நாம் அனைவரும் எழுதுவதை அனுபவித்துச் செய்கிறோம். அதனால் கிடைக்கும் மன நிறைவு நமக்குப் போதுமாக இருக்கிறது.
ஆனால், எழுத்தின்மூலம் உடல் நலமும் வரும் என்கிறது புகழ் பெற்ற The New York Times இதழ். அதிலும் குறிப்பாக, எழுத்து நமக்குச் சிறந்த ஆறுதலையும் தேறுதலையும் அளிப்பதாகச் சொல்கிறார்கள், ரத்த அழுத்தம் குறையும், நோயெதிர்ப்பாற்றல் மேம்படும், அழுத்தம் குறையும், பதற்றம், மனச்சோர்வு விலகும், நன்கு தூக்கம் வரும், செயல்திறன், கவனம், தெளிவு மேம்படும் என்று இன்னும் பல நன்மைகளை அடுக்குகிறார்கள்.
இதுபற்றி Harvard Business Review வெளியிட்டுள்ள விரிவான கட்டுரையை இங்கு படிக்கலாம்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எழுத்தின்மூலம் நீங்கள் பெற்ற உடல், மன நலத்தைப்பற்றிக் கமென்ட்ஸில் எழுதுங்கள்.
Keywords: Health, Writing, Benefits, Authors, Writers