ட்விட்டர் இணையத் தளத்தில் தொடர்ந்து இயங்குகிறவரா நீங்கள்? இல்லை எனில், இன்றே முயன்று பாருங்கள். உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் பலர் ட்விட்டரில் இயங்கிவருகிறார்கள். உங்களுடைய Author Brandக்கு அது முக்கியம்! (ட்விட்டர் நிறுவனத்தைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.)
ஆனால், எழுத்தாளராக நன்கு விரிவாக எழுதிப் பழகிய உங்களுக்கு ட்விட்டரில் ஒரு ட்வீட் (280 எழுத்துகள்) எப்படிப் போதும்?
உண்மையில் ஒரே ட்வீட்டில் நீங்கள் சொல்ல வந்ததைச் சுருக்கமாகச் சொல்லி அசத்துவதும் ஒரு திறமைதான். எனினும், சில நேரங்களில் 280 எழுத்துகளில் அனைத்தையும் சொல்லிவிட இயலுவதில்லை.
பிரச்சனையில்லை. அதுபோன்ற நேரங்களில் வரிசையாகப் பல ட்வீட்களை எழுதி ஒரு திரியை (Thread) உருவாக்கலாம்.
உண்மைதான். ஆனால், ட்விட்டர் இணையத் தளத்தில் இதுபோன்ற திரிகளை உருவாக்குவது மிகக் கடினம். அந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக வந்துள்ள ஒரு புதிய செயலி, Typefully.
இதில் என்னென்ன வசதிகள் உள்ளன?
- தனி அல்லது தொடர் ட்வீட்களை எழுதலாம் (Single Tweets/Series of Tweets)
- ஆங்கிலத்தைப்போலத் தமிழிலும் (அதாவது, தமிழ் ட்வீட்களுக்கும்) இந்தச் செயலி சிறப்பாக இயங்குகிறது
- ட்வீட்களை உடனுக்குடன் பதிவு செய்யலாம், அல்லது, நீங்கள் விரும்பும் நேரத்தில் வரச்செய்யலாம் (Scheduling)
- உங்கள் ட்வீட்களுடைய புள்ளிவிவரங்களை (Metrics) அலசி ஆராயலாம்; மக்கள் கூடுதலாக விரும்பும் வகையில் எழுதிப் புகழ் பெறலாம்.
Typefully செயலியை நீங்கள் இலவசமாகப் பயன்படுத்தலாம். கொஞ்சம் கூடுதல் வசதிகள் தேவைப்பட்டால் சந்தா செலுத்தலாம்.
செயலியைப் பயன்படுத்தவும் இதுபற்றிய அனைத்துத் தகவல்களுக்கும் இங்கு க்ளிக் செய்யுங்கள்.
***
Keywords: Typefully, Typefully.app, Twitter, Tweet, ட்விட்டர், டுவிட்டர், ட்வீட், டுவீட், Twitter Thread, Twitter Threads, Schedule your Tweets, Analyze, Analyse, Metrics