எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் எழுதிய ‘Tales from my Heart‘ வெளியாகியிருக்கிறது. இங்கு க்ளிக் செய்து அமேசானில் இதை வாங்குபவர்களுக்கு Digitally Signed Copy அனுப்பப்படும் என்கிறார்கள்.
இதுமட்டுமில்லை, இப்போது பல புத்தகங்களின் விவரிப்பில் (Book Description) “Buy Digitally Signed Copy” என்ற வரியைப் பார்க்கமுடிகிறது. வாசகர்களும் அவற்றை விரும்பி வாங்குகிறார்கள்.
அதென்ன Digitally Signed Copy?
பொதுவாகப் புத்தக வெளியீட்டு விழாக்களில் ஆசிரியருடைய ஆட்டோகிராஃபை (கையொப்பத்தை) வாசகர்கள் பெறுவார்கள். ஆன்லைன் உலகில் அது இயலாது என்பதால், ஆசிரியருடைய ஆட்டோகிராஃபை முதல் பக்கத்தில் அச்சிட்டுவிடுகிறார்கள். அதுதான் டிஜிட்டல் ஆட்டோகிராஃப்.
அவ்வளவுதானா என்று நினைக்கவேண்டாம். இதுவும் பயனுள்ள உத்திதான். நாளைக்கு உங்கள் புத்தகங்கள் லட்சக்கணக்கான பிரதிகள் அச்சிடப்படும்போது, அவை அனைத்திலும் நீங்களே கையொப்பமிடுவது சாத்தியம் இல்லை. அந்த நேரத்தில் இந்த நுட்பம் உதவும். உங்கள் வாசகர்களுக்கும் ஆசிரியர் கையொப்பத்துடன் ஒரு புத்தகத்தை வாங்கிய மன நிறைவு கிடைக்கும்.
***
தொடர்புடைய பதிவு: எழுதக் கற்றுத் தருகிறார் ரஸ்கின் பாண்ட்
Keywords: Ruskin Bond, Tales from my Heart, Autograph, Signature, Digital Autograph, Signing, Digitally Signing, Signed Copy, Signed Copies, Digitally Signed Copy, Digitally Signed Copies, Printed Signature, Printed Book, Printed Books, Book Description, Book Descriptions, Blurbs, Marketing, Publicity, Fans, Readers, Reader