நீங்கள் நாவல் எழுதத் தொடங்கியுள்ளீர்களா? பல கதாபாத்திரங்கள், அவர்களுக்கிடையிலான தொடர்புகள், உரையாடல்கள், காட்சிகள், பழைய நினைவுகள் என அனைத்தையும் தொகுத்து எழுதும்போது சிக்கலை உணர்கிறீர்களா?
கவலை வேண்டாம். இன்றைய நவீன தொழில்நுட்பம் இந்தச் சிக்கலை எளிதில் தீர்த்துவிடும். இன்றைக்கு நாவல் எழுத உதவுகிற பல மென்பொருள்கள் இருக்கின்றன. இவற்றின் துணையோடு நாவல் தொடர்பான அனைத்தையும் சரியாகத் தொகுக்கலாம், நீங்கள் எழுதுவதில்மட்டும் கவனம் செலுத்தலாம், மற்ற அனைத்தையும் இந்த மென்பொருள்கள் பார்த்துக்கொள்ளும்.
இந்த மென்பொருள்களில் Bibisco என்ற இலவச மென்பொருளைப்பற்றி இங்கு பார்ப்போம். உங்களுடைய நாவலை ஒரு வீட்டைப்போலக் கட்டுவதற்கு இந்த மென்பொருள் உதவுகிறது. அதாவது, அந்த வீட்டின் ப்ளூப்ரின்ட் வரைபடத்தை நீங்கள் இந்த மென்பொருளில் உருவாக்கலாம். அதன்பிறகு, அந்த ப்ளூப்ரின்டை உண்மையாக்கி உங்கள் மாளிகையை, அதாவது, நாவலைக் கட்டி எழுப்பலாம்.
எடுத்துக்காட்டாக, நாவலை அத்தியாயங்களாக, காட்சிகளாகப் பிரிப்பது, தொந்தரவுகள் இன்றி எழுதுவது, PDF, DOCX உள்ளிட்ட பல வடிவங்களில் அதைச் சேமிப்பது போன்ற பல வசதிகள் இந்த மென்பொருளில் கிடைக்கின்றன. பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் கருத்துகளைக் கமென்ட்ஸ் பகுதியில் சொல்லுங்கள்.
நாவல் எழுதுவதற்கான Bibisco இலவச மென்பொருளை டவுன்லோட் செய்ய, இங்கு க்ளிக் செய்யுங்கள்.