இந்திய மொழிகளில் எழுதப்படும் புனைவல்லாத (Nonfiction/அபுனைவு/அல்புனைவு) நூல்களை ஆங்கிலத்துக்குக் கொண்டுசெல்வதற்காக மொழிபெயர்ப்பாளர்களுக்கு நல்கை (Grant) ஒன்றை அறிவித்திருக்கிறது The New India அறக்கட்டளை. தமிழ், இந்தி, உருது உள்ளிட்ட பத்து மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கு நூல்களைக் கொண்டுசெல்ல விண்ணப்பங்களை அனுப்பலாம். இதில் மூன்று நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்கை வழங்கப்படும்.
உங்கள் விண்ணப்பம் தேர்ந்தெடுக்கப்பட்டால், உங்கள் மொழியில் 1850முதல் பதிப்பிக்கப்பட்ட நூல்களில் ஒன்றை ஆராய்ந்து, மொழிபெயர்க்கவேண்டும். இதற்கு ரூ 6 லட்சம் உதவித்தொகை, ஆறு மாதத்துக்கான கல்வி உதவித்தொகை உண்டு.
இந்த நல்கைக்கான நூல்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் தமிழ் மொழியின் பிரதிநிதியாக எழுத்தாளர் ஆ. இரா. வேங்கடாசலபதி பங்குபெறுகிறார். மற்ற மொழிகள், வல்லுனர்கள், மேலும் தகவல்களுக்கு, இந்த இணையத் தளத்தைப் பாருங்கள்: https://www.newindiafoundation.org/nif-translation-fellowship
விண்ணப்பம் செய்வதற்கான இணைப்புக்கு இங்கு க்ளிக் செய்யுங்கள்.
பங்கு பெறுங்கள், வெற்றிபெறுங்கள், வாழ்த்துகள்!
பொறுப்பு துறப்பு: எங்களுக்குக் கிடைத்த போட்டி அறிவிப்பை உங்கள் வசதிக்காக இங்கு வெளியிட்டுள்ளோம். இதுபற்றிய கூடுதல் தகவல்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள இணைய முகவரியை அணுகுங்கள். இது தொடர்பான உங்கள் நடவடிக்கைகளுக்கு, அவற்றின் விளைவுகளுக்கு “எழுதுவோம்” தளம் பொறுப்பேற்காது.
Keywords: Nonfiction, Non Fiction, Books, Book, Translation, Tamil, English, Translations, Translator, Translators, Grants, Grant, Competition, Contest, Contests, Competitions, Application, Apply Now
1 Comment