நல்ல எழுத்தில் மூழ்கித் திளைக்கிறவரா நீங்கள்? ‘எப்படிய்யா இப்படியெல்லாம் எழுதறாங்க?’ என்று வியந்து பாராட்டி மகிழ்கிறவரா? ‘நாமும் இப்படியெல்லாம் எழுதமுடியுமா?’ என்று ஏங்குகிறவரா?
சிறப்பாக எழுதுவது என்பது எளிய விஷயம் இல்லை. அதே நேரம், கடினமான விஷயமும் இல்லை. ஊக்கத்துடனும் விடாமுயற்சியுடன் உழைக்கத் தயாராக இருக்கிறவர்கள் எல்லாருக்கும் வசப்படக்கூடியதுதான். ஆனால் ஒன்று, இதில் குறுக்கு வழிகளுக்கு இடம் இல்லை, பொறுமையாகவும் வாசகர்மீது அக்கறையோடும் கற்றிக்கொண்டால் வெற்றி உறுதியாகும்!
இந்தத் தளம் நல்ல எழுத்துக்கான நுட்பங்களை உங்களுக்குக் கற்றுத்தரும். ஆராய்ச்சி, எழுத்து, எடிட்டிங், மார்க்கெட்டிங், வாசகர்களைச் சென்றடைதல், புதிய நுட்பங்களைப் பயன்படுத்திக்கொள்ளுதல், பெரிய எழுத்தாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுதல், பயிற்சிகள் என்று அனைத்தும் இங்கு கிடைக்கும்.
அதே நேரம், இங்கு எழுதுகிற எவருக்கும் ‘எல்லாம் தெரிந்துகொண்டுவிட்டோம்’ என்ற எண்ணம் கிடையாது. ‘கற்கவேண்டியது இன்னும் நிறைய உண்டு’ என்ற ஆர்வத்துடன் அவர்கள் உங்களுக்குச் சொல்லித்தர, உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள முன்வருகிறார்கள்.
வாருங்கள், சேர்ந்து கற்றுக்கொள்வோம். சிறப்பாக எழுதுவோம்!