நல்ல நூலை எழுதுவது முதல் படி. அதை எல்லாரிடமும் சரியாகக் கொண்டுசேர்க்கும் மார்க்கெட்டிங் என்பது இரண்டாம் படி. இதுவும் முதல் படியைப்போல முக்கியமானதுதான். இதையும் சரியாகச் செய்தால்தான் நம்முடைய நூல் எல்லாரிடமும் சென்று சேரும்.
எழுத்தாளர்கள், மார்க்கெட்டிங் வல்லுனர்கள் என்போர் இரண்டு தனித்தனிப் பிரிவுகளாக இருந்த காலம் போய்விட்டது. இப்போது எழுத்தாளருக்கும் சிறிது (அல்லது நிறைய) மார்க்கெட்டிங் தெரிந்திருக்கவேண்டும், அவர் அதைக் கிட்டத்தட்ட முழு நேரமாகச் செய்யவேண்டும், அப்போதுதான் அவருடைய நூல்கள் சரியானபடி வெற்றியடையும். இது ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட எல்லா மொழிகளிலும் ஒரு கட்டாயப் பாடமாக உள்ளது.
அவ்விதத்தில், கிண்டில் தளத்தில் உங்களுடைய நூல்களை மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்று விரிவாக விளக்கும் ஒரு நூல், David Gaughran எழுதிய Amazon Decoded. கிண்டில் ஸ்டோர் என்பது என்ன, Sales Rank என்றால் என்ன, Metadata எனப்படும் மீத்தரவு, நம் நூலை எல்லாரும் காணும்படி செய்வது, விநியோக வழிகள், விளம்பர வழிகள், வியூகம் அமைத்தல் என்று அனைத்தையும் விளக்கமாகப் பேசும் இந்த நூலை இங்கு க்ளிக் செய்து வாங்கலாம், மார்க்கெட்டிங் நுட்பங்களைக் கற்றுக்கொண்டு உங்களுடைய மின்னூல்களைப் புகழ் பெறச் செய்வதற்கு அவற்றைப் பயன்படுத்தலாம்.
David Gaughran எழுதிய Amazon Decoded நூலை வாங்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்.
உங்கள் ஈபுக், அதாவது மின்னூலைத் திட்டமிட்டு, பதிப்பித்து, மார்க்கெட்டிங் செய்வதற்கான 20 வழிகளைத் தெரிந்துகொள்ள, இங்கு க்ளிக் செய்யுங்கள்.
***
Keywords: Amazon, Marketing, Kindle, eBook, eBooks, Books, Book, Marketer, Author, Author Marketer, Writer, Authors, Writers, Marketing a Book, Book Marketing