தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கிவருகிறது. நீங்கள் 2020ம் ஆண்டில் நூல் எழுதியுள்ளீர்கள் அல்லது வெளியிட்டுள்ளீர்கள் என்றால் இந்தப் பரிசுப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் 33 வகைகளில் பரிசுகள் வழங்கப்படும். ஒவ்வொரு வகையிலும் தேர்வு செய்யப்படும் நூலின் ஆசிரியருக்கு ரூ 30,000, பதிப்பாளருக்கு ரூ 10,000 பரிசு வழங்கப்படும்.
வகைப்பாடுகள்:
1. மரபுக்கவிதை
2. புதுக் கவிதை
3. புதினம் (நாவல்)
4. சிறுகதை
5. நாடகம் (உரைநடை, கவிதை)
6. சிறுவர் இலக்கியம்
7. திறனாய்வு
8. மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம்
9. பிற மொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்
10. நுண்கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்)
11. அகராதி, கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ்
12. பயண இலக்கியம்
13. வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு
14. நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிகவழிகளும், அகழாய்வு
15. கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல்
16. பொறியியல், தொழில் நுட்பவியல்
17 மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல்
18. சட்டவியல், அரசியல்
19. பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்
20. மருந்தியல், உடலியல், நலவியல்
21. தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்)
22. சமயம், ஆன்மீகம், அளவையியல்
23. கல்வியியல், உளவியல்
24. வேளாண்மையியல், கால்நடையியல்
25. சுற்றுப்புறவியல்
26. கணினி இயல்
27. நாட்டுப்புறவியல்
28 வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம்
29. இதழியல், தகவல் தொடர்பு
30. பிற சிறப்பு வெளியீடுகள்
31. விளையாட்டு
32. மகளிர் இலக்கியம்
33. தமிழர் வாழ்வியல்
பரிசுப் போட்டிக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைக் காண்பதற்கு இங்கு க்ளிக் செய்யுங்கள். ஆகஸ்ட் 31க்குள் விண்ணப்பங்கள், நூல் பிரதிகள், போட்டிக் கட்டணம் ஆகியவற்றை அனுப்பவேண்டும்.
தமிழ் வளர்ச்சித் துறையின் இணையத் தளம் இங்கு உள்ளது.
போட்டியில் பங்கு பெறுங்கள், பரிசு பெறுங்கள், வாழ்த்துகள்!
பொறுப்பு துறப்பு: எங்களுக்குக் கிடைத்த போட்டி அறிவிப்பை உங்கள் வசதிக்காக இங்கு வெளியிட்டுள்ளோம். இதுபற்றிய கூடுதல் தகவல்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள இணையத் தளத்தை அணுகுங்கள். இது தொடர்பான உங்கள் நடவடிக்கைகளுக்கு, அவற்றின் விளைவுகளுக்கு “எழுதுவோம்” தளம் பொறுப்பேற்காது.
Keywords: Tamil, Thamizh, Thamil, Books, Book, Tamil Books, Thamizh Books, Contests, Competitions, Contest, Competition, விருது, பரிசு, போட்டி, பரிசுப்போட்டி, பரிசுப் போட்டி, பரிசு போட்டி
எனது சிறுகதைகளை நூலாக்க
வேண்டுகிறேன்.
LikeLike
நன்றி. உங்களுடைய சிறுகதைகளை மின்னூலாக வெளியிடுவதற்கான பயனுள்ள குறிப்புகள் இங்கு உள்ளன: https://ezhudhuvom.com/2021/08/28/20-steps-to-plan-publish-and-market-your-ebook/
LikeLike