நன்கு எழுத விரும்புவோர் முன்னோடிகளைக் கற்கவேண்டும் என்று சொல்வார்கள். அவர்களுடைய கதைகளிலிருந்து பல நுட்பங்களை, வாழ்வியல் அனுபவங்களை, என்ன எழுதலாம் என்பதையெல்லாம் நாம் அறியலாம். அவற்றை அப்படியே பின்பற்றவேண்டியதில்லை, அந்தச் செழுமையின்மீது நம்முடைய பாணியை அமைத்துக்கொள்ளலாம்.
அவ்வகையில், சிறுகதை எழுத விரும்புவோருக்கு ஒரு நல்ல செய்தி: முன்னோடி எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு அவர்களுடைய சிறுகதைகளை ராணிதிலக், ஏ. தனசேகர் தொகுத்துள்ளார்கள். இந்நூலை 880 பக்க அளவில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிடுகிறது. 1943 முதல் 1989வரை கரிச்சான் குஞ்சு எழுதிய நூறு சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெறுகின்றன. இவற்றில் பலவும் இப்போதுதான் முதன்முறையாக நூல் வடிவம் பெறுகின்றன என்பது முக்கியமான செய்தி.
ரூ 890 விலையுள்ள இந்தப் புத்தகத்தைச் செப்டம்பர் 10க்குள் முன்பதிவு செய்தால் ரூ 575க்குப் பெற்றுக்கொள்ளலாம், தபால் செலவும் இலவசம்.
ஆர்வம் உள்ளவர்கள் 9677916696 என்ற எண்ணுக்குக் குறுஞ்செய்தி அல்லது வாட்ஸாப் செய்தி அனுப்புங்கள். அல்லது, subscription@kalachuvadu.com, nagercoil@kalachuvadu.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
காலச்சுவடு பதிப்பகத்தின் நூல்களை இங்கு காணலாம்.
Keywords: Books, Book, Short Stories, Shortstories, Short Story, Shortstory, Stories, Story, Book Release, Advance Booking, Printed Books, Printed Book, Print Books, Print Book, Classic Stories, Complete Works, Collected Works, Collected Stories, Complete Stories