற்றிய முழுத் தகவல்களைக் காண, இங்கு க்ளிக் செய்யுங்கள்.
உங்களுக்குத் தெரிந்த இதழாளர்களுக்கு இந்த உதவி பயன்படும் என்றால், இந்தப் பக்கத்தை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். சமூகத்தின், எழுத்துலகின் முக்கியத் தூண்களில் ஒன்றான இதழியலை வலுவாக்குவோம்.
***
Keywords: Journalists, Journalist, Writer, Writers, Defense, Support, Legal Support, Free, Lawyer, Lawyers, Legal Help, Law, Journalism, Press Freedom