ஒலிம்பிக்ஸ் இறகுபந்துப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற Tai Tzu-Ying அந்த அனுபவத்தைப்பற்றி எழுதியிருக்கிற வரிகள் இவை:
என்னால் மிக உயர்ந்த பரிசைப் (தங்கப் பதக்கம்) பெற இயலவில்லை. அதை எண்ணிச் சிறிது வருத்தம் உண்டு. ஆனால், எல்லாம் எப்போதும் கச்சிதமாக இருந்துவிடுமா என்ன? கொஞ்சம் குறைகள் இருந்தால்தானே அவற்றைச் சரி செய்து அடுத்தமுறை இன்னும் சிறப்பாகச் செயல்படலாம் என்கிற ஊக்கம் வரும்?
நான் இன்னோர் ஒலிம்பிக்ஸில் பங்கேற்பேனா என்று எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது நான் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளேன். இது முழுமையான வெற்றி இல்லைதான். ஆனால், நான் என்னைப் பார்த்துச் சொல்லிக்கொள்வேன்: நீ மிகச் சிறந்தவள்!
நமக்கு வழங்கப்படும் தீர்ப்புகள் கொடுமையாக இருக்கலாம். ஆனால், என்னால் இயன்றவரை நான் முயல்வேன்!
இந்த வரிகள் விளையாட்டு வீரர்களுக்குமட்டுமில்லை, நம்மைப்போன்ற எழுத்தாளர்களுக்கும் பொருந்தும். நம்முடைய படைப்பின் வெற்றி, தோல்வியைத் தாண்டி, விமர்சகர்களுடைய சொற்களைத் தாண்டி, நம்மால் இயன்ற மிகச் சிறந்த எழுத்தை வழங்கினோம் என்பதுதான் மிகப் பெரிய பெருமை, மிகப் பெரிய மதிப்பு!