பத்திரிகைகளுக்குப் புதிய கட்டுரைகள் வேண்டும். உங்களிடம் அந்தக் கட்டுரைகள் உள்ளன. ஆனால், அதைப்பற்றி அவர்களுக்குத் தெரிவிப்பது எப்படி? அவர்களை ஈர்த்துக் கட்டுரைகள் எழுதும் வாய்ப்பைப் பெறுவது எப்படி? Pitching என்று சொல்லப்படும் இந்தக் கலையைப்பற்றி The Walrus எடிட்டர் ஜெஸ்ஸிகா ஜான்சன் ட்விட்டரில் விரிவாக எழுதியுள்ளார். அந்த ட்வீட்களை இங்கு சுருக்கமாகத் தொகுத்துள்ளோம். முழுத் தகவல்களுக்கு நீங்கள் அவருடைய ட்வீட்களைப் படிப்பது நல்லது. அதற்கான இணைப்பு இங்கு உள்ளது.
- நீங்கள் யார் என்பதை 2 வரிகளில் சொல்லுங்கள்
- உங்கள் யோசனையை 1 பத்தியில் சொல்லுங்கள்
- இதை எழுத நீங்கள் சரியான நபர் என்பதை 1 பத்தியில் நிரூபியுங்கள்
- கேள்விகள், நாள் கணக்கு போன்றவற்றைச் சொல்லுங்கள்
- தோல்விகளைக் கண்டு அஞ்சாதீர்கள்; மேலும் மேலும் விண்ணப்பங்களை அனுப்புவதன்மூலம்தான் உங்களுக்கு நல்ல எழுத்து வாய்ப்புகள் கிடைக்கும்
உங்களுடைய Pitching அனுபவங்கள், உத்திகளைச் சக எழுத்தாளர்களுடன் கமெண்ட்ஸ் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள். சேர்ந்து கற்றுக்கொள்வோம், பலன் பெறுவோம்.
***
Keywords: Pitch, Pitches, Pitching, Magazines, Magazine, The Walrus, Jessica Johnson, Editor