சிறந்த எழுத்தாளர்களுடைய படைப்புகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் அரசாங்கம் அவற்றை நாட்டுடைமையாக்கும் வழக்கம் உள்ளது. அவ்வகையில் சிலம்பொலி சு. செல்லப்பன், தொ. பரமசிவன், இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கர வள்ளிநாயகம் மற்றும் செ. ராசு ஆகியோருடைய நூல்கள் நாட்டுமையாக்கப்படும் என்று தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தெரிவித்துள்ளார்.
நல்ல எழுத்துகளை அனைவருக்கும் பரவச்செய்யும் அரசின் இந்த நடவடிக்கையை வாழ்த்தி வரவேற்போம்.
இதற்குமுன் நாட்டுடைமை ஆன பல எழுத்தாளர்களுடைய நூல்களை நீங்கள் இங்கு க்ளிக் செய்து இலவசமாகப் படிக்கலாம்.
***
Keywords: Authors, Writers, Books, Public Domain, நாட்டுடைமை, எழுத்தாளர், எழுத்தாளர்கள், தமிழக அரசு, தமிழக அரசாங்கம், நூல்கள்
2 Comments