நீங்கள் பல சிறுகதைகள் எழுதியிருக்கிறீர்கள். அவற்றைத் தொகுத்து நூலாக்க விரும்புகிறீர்கள். அதை எப்படிச் செய்வது?
இது ஒரு பெரிய விஷயமா? எழுதிய சிறுகதைகளை வரிசையாக அடுக்கிப் புத்தகமாக்கவேண்டியதுதான்!
சரிதான். ஆனால், கொஞ்சம் மெனக்கெட்டால் இன்னும் சுவையான வகையில் உங்கள் கதைகளைத் தொகுக்கலாம். அதன்மூலம் வாசகர்களைக் கவர்ந்திழுக்கலாம். அதற்கான சில எடுத்துக்காட்டுகள், இதோ:
- கதைகள் எழுதப்பட்ட வரிசையில் தொகுப்பது
- கதைகள் பிரசுரமான வரிசையில் தொகுப்பது
- நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், வரலாற்றுக் கதைகள் என்று வகை அடிப்படையில் தொகுப்பது
- கதையின் அளவு அடிப்படையில் தொகுப்பது (சின்னஞ்சிறிய கதைகள், பெரிய கதைகள், குறுநாவல்கள் இப்படி)
- பரிசு பெற்ற கதைகளைமட்டும் தனியாகத் தொகுப்பது
- ஒரு குறிப்பிட்ட ஊரில் நிகழ்கிற கதைகளைத் தொகுப்பது
- ஒரு குறிப்பிட்ட பாத்திரம் இடம்பெறுகிற கதைகளைத் தொகுப்பது
- கதைகளுடன் அவை எழுதப்பட்ட சூழ்நிலையையும் சேர்த்துத் தொகுப்பது
- ஓர் இதழில் வெளியான கதைகளைத் தொகுப்பது
இதுபோல் உங்களுக்குத் தோன்றும் புதுமையான வகைகளைக் கமென்ட்ஸில் எழுதுங்கள்.
Keywords: Shortstories, Short Stories, Short Story, Shortstory, Story, கதை, சிறுகதை, கதைகள், சிறுகதைகள், சிறுகதைத் தொகுப்பு, சிறுகதை தொகுப்பு, சிறுகதைத்தொகுப்பு, சிறுகதைதொகுப்பு, நூல், புத்தகம், கதைத் தொகுதி, கதைத் தொகுப்பு, புத்தகங்கள், நூல்கள்