எழுத்தாளர்களுக்கான புதிய தொழில்நுட்பம்: e-ink தட்டச்சுக் கருவி

இப்போதெல்லாம் பெரும்பாலான எழுத்தாளர்கள் கணினியில்தான் எழுதுகிறார்கள். செல்ஃபோனில் எழுதுகிறவர்களும் உண்டு. சிலர் அபூர்வமாகப் பேனா பிடித்துத் தாளில் எழுதுகிறார்கள். ஆனால், இவற்றுக்கு நடுவில் இருந்த தட்டச்சுக் கருவியைக் (டைப்ரைட்டர்) கிட்டத்தட்டக் காண இயலுவதில்லை. ஒருவேளை இருந்தாலும் அது வெறும் அலுவலகக் கருவியாக மாறிவிட்டது.

இந்த நிலையை மாற்றுவதற்காக $600 விலையில் (ரூ 40,000க்குமேல்) ஒரு புதிய தட்டச்சுக் கருவி வந்திருக்கிறது என்கிற செய்தியை நமக்கு அனுப்பியிருக்கிறார் கிரிதரன். இதுபற்றி மேலும் அறிந்துகொள்வதற்கு இங்கு க்ளிக் செய்யுங்கள்.

இங்கு தரப்பட்டிருக்கும் அறிமுகத்தை வைத்துப் பார்க்கும்போது, தொந்தரவில்லாமல் எழுதுவதற்கு இது ஒரு நல்ல கருவி என்றுதான் தோன்றுகிறது. ஆனால், விலைதான் அதிர்ச்சி அளிக்கிறது. அத்துடன், இதில் தமிழ் எழுத வருமா என்றும் தெரியவில்லை. சரியான விலையில் தமிழ் எழுதும் வசதியுடன் ஒரு கருவி வந்தால் முயன்று பார்க்கலாம்.

அதுவரை நமக்கு இது போதும் 🙂

***

Keywords: Writing, Writers, Writing Tools, Pen, Pencil, Paper, Notebook, eink, e-ink, typewriter, mobile phone, Writers Tools, Writers’ Tools

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s