ராபர்ட் ஸ்டீவன்சன் என்று ஒரு பொறியாளர். அவருடைய மகன் தாமஸ் ஸ்டீவன்சன், அவரும் பொறியாளர்தான்.
ஆனால், இந்தத் தாமஸ் பொறியாளர் வேலையோடு நிறுத்தவில்லை. ஓய்வு நேரத்தில் ரகசியமாகச் சில கதைகளை எழுதிக்கொண்டிருந்தார்.
இந்த விஷயம் எப்படியோ ராபர்ட் ஸ்டீவன்சனுக்குத் தெரிந்துவிட்டது, ‘இந்த முட்டாள்தனத்தை நிறுத்திவிட்டு உருப்படுகிற வழியைப் பார்’ என்று தன் மகனை அதட்டினார்.
தாமஸ் ஸ்டீவன்சன் தந்தை சொல் மீறாத பிள்ளை, கதை எழுதுவதை நிறுத்திவிட்டு வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
பின்னர், இந்தத் தாமஸ் ஸ்டீவன்சனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு ராபர்ட் என்று பெயர் சூட்டினார்.
இந்த ராபர்ட்டுக்குத் தாத்தாவின் பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், அவனுக்குப் பொறியியலில் ஆர்வம் இல்லை, கதை எழுதுவதில்தான் ஆர்வம்.
இதைக் கேள்விப்பட்ட தாமஸ் ஸ்டீவன்சன் தன் தந்தையைப்போல் நடந்துகொள்ளவில்லை, மகனைத் தொடர்ந்து எழுத ஊக்குவித்தார், தன்னுடைய சொந்தச் செலவில் அவனுடைய முதல் புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டார்.
அந்த ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சனை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். Treasure Island, Kidnapped, The Strange case of Dr. Jekyll and Mr. Hyde உள்ளிட்ட பல புகழ் பெற்ற நூல்களின் ஆசிரியர் அவர்.
Keywords: Writing, Writers, Authors, Encouragement, Family, Support