கதை, கவிதை, கட்டுரை எழுதுகிறவர்கள் அதைப் பத்திரிகைகளுக்கு அனுப்புவார்கள். அல்லது, தங்களுடைய சொந்த வலைத் தளத்தில், சமூக ஊடகத் தளங்களில், வாட்ஸாப்பில் பதிவுசெய்வார்கள். அதை ரசிகர்கள் படித்துப் பாராட்டுவார்கள். இதுதான் உலக வழக்கம்.
ஆனால் இப்போது, Etsy Printables என்ற தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்திக் கவிதைகளை நேரடியாக அச்சிடக்கூடிய PDF வடிவில் விற்கிறார்கள். மக்கள் இதைக் காசு கொடுத்து வாங்கி அச்சிட்டு மாட்டிக்கொள்ளலாமாம். 8 வரிக் கவிதைகளெல்லாம் ஏழெட்டு டாலருக்கு விற்கின்றன.
நம்பமுடியவில்லையா? இங்கு க்ளிக் செய்து பாருங்கள்!
ஆனால், இந்தக் கவிதைகளெல்லாம் ஆங்கிலத்தில்தான் உள்ளன. தமிழ்க் கவிஞர்களும் இந்தச் சந்தைக்குள் நுழைந்து பார்க்கவேண்டும். வருவாய்க்கு வருவாயும் கிடைக்கும், அந்தக் கவிதை பல இடங்களில் மாட்டப்பட்டு அதைப் பலர் பார்ப்பதால் ரசிகர்கள் மத்தியில் புகழும் பெறலாம்.
PDF புத்தகங்களால் எழுத்துக்கு ஆபத்து வருகிற நேரத்தில், அதே PDFஆல் எழுத்தாளர்களுக்கு வருவாயும் சாத்தியம்தான்போல.
நகைச்சுவைக்குச் சொல்லவில்லை, உண்மையில் முயலவேண்டிய வழிதான் இது! வெவ்வேறு வகைகளில் எழுத்தாளர்கள் தங்களுடைய வருவாய் வழிகளைத் தேடுகிற வாய்ப்பை இன்றைய தொழில்நுட்பம் வழங்குகிறது, அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
‘ஆனால், எனக்கு இதெல்லாம் தெரியாதே’ என்கிறீர்களா? கவலை வேண்டாம். இணையத்தில் இதைக் கற்றுத்தரும் பல கட்டுரைகள், வீடியோக்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, Etsy இணையத் தளத்தில் இந்த Printablesஐ எப்படி உருவாக்குவது என்று இந்த வீடியோ கற்றுத்தருகிறது.
முயன்று பாருங்கள். இதன்மூலம் உங்கள் கவிதை ஒரு பெருமை மிக்க இடத்தில் மாட்டப்பட்டால் மகிழ்ச்சிதான்!
Keywords: Poets, Poet, Poems, Poetry, Poem, Etsy, Printables, Printable, Printable Poetry, Printable Poem, Printable Poems, Printable Poetries, Learn to create Printables, Printables Business